பயிற்சியில் சூப்பர் குத்துவிட்ட செரினா வில்லியம்ஸ் - இம்ப்ரஸ் ஆன மைக் டைசன்

புளோரிடா : மெல்போர்னில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அமெரிக்க குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனிடம் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 23 முறை வென்றுள்ள செரினா வில்லியம்சுக்கு பயிற்சி அளித்த மைக் டைசன், அனைத்து காலங்களிலும் டென்னிசில் அவர் சிறந்தவராக விளங்குவதாக புகழ்ந்துள்ளார்.

செரினாவிற்கு பயிற்சி அளித்த மைக் டைசன், அவருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதுடன் அவர் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பன்ச்சிங் பேக்கையும் பிடித்துக் கொண்டார். இந்த வீடியோவை அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

செரினா வில்லியம்சுக்கு பயிற்சி

செரினா வில்லியம்சுக்கு பயிற்சி

அமெரிக்க குத்துச்சண்டை ஜாம்பவானாக போற்றப்படும் மைக் டைசன், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்சுக்கு பயிற்சியளித்த வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது.

உறுதியுடன் களமிறங்கும் செரினா

உறுதியுடன் களமிறங்கும் செரினா

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றனர். அவர் களமிறங்கும் போட்டிகளில் எதிரில் விளையாடுபவர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்குபவர்.

 செரினா வில்லியம்ஸ் பங்கேற்பு

செரினா வில்லியம்ஸ் பங்கேற்பு

மெல்போர்னில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் செரினா வில்லியம்ஸ் பங்கேற்கவுள்ளார். இதற்கென தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

ஜாம்பவானிடம் பயிற்சி

ஜாம்பவானிடம் பயிற்சி

இந்நிலையில் புளோரிடா மாநிலத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசனிடம் செரினா வில்லியம்ஸ் பயிற்சி மேற்கொண்டார். அவரது ஆர்வம், திறன் உள்ளிட்டவற்றை கண்ட மைக் டைசன் வியப்பில் ஆழ்ந்தார்.

செம குத்துவிட்ட செரினா

செம குத்துவிட்ட செரினா

தன்னிடம் பயிற்சி மேற்கொண்ட செரினாவிற்கு ஆலோசனைகளை வழங்கிய மைக் டைசன், பஞ்சிங் பேக்கை பிடித்துக் கொள்ள கைகளில் குத்துச்சண்டை க்ளவுசுடன் செரினா விட்ட குத்துக்கள் மைக் டைசனை வியப்பில் ஆழ்த்தியது.

பாராட்டிய மைக் டைசன்

இதையடுத்து இரண்டு கைகளாலும் பஞ்சிங் பேக்கில் தொடர்ந்து குத்துவிட்ட செரினா வில்லியம்சின் வீடியோவை மைக் டைசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தன்னுடைய ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

இந்த வீடியோவில் செரினா வில்லியம்ஸ் தொடர்ச்சியாக குத்துக்களை விட்டு, பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் லைக்குகளை அளித்து வருகின்றனர். வீடியோவிற்கு இதுவரை ஒன்றரை லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Serena Williams impressed Mike Tyson with her Boxing skills
Story first published: Sunday, December 22, 2019, 18:10 [IST]
Other articles published on Dec 22, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X