கோகுலாஷ்டமி வாழ்த்து... புல்லாங்குழல் வாசிக்கும் தோனியின் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே

சென்னை : கோகுலாஷ்டமி வாழ்த்துக்களை தெரிவிக்கும்விதமாக புல்லாங்குழல் வாசிக்கும் தோனியின் பழைய வீடியோவை சிஎஸ்கே அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

IPL Names ஐ அப்படியே Copy செய்த Lanka Premier League | oneindia

மேலும் மின்சார கண்ணா என்று அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனும் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து கோகுலாஷ்டமி வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளது.

விமானத்திற்காக சக வீரர்களுடன் காத்திருக்கும்படியான அந்த வீடியோவில், தோனி புல்லாங்குழலை வாசிக்கிறார்.

இன்று கோகுலாஷ்டமி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக உறவினர்களுடன் கொண்டாட முடியாவிட்டாலும், அனைவரும் தங்களது வீடுகளில் கண்ணனை வரவேற்கும்விதமாக பூஜைகளை செய்து வருகின்றனர்.

புயலுக்கு முன்னே அமைதி... ஐபிஎல்லுக்காக ரிலாக்சாக காத்திருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா

இந்நிலையில் கோகுலாஷ்டமிக்காக ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறும்வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் அணியின் கேப்டன் தோனியின் பழைய வீடியோவை கையில் எடுத்து அதற்கு மின்சார கண்ணா என்று கேப்ஷனும் வெளியிட்டு டிவிட்டரில் பகிர்ந்துள்ளது சிஎஸ்கே அணி.

விமானநிலையத்தில் காத்திருக்கும்படியான அந்த வீடியோவில், புல்லாங்குழலை வாசிக்கிறார் தோனி. அழகான ஸ்டைல் கிளாசுடன் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்தபடி உள்ள தோனிக்கு பின்னால் அம்பத்தி ராயுடு காணப்படுகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK wished their fans on the occasion of Janmashtmi with the video
Story first published: Tuesday, August 11, 2020, 18:37 [IST]
Other articles published on Aug 11, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X