For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாவம் "முருகன்"....!

வெல்லிங்டன்: இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் இப்படி ஒரு ஆட்டத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். டாஸ் வென்றும் புண்ணியம் இல்லாமல் போய் விட்டது.

பெல்லில் ஆரம்பித்த அடி ஃபின் வரை தொடர்ந்து ஓய்ந்து முடிந்தபோது, என்ன நடந்தது என்றே தெரியாத அளவுக்கு குழம்பிப் போய் விட்டது இங்கிலாந்து. அந்த அளவுக்கு இங்கிலாந்து வீரர்களை புலம்ப வைத்து விட்டது நியூசிலாந்து.. குறிப்பாக டிம் செளதீ.

கிட்டத்தட்ட தீப்பொறி திருமுகமாக மாறி இங்கிலாந்து வீரர்களைப் பதம் பார்த்து விட்டார் செளதீ. ஆனால் தவறு இங்கிலாந்து மீதுதான். கடந்த சில போட்டிகளாக அவர்கள் ஒரே தவறைச் செய்து வந்ததன் விளைவே இன்று நியூசிலாந்திடம் சிக்கி நசுங்கிப் போக முக்கியக் காரணம்.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்புத் தொடர் இறுதிப் போட்டியில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்தது இங்கிலாந்து. அதே ஆஸ்திரேலியாவிடம் தனது உலகக் கோப்பை முதல் போட்டியில் 111 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மெல்போர்ன் மைதானத்தில் அது பேட்டிங் செய்த விதத்தைப் பார்த்து பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ரசிகர்கள் கிண்டியெடுத்து விட்டார்கள்.

மோர்கனுக்கு நெருக்கடி

மோர்கனுக்கு நெருக்கடி

இங்கிலாந்து பேட்டிங் இவ்வளவு கேவலமாக இருக்கிறதே என்று கிளம்பிய விமர்சனங்களால் கேப்டன் இயான் மோர்கனுக்கு நெருக்கடி அதிகரித்தது. ஆனால் இப்போது நியூசிலாந்திடம் வங்கிய அடியால் மோர்கன் அன் கோவின் நிலை மேலும் கேவலமாகியுள்ளது.

பேலன்ஸா.. போபராவா... ஜோர்டனா...

பேலன்ஸா.. போபராவா... ஜோர்டனா...

இந்தப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு 11 பேர் கொண்ட அணியைத் தேர்வு செய்ய முடியாமல் தவித்துப் போனார் மோர்கன். ரவி போபராவை சேர்ப்பதா, கேரி பாலன்ஸை தொடரச் செய்வதா, கிறிஸ் ஜோர்டனை சேர்ப்பதா என்பதில் பெரும் குழப்பமே நிலவியது. ஆனால் நியூசிலாந்து படு தெளிவாக இருந்தது.

இரண்டுமே ஒன்றுதான்

இரண்டுமே ஒன்றுதான்

இங்கிலாந்துக்கும், நியூசிலாந்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும். ஆனால் போகப் போக காணாமல் போய் விடுவார்கள். ஆனால் இந்த முறை நியூசிலாந்து சிறப்பாக ஆடி வருகிறது. இங்கிலாந்துதான் டைப் அடித்துக் கொண்டிருக்கிறது.

நியூசிலாந்து பெஸ்ட்

நியூசிலாந்து பெஸ்ட்

இந்த முறை இங்கிலாந்தை விட நியூசிலாந்து அணி நல்ல பார்மில் உள்ளது. இலங்கையை முதல் போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் நையப்புடைத்தது. அடுத்த போட்டியில் ஸ்காட்லாந்திடம் தடுமாறியது. இன்று இங்கிலாந்து வெளுத்துக் கட்டி விஸ்வரூபம் காட்டி விட்டது. நாங்கள் எங்களது நோக்கத்தில் சீரியஸாக இருக்கிறோம் என்பதை நியூசிலாந்து இன்றைய போட்டியின் மூலம் காட்டி விட்டது.

கடைசி 5 போட்டியிலும் ஜெயமே

கடைசி 5 போட்டியிலும் ஜெயமே

இந்தப் போட்டிக்கு முன்பு இங்கிலாந்தும், நியூசிலாந்தும் உலகக் கோப்பைப் போட்டிகளில் 7 போட்டிகளில் மோதியிருந்தன. அதில் முதல் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து வென்றிருந்தது. ஆனால் கடைசி 4 போட்டிகளிலும் நியூசிலாந்தே வென்றுள்ளது. இன்று 5வது போட்டியாக அது நீண்டுள்ளது.

எதிர்ப்பே இல்லாத பேட்டிங்

எதிர்ப்பே இல்லாத பேட்டிங்

இன்றைய போட்டியில் ஓரிரு வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் ஏதோ சரண்டராவதற்காக வந்த கைதிகளைப் போலவே காணப்பட்டனர். யாருமே எதிர்ப்பு காட்டவில்லை. பந்து வீச்சாளர்களுக்கு அவர்களே விக்கெட்களைத் தூக்கக் கொடுத்தது போல இருந்தது. பொறுப்பை உணர்ந்து அவர்கள் ஆடியது போலவே தெரியவில்லை.

வழி தெரியாமல் தவித்த ரூட்

வழி தெரியாமல் தவித்த ரூட்

ஜோ ரூட் மட்டுமே சற்று பொறுப்புடன் ஆடினார். அவர் பேட்டும் கையுமாக அடித்து நொறுக்க முயன்றபோதெல்லாம் மறு முனையில் விக்கெட் விழுந்தது. இதனால் ரூட் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிப் போய் நின்றார். கடைசியில் அவரும் அவுட்டாகி விட்டார்.

2 சப்பாத்தி சாப்பிடுவதற்குள் 4 விக்கெட்

2 சப்பாத்தி சாப்பிடுவதற்குள் 4 விக்கெட்

2 சப்பாத்தி சாப்பிடுவதற்குள் 4 விக்கெட் என்ற அளவில் இங்கிலாந்து பேட்டிங் படு மோசமாக இருந்தது. டிம் செளதீயின் பந்து வீச்சு அதை விட படு வேகமாக இருந்தது.

3 பேரைத் தவிர

3 பேரைத் தவிர

இயான் மோர்கன், ஜோ ரூட், பாலன்ஸ் ஆகிய மூவர் மட்டுமே செளதீயின் அனலில் சிக்கவில்லை. மற்ற 7 பேரும் பொசுங்கிப் போய் விட்டனர்.

டெய்லர் இப்படியா விளையாடுவார்

டெய்லர் இப்படியா விளையாடுவார்

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி 98 ரன்களைக் குவித்தவர் ஆவார். ஆனால் இன்று அவர் டக் அவுட்.

2 டக்

2 டக்

இன்றைய போட்டியில் டெய்லர் மற்றும் பின் ஆகிய இருவரும் டக் அவுட் ஆயினர்.

பெஸ்ட் பீல்டிங்

பெஸ்ட் பீல்டிங்

நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் இன்று செய்த பீல்டிங் வியூகம் பிரமாதமாக இருந்தது. அதுவும் இங்கிலாந்து ரன் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். தனது பந்து வீச்சாளர்களை சுதந்திரமாக விட்ட அவர் அவர்களுக்கேற்றார் போல பீல்டிங் வகுத்து, சரியான முறையில் பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி மொத்தமாக இங்கிலாந்தை முடக்கிப் போட்டு விட்டார். அத்தோடு நில்லாமல் பேட்டிங்கிலும் பிரளயத்தைக் கிளப்பி விட்டு விட்டார்.

மெக்கல்லம் - குப்தில் புதிய சாதனை

மெக்கல்லம் - குப்தில் புதிய சாதனை

இன்றைய நியூசிலாந்து பேட்டிங்கின்போது மெக்கல்லமும், குப்திலும் புதிய சாதனை படைத்தனர். அதாவது இருவரும் சேர்ந்து 2000 ரன்களை பார்ட்னர்ஷிப் மூலம் இன்று பூர்த்தி செய்தனர். இதற்கு முன்பு இந்த சாதனையை நாதன் ஆஸ்லே - ஸ்டீபன் பிளமிங் ஜோடி வைத்திருந்தது.

7 எழுத்து... 7 விக்கெட்!

7 எழுத்து... 7 விக்கெட்!

செளதீயின் பெயரில் (Southee ) 7 எழுத்து உள்ளது. அதற்கேற்ப 7 விக்கெட்களை எடுத்து ரொம்ப மகிழ்ச்சியுடன் நியூசிலாந்தைக் கரை சேர்த்து விட்டார் அவர்.

மார்கன் நிலை மோசம்தான்

மார்கன் நிலை மோசம்தான்

இங்கிலாந்து கேப்டன் மார்கன் சுத்தமாக பார்மில் இல்லை என்பதை இன்றும் நிரூபித்தார். அவரால் பேட் செய்யவே முடியவில்லை. ரொம்பத் தடுமாறி விட்டார் இன்று. 41 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 17 ரன்களில் நடையைக் கட்டினார்.

11 போட்டிகளில் 9 நியூசிலாந்துக்கே

11 போட்டிகளில் 9 நியூசிலாந்துக்கே

இன்று போட்டி நடந்த வெல்லிங்டன் வெஸ்ட்பாக் ஸ்டேடியத்தில் நியூசிலாந்து இதுவரை மோதிய 12 போட்டிகளில் இன்றைய வெற்றியையும் சேர்த்து 10 போட்டிகளில் வென்றுள்ளது.

இங்கிலாந்துக்கு 3வது தோல்வி

இங்கிலாந்துக்கு 3வது தோல்வி

இங்கிலாந்து இங்கு 2002 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் விளையாடி தோற்றுள்ளது. இப்போது 3வது முறையாக மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.

மொத்தத்தில் இன்று நாள் சரியில்லை.. இங்கிலாந்துக்கு!

Story first published: Friday, February 20, 2015, 12:17 [IST]
Other articles published on Feb 20, 2015
English summary
Here are some the interesting facts and highlights abouth the match between England and New Zealand.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X