For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி கேரளாவை சேர்ந்தவராம்: கேரள அமைச்சர் உளறல்

By Siva

கொச்சி: மரணம் அடைந்த குத்துச் சண்டை ஜாம்பவான் முகமது அலி கேரளாவை சேர்ந்தவர் என அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜன் உளறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 74.

Muhamma Ali, a malayali: Says Kerala sports minister

முகமது அலியின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு மலையாள செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜனிடம்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) கேட்டது.

அதற்கு அவர் கூறுகையில்(உளறுகையில்),

முகமது அலி அமெரிக்காவில் மரணம் அடைந்ததாக கேள்விப்பட்டேன். அவர் கேரளாவை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர் ஆவார். தங்கப்பதக்கம் வென்று அவர் கேரளாவின் பெருமையை உலகிற்கு தெரிவித்தவர்.

அவர் தனது துறையில் உச்சத்தில் இருந்தபோது பல பதக்கங்களை வென்று கேரளாவுக்கு பெருமை தேடித் தந்தவர் என்றார்.

Story first published: Sunday, June 5, 2016, 15:57 [IST]
Other articles published on Jun 5, 2016
English summary
Kerala sports minister Jayarajan said that boxing legend Muhammad Ali was from God's own country.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X