இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை!

டெல்லி : இந்தியாவின் முதல் பார்முலா 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன்.

கார் பந்தயம் என்பதை பார்த்து கூட இராத கோடிக்கணக்கான மக்களுக்கு பார்முலா 1 என்ற வார்த்தையை அறிமுகம் செய்தவரே நரேன் கார்த்திகேயன் தான்.

இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது நம் மாநிலத்துக்கு கிடைத்த பெருமை. இவருக்கு பின் இந்தியாவில் இன்று வரை ஒரே ஒரு பார்முலா 1 கார் பந்தய வீரர் மட்டுமே உருவாகி உள்ளார் என்பதன் மூலம் அவரது பெருமையை உணரலாம்.

1990களில் பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்று குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று வந்த நரேன் கார்த்திகேயன் 2005ஆம் ஆண்டு ஜோர்டான் அணியில் டிரைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்தியர் ஒருவர் பார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்ற அந்த தருணம் மறக்க முடியாதது.

அடுத்த ஆண்டு அவர் பார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தாலும், மீண்டும் 2011இல் பார்முலா 1க்கு திரும்பினார். அவருக்கு பின் பார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்ற ஒரே வீரர் கருண் சந்தோக் மட்டுமே. இவர்கள் இருவருக்கு பின் வேறு யாரும் அந்த வாய்ப்பை பெறவில்லை.

இந்தியாவில் பேட்மிண்டனை வளர்த்தவர் இவர்தான்.. சாதனைகளை அள்ளிக் குவித்த சாய்னா நேவால்!

நரேன் கார்த்திக்கேயனுக்கு பின் பல இளம் கார் பந்தய வீரர்கள் பார்முலா 1 ரேஸில் பங்கேற்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு உழைக்கத் துவங்கினர்.

பார்முலா 1 தவிர்த்து பல்வேறு கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் நரேன் கார்த்திகேயன். 2019இல் கூட சூப்பர் ஜிடி - டிடிஎம் ட்ரீம் ரேஸில் முதல் இடம் பிடித்தார். 2010இல் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Narain Karthikeyan is the first Fornula One driver from India. He is the one who introduced Formula One to many of the Indians.
Story first published: Wednesday, August 12, 2020, 21:03 [IST]
Other articles published on Aug 12, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X