For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“ஐயோ.. நெருப்பு, நெருப்பு.. காப்பாத்துங்க”.. பதற வைத்த கார் பந்தய விபத்து

அபுதாபி : அபுதாபி க்ராண்ட்ப்ரிக்ஸ் கார் பந்தயத்தில் பெரிய கார் விபத்து நேர்ந்து ஒரு கார் உருண்டு கொண்டே போய் தலை குப்புற விழுந்தது.

அப்போது பந்தய வீரர் "நெருப்பு.. நெருப்பு.. என்னை சீக்கிரம் வெளியேற்றுங்கள்" என கூறியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

நிக்கோ ஹல்கன்பெர்க் என்ற அந்த வீரர் பின்னர் காயம் இன்றி தப்பித்தார். எனினும், அந்த சில நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது.

வளைவில் இடித்துக் கொண்ட கார்கள்

வளைவில் இடித்துக் கொண்ட கார்கள்

அபுதாபி க்ராண்ட்ப்ரிக்ஸ் பந்தயத்தில் நிக்கோ ஹல்கன்பெர்க் மற்றும் ரோமைன் ஓட்டிச் சென்ற கார்கள் ஒரு வளைவில் ஒன்றை ஒன்று இடித்துக் கொண்டன. அப்போது நிக்கோ ஹல்கன்பெர்க்கின் கார் விபத்துக்குள்ளானது.

பல்டி அடித்து சாய்ந்தது

பல்டி அடித்து சாய்ந்தது

வளைவின் ஓரத்தில் சென்று கொண்டு இருந்த ரோமைன், அதற்கு மேல் வலது புறம் காரை வளைக்க முடியாது என்பதால், இடது புறம் தன்னை ஒட்டி வந்து கொண்டு இருந்த நிக்கோ ஹல்கன்பெர்க் கார் பக்கமாக தன் காரை திருப்பினார். அப்போது நிக்கோவின் கார் நிலை தடுமாறி, இரண்டு முறை பல்டி அடித்து தலை குப்புற சாய்ந்தது.

என்னை வெளியேற்றுங்கள்

பின்னர், காரின் பின்புறம் தீப்பிடித்துக் கொண்டது. அப்போது, நிக்கோ தனது அணியோடு ரேடியோ தொடர்பில் இருந்தார். அவர்கள் பேசிய உரையாடல் தெளிவாக கேட்டது. நிக்கோவின் அணியினர், "நீங்கள் சரியாக இருக்கிறீர்களா?" என கேட்டனர். "நான் இங்கே மாடு மாதிரி தொங்கிக் கொண்டு இருக்கிறேன். நெருப்பு.. நெருப்பு.. என்னை வெளியேற்றுங்கள்" என கூறினார் நிக்கோ.

எனக்கு வேறு வழியில்லை

எனக்கு வேறு வழியில்லை

உடனடியாக உதவியாளர்கள் காரின் தீயை அணைத்து நிக்கோவை காப்பாற்றினார்கள். நிக்கோ எந்த காயமும் இன்றி நடந்து வந்தார். இந்த விபத்துக்கு எந்த வீரரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது பந்தய விபத்து என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ரோமைன் இந்த விபத்து பற்றி கூறுகையில், "அப்போது எனக்கு செல்வதற்கு வேறு வழியில்லை" என விளக்கம் அளித்தார்.

லெவிஸ் ஹாமில்டன் முதல் இடம்

லெவிஸ் ஹாமில்டன் முதல் இடம்

இந்த போட்டியில் லெவிஸ் ஹாமில்டன் முதல் இடத்தை பிடித்து அசத்தினார். இரண்டாம் இடத்தை செபாஸ்டியன் வெட்டல் பிடித்தார். லெவிஸ் ஹாமில்டன் சமீபத்தில் இந்தியாவை பற்றி "மோசமான நாடு" என கருத்து சொல்லிவிட்டு பின்னர் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மோசமான நாடா? இந்த பக்கமே வராதீங்க.. வெளுத்த நெட்டிசன்கள்.. சரண்டரான F1 ரேஸ் வீரர் ஹாமில்டன்

Story first published: Monday, November 26, 2018, 17:55 [IST]
Other articles published on Nov 26, 2018
English summary
Nico Hulkenberg was left hanging in a horrifying crash at the Abu Dhabi Grand Prix
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X