For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டவுசர் போடாதே என கூறியவர்களுக்கு பதிலடி.. குத்துச்சண்டை உலக சாம்பியனான இந்திய பெண்.. சாதனை பயணம்

ஐதராபாத்: மகளிருக்கான உலக குத்துச்சண்மை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை நிகத் ஜரின் சாதனை படைத்துள்ளார்.

இஸ்டான்புல் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் 52 கிலோ எடைப் பிரிவில் தாய்லாந்து வீராங்கனை ஜிட்பாங்கை நிகத் ஜரின் வீழ்த்தினார்.

முதல் முறையாக மாஸ்க் அணிந்த பவுலர்.. என்ன காரணம் தெரியுமா? 6 ஆண்டுக்கு பிறகு கிடைத்த மரியாதைமுதல் முறையாக மாஸ்க் அணிந்த பவுலர்.. என்ன காரணம் தெரியுமா? 6 ஆண்டுக்கு பிறகு கிடைத்த மரியாதை

இதன் மூலம் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 5வது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

உறவினர்கள் எதிர்ப்பு

உறவினர்கள் எதிர்ப்பு

நிகத் ஜரின் தனது 14வது வயதிலேயே ஜூனியர் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர். இஸ்லாமியர் குடும்பத்தை சேர்ந்த நிகத் ஜரின் சிறு வயதில் டவுசர் அணிந்து குத்துச் சண்டைக்கு பயிற்சி எடுக்கும் போது, அவரது உறவினர்கள் பலரும் அவரை தடுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காயம்

காயம்

ஆனால் மகளின் ஆசைக்காக உறவினர்களின் பேச்சை கேட்காத தந்தை ஜமில் நிகத் ஜரினின் பயிற்சிக்கு துணையாக நின்றார். நிகத் ஜரினின் மூத்த சகோதரிகள் இருவரும் மருத்துவர்கள் என்பதால், அவர்களும் தங்கையின் கனவுக்கு துணை நின்றுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு நிகத் ஜரினுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

தடைகள்

தடைகள்

இதனால், அவரது குத்துச் சண்டை வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் முழு உடல் தகுதியை பெற்று பல சர்வதேச போட்டியில் பங்கேற்று நிகித் ஜரின் வெற்றியை பெற்று தந்துள்ளார். மேரி கோமின் ஆதிக்கத்தால் நிகித் ஜரினால் 52 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்று முன்னேற வாய்ப்பு கிடைக்கவில்லை.

தந்தையின் கனவு

தந்தையின் கனவு

ஆனால் தற்போது 25 வயதில் மீண்டும் சாதித்துள்ள நிகத் ஜரின் தன்னுடைய அடுத்த இலக்கு 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தான் என்று குறிப்பிட்டுள்ளார். நிகத் ஜரினின் இந்த வெற்றி இஸ்லாமிய பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் என நம்புகிறேன் என்று தந்தை ஜமில் கூறியுள்ளார். மகளின் கனவுக்காக வெளிநாட்டில் தாம் பார்த்த வேலையை விட்டு, இந்தியா வந்ததாகவும் அவர் கூறினார்.

Story first published: Friday, May 20, 2022, 17:51 [IST]
Other articles published on May 20, 2022
English summary
Nikhat Zareen became World Boxing champion and her father shares victory journey டவுசர் போடாதே என கூறியவர்களுக்கு பதிலடி.. குத்துச்சண்டை உலக சாம்பியனான இந்திய பெண்.. சாதனை பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X