For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென்கொரியா - வடகொரியா இணைந்து 2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அதிரடி முடிவு

சியோல் : தென் கொரியா மற்றும் வடகொரியா இணைந்து 2032 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். திடீரென சில மாதங்களில் மனம் மாறிய அவர், தென்கொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைகளை துவங்கினார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடந்தினார்.

எப்போது வேண்டுமானாலும் தென்கொரியா, வடகொரியா போர் மூளும் என்ற அபாயத்தில் இருந்த நேரத்தில், அவரது மாறுதல் ஆசியா மற்றும் அமெரிக்க நாடுகளிடையே பதற்றத்தை குறைத்தது.

இரு அதிபர்கள் சந்திப்பு :

இரு அதிபர்கள் சந்திப்பு :

தற்போது இரண்டு நாடுகளும் இணைந்து பல முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று தென் கொரியா அதிபர் மூன் ஜே இன், மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்தனர்.

இணைந்தே பங்கேற்போம் :

இணைந்தே பங்கேற்போம் :

அதன் முடிவில், அனைத்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் இணைந்து பங்கேற்பது என்றும், 2020 ஒலிம்பிக் போட்டிகளிலும் இணைந்தே பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

2032 ஒலிம்பிக் தொடர் :

2032 ஒலிம்பிக் தொடர் :

மேலும், 2032 ஒலிம்பிக் போட்டிகளை இரண்டு நாடுகளும் இணைந்து நடத்த ஒலிம்பிக் சங்கத்திடம் விண்ணப்பிக்க உள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விண்ணப்பித்து இருக்கும் நிலையில், ஒருங்கிணைந்த கொரியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

சியோல் பயணம் :

சியோல் பயணம் :

மேலும், தென்கொரியாவின் தலைநகர் சியோலுக்கு வடகொரியா அதிபர் கிம், இந்த ஆண்டில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இரண்டு நாடுகளும் 1945இல் பிரிந்ததில் இருந்து எந்த வடகொரிய அதிபரும் இதுவரை சியோல் நகருக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 19, 2018, 13:21 [IST]
Other articles published on Sep 19, 2018
English summary
North and South Korea jointly bid for 2032 Olympics. Recently, they jointly participated in some of the events at Asian Games.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X