ஆனந்த் மணி அடிச்சாரு.. நான் முட்டாள் மாதிரி நின்னுகிட்டு இருந்தேன்.. செஸ் சாம்பியனின் பரிதாப கதை!

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்து முடிந்த பகலிரவு போட்டியின் இரண்டாவது நாளில், செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் அங்கிருந்த பிரமாண்ட மணியை அடித்து போட்டியை துவக்கி வைத்தனர்.

ஈடன் கார்டன் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்காக நார்வேயின் செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனிடம் கேட்டபோது, விஸ்வநாதன் ஆனந்த் அங்கிருந்த பெரிய பெல்லை அடித்தார். நான் அங்கே என்ன நடக்கிறது என்று ஒன்றும் தெரியாமல் முட்டாள் மாதிரி நின்றுக் கொண்டிருந்தேன். அதுவே ஈடன் கார்டனில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்று தெரிவித்தார்.

கிரிக்கெட் குறித்து தான் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டியுள்ளதாகவும் கார்ல்சன் தெரிவித்தார்.

வாழ்க்கையை மாற்றிய ஷாம்பூ விளம்பரம்.. மறக்காமல் நன்றி சொல்லும் கோலி!

 கொல்கத்தா வந்த சாம்பியன்கள்

கொல்கத்தா வந்த சாம்பியன்கள்

கொல்கத்தாவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் போட்டியில் பங்கேற்பதற்காக கிராண்ட்மாஸ்டர்கள் விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சன் உள்ளிட்டவர்க்ள வந்திருந்தனர். இதனால் கொல்கத்தா பகலிரவு கிரிக்கெட் போட்டிக்காக மட்டுமின்றி செஸ் போட்டிக்காகவும் களைகட்டியது.

 மணியடித்து துவக்கி வைத்த விஸ்வநாதன்

மணியடித்து துவக்கி வைத்த விஸ்வநாதன்

இந்த போட்டிக்கிடையில் ஈடன் கார்டனில் நடைபெற்ற இரண்டாவது நாள் பகலிரவு போட்டியை துவக்கி வைப்பதற்காக கிராண்ட் மாஸ்டர்கள் விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது மைதானத்தில் இருந்த பிரமாண்ட மணியை அடித்து போட்டியை விஸ்வநாதன் ஆனந்த் துவக்கி வைத்தார்.

 செஸ் சாம்பியன் மேக்னஸ் அப்பாவித்தனம்

செஸ் சாம்பியன் மேக்னஸ் அப்பாவித்தனம்

விஸ்வநாதன் ஆனந்த்துடன் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்னும் இரண்டாவது நாள் போட்டியை துவக்கி வைக்க ஈடன் கார்டன் வந்திருந்த நிலையில், விஸ்வநாதன் ஆனந்த் மணியை அடித்தபோது, அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தான் முட்டாள் மாதிரி நின்றிருந்ததாக கார்ல்சன் தெரிவித்தார்.

 கார்ல்சன் பேச்சு

கார்ல்சன் பேச்சு

தொடர்ந்து பேசிய கார்ல்சன், கிரிக்கெட் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். செஸ் போட்டியில் உலக அளவில் புகழ்பெற்ற சாம்பியன் இவ்வாறு தெரிவித்தது ரசிகர்களை கேள்விக்குள்ளாகியது.

விதித் குஜராத்தி மகிழ்ச்சி

இதனிடையே, தனது செஸ் போட்டிகளை முடித்துக் கொண்டு, கிரிக்கெட் பார்க்க தான் ஈடன் கார்டன் மைதானத்திற்கு வந்துவிட்டதாக கிராண்ட் மாஸ்டர் விதித் குஜராத்தி டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
When Anand Rang the bell, I stood there stupidly - Chess Champion Carlson exerience with Eden garden
Story first published: Monday, November 25, 2019, 12:49 [IST]
Other articles published on Nov 25, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X