For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விடாது துரத்தும் விதி.. பறிபோன 'கோல்டன் ஸ்லாம்' பெருமை.. ஏமாற்றத்துடன் வெளியேறிய ஜோகோவிச்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில், டென்னிஸ் விளையாட்டில் ஜோகோவிச்சின் சாதனை பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் என்பது, ஒவ்வொரு விளையாட்டு வீரனுடைய கனவில் எல்லையாகும். அதைத் தாண்டி பெரிதாக அவர்கள் சாதிக்க எதுவும் இல்லை.

எத்தனை முறை அவரவர்கள் விளையாட்டில் உலக சாம்பியன்களாக இருந்தாலும்,ஒலிம்பிக்கில் மெடல் வென்றால் தான் கெத்து.

4வது பதக்கத்திற்கான நம்பிக்கை அதிகரிப்பு.. ஆடவர் ஹாக்கி போட்டி.. இந்திய அணி அபார வெற்றி!4வது பதக்கத்திற்கான நம்பிக்கை அதிகரிப்பு.. ஆடவர் ஹாக்கி போட்டி.. இந்திய அணி அபார வெற்றி!

ஒலிம்பிக் பசி

ஒலிம்பிக் பசி

அந்த வகையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சின் ஒலிம்பிக் பசி, இம்முறையும் தீரா பசியாகவே முடிந்திருக்கிறது. ஆம்! ஆண்கள் அரையிறுதிப் போட்டியில் ஜோகோவிச் வீழ்ந்துவிட்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில் நடால், ஃபெடரர் போன்ற முன்னணி வீரர்கள் பங்கு பெறாததால், ஜோகோவிச் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

2008ல் வெண்கலம்

2008ல் வெண்கலம்

ஜோகோவிச் இதுவரை ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. கடந்த 2008ம் ஆண்டு ஒலிம்பிக்சில் வெண்கலப்பதக்கம் வென்றதே அவரது சிறந்த பங்களிப்பாகும். ஆகையால், இந்த முறை நிச்சயம் ஒலிம்பிக் பதக்கம் வென்றுவிட வேண்டும் என்பதில் ஜோகோவிச் மிகத் தீவிரமாக உள்ளார்.

ஜோகோவிச் உற்சாகம்

ஜோகோவிச் உற்சாகம்

அதற்கு ஏற்றார் போல், ஜோகோவிச்சும் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அடியெடுத்து வைத்தார். நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில், இதில் செர்பியாவின் உலகின் நம்பர்.1 நோவக் ஜோகோவிச் மற்றும் ஜப்பானின் நம்பிக்கை நட்சத்திரமான கெய் நிஷிகோரி ஆகியோர் மோதினர். இதில், ஜோகோவிச் எந்தவித சிரமும் இன்றி கேஷுவலாக போட்டியை வென்றார். 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் நிஷிகோரியை வீழ்த்தினார். வெறும் 70 நிமிடங்களில் இந்த போட்டி முடிவுக்கு வந்தது.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

இந்த வெற்றி அளித்த உற்சாகத்தில் இன்று அரையிறுதிப் போட்டியில் ஜோகோவிச் களமிறங்கினார். எதிராளி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஜெவ்ரெவ். இதனால், ஜோகோவிச் தான் இன்றைய போட்டியையும் எந்தவித சிரமும் இன்றி வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் முதல் செட்டை 1- 6 என்று சேட்டையாக வென்றார் ஜோகோவிச். இப்படியொரு மிரட்டலான ஆட்டத்துக்கு பிறகும், ஜோகோவிச் தோற்பார் என்றுயாராவது கணித்தால், அவர் தான் விளையாட்டின் ஞானகுரு எனலாம்.

மீண்டும் வெண்கலம்

மீண்டும் வெண்கலம்

ஆனால், அந்த மேஜிக் நடந்தது. அந்த ஏமாற்றம் நிகழ்ந்தது. கடல் அலையைப் போல் பொங்கியெழுந்த அலெக்சாண்டர், இரண்டாவது செட்டை 6-3 என்றும், மூன்றாவது செட்டை 6-1 என்றும் கைப்பற்றி, பெரும் அதிர்ச்சியை ஜோகோவிச்சுக்கு பரிசளித்தார். முதல் செட்டில் ஜோகோவிச் கொடுத்த 1-6 என்ற அடிக்கு, மூன்றாவது செட்டில் அப்படியே திருப்பிக் கொடுத்தார் அலெக்சாண்டர். இதன் மூலம், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியாமல், வெண்கலப்பதக்கத்துடன் வெளியேறுகிறார் ஜோகோவிச்.

சாதனைக்கு முடிவு

சாதனைக்கு முடிவு

இது ஜஸ்ட் ஒரு மேட்சின் தோல்வி என்பதோடு முடிந்துவிடவில்லை. ஒரு மகத்தான உலக சாதனைக்கு என்று கார்டு போட்டிருக்கிறது. அதாவது, ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வெல்லும் அவரது ஆசையும் முடிந்துவிட்டது. அதுமட்டுமின்றி, அவரது கோல்டன் ஸ்லாம் கனவும் கலைக்கப்பட்டுவிட்டது. அதாவது வருடத்தின் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் பதக்கத்தையும் வென்று, அதே ஆண்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தையும் வெல்லும் அபார வாய்ப்பும், சாதனையும் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த சீசனில், அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் தட்டித் தூக்கியது ஜோகோவிச் தான். நடால், ஃபெடரர் என்று ஜாம்பவான்களும் இவரிடம் அடி வாங்கினார்கள்.

கோல்டன் ஸ்லாம்

கோல்டன் ஸ்லாம்

ஆனால், இத்தனை வெற்றிகளை புரிந்து, இன்றைய ஒரு அரையிறுதிப் போட்டி தோல்வியினால் தனது அபார உலக சாதனையை நிறைவேற்ற முடியாமல், 'கோல்டன் ஸ்லாம்' பட்டத்தை வெல்ல முடியாமல் சோகத்துடன் வெளியேறி இருக்கிறார் ஜோகோவிச். ஒரே வருடத்தில் நான்கு சாம்பியன்ஷிப் பட்டங்கள் மற்றும் ஒலிம்பிக் பட்டம் வென்ற ஒரே வீரர் ஸ்டெஃபி கிராஃப் மட்டுமே. 1988ம் ஆண்டு அவர் இந்த சாதனையை படைத்தார். இந்த சாதனையை நிகழ்த்தும் இரண்டாவது வீரராக ஜோகோவிச் இருந்திருக்க வேண்டியது. எல்லாம் போச்சு!

Story first published: Friday, July 30, 2021, 20:53 [IST]
Other articles published on Jul 30, 2021
English summary
Djokovic lost in men’s singles semifinal - நோவக் ஜோகோவிச்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X