For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைகீழாத்தான் குதிப்பேன்.... ஏம்மா இப்படித்தான் சட்டை போடுவீங்களா.. ஆனா நல்லாருக்கு!

கார்டிப்: இதுவும் கூட ஒரு ஜாலியான விளையாட்டு செய்திதான். ஆனால் ரொம்ப வித்தியாசமான விளையாட்டா இருக்கு. விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏங்கிக் கிடப்போர் மனதில் இது லேசான உற்சாகத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம்.

இங்கிலாந்தின் கார்டிப் பகுதியில் உள்ள பிரபலமான பள்ளிதான் லானிஷென் ஹைஸ்கூல். இந்தப் பள்ளியின் உடற் கல்விப் பிரிவு ஒரு போட்டியை அறிவித்தது. அதாவது தலைகீழாக இருந்தபடி மேல் சட்டையைப் போட வேண்டும். இதுதான் அந்த விளையாட்டுப் போட்டி.

மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. விடுவார்களா.. ஆளாளுக்கு குவிந்து விட்டனர். சும்மா சொல்லக் கூடாது. சூப்பராக இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

இது சர்வதேச ஹாக்கி வீராங்கனை

இது சர்வதேச ஹாக்கி வீராங்கனை அலானா ஹாமில்டன் டூம்ப்ஸ் செய்த சாகசம். அதாவது சட்டை கீழே இருக்கிறது. தலைகீழாக இவர் நிற்கிறார். கால்கள் இரண்டும் சுவரில் இருக்கிறது. காலை கீழே போட்டு விடாமல் கையாலேயே தனது சட்டையை மேலாக மாட்டிக் கொள்கிறார். வெற்றிகரமாக சட்டையை மாட்டிய பிறகு லாவகமாக கீழே வருகிறார். இதுதான் போட்டியாம்.

சூப்பரான கணக்கு டீச்சர்

இது அந்த ஸ்கூலோட கணக்கு டீச்சர். மாணவர்களுக்கு சமமாக இவரும் அனாயசமாக தலைகீழாக நின்றபடி தனது மேல் சட்டையை சரியாகப் போட்டு போட்டியில் ஜெயித்துள்ளார். மாணவர்களுக்கு இணையாக டீச்சரும் இல்லாவிட்டால் மானம் போய் விடாது.. அந்த வகையில் இந்த கணக்கு டீச்சரைப் பாராட்ட வேண்டும்.

சிங்கம் சிங்கிள் கையாலதான்

சிங்கம் சிங்கிள் கையிலதான் சட்டை போடும். இவர் 3 குழந்தைகளுக்குத் தாய். வருமான வரித்துறையில் வேலை பார்க்கிறார். பெற்றோரான இவர் அனாயசமாக ஒரே கையால் சட்டையைப் போட்டு சட்டுப் புட்டென்று கீழே இறங்கி வருகிறார். படு வேகமாக செயல்பட்டு இந்தப்போட்டியில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் இந்தப் பெண்.

இளம் வீரன் சாகசம்

இது இளம் கால்பந்து வீரன். அதிரடி வீரர் மட்டுமல்லாமல் நல்ல கோல் கீப்பரும் கூட. படிப்பிலும் சுட்டியாம். இந்தப் பையனும் இப்போட்டியில் கலந்து கொண்டான். படு லாவகமாக தனது மேல்சட்டையை எடுத்து ஒரு கையால் மாட்டி அழகாக போட்டியில் வெற்றி பெற்றான். ஆனால் என்ன ஒன்றாம்.. வகுப்பில் படிப்பதை விட நிறைய கேள்வி கேட்பானாம்!

Story first published: Sunday, April 19, 2020, 11:39 [IST]
Other articles published on Apr 19, 2020
English summary
Here are some of the Novel PET games in England's school
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X