2020 ஒலிம்பிக் தொடர்.. முதல் தங்கத்தை வென்ற கிரேட் பிரிட்டன்.. 100 மீட்டர் நீச்சலில் ஆடம் வெற்றி!

டோக்கியோ: 2020 ஒலிம்பிக் தொடரின் முதல் தங்கத்தை இன்று கிரேட் பிரிட்டன் அணி வென்றது. நீச்சல் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆடம் பேட்டி வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

உலகில் தற்போது தலைசிறந்த நீச்சல் வீரர்களில் ஒருவராக ஆடம் பேட்டி வலம்வந்து கொண்டு இருக்கிறார். முக்கியமாக 100 மீட்டர் பிரேக் ஸ்ட்ரோக் பிரிவில் உலகின் பல்வேறு சர்வதேச போட்டிகள், கிளப் போட்டிகளில் ஆடம் பேட்டி ரெக்கார்ட் படைத்துள்ளார்.

பிரிட்டனுக்காக காமன்வெல்த், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், யுரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடி இருக்கிறார். இதற்கு முன் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் பிரேக் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்.

தகர்ந்த நம்பிக்கை.. முதல் சுற்றில் வென்ற தமிழ்நாட்டின் பவானி தேவி.. 2வது சுற்றில் தோற்றது எப்படி?தகர்ந்த நம்பிக்கை.. முதல் சுற்றில் வென்ற தமிழ்நாட்டின் பவானி தேவி.. 2வது சுற்றில் தோற்றது எப்படி?

தற்போது தங்க பதக்கத்தை தக்க வைத்து சாதனை படைத்துள்ளார். இன்று நடந்த போட்டியில் ஆடம் பேட்டி 100 மீட்டர் பிரேக் ஸ்ட்ரோக் பிரிவை 57.37 நொடியில் முடித்து சாதனை படைத்தார். 58.00 இலக்கை அடைந்து இரண்டாவது இடத்தை டச் வீரர் அர்னோ கம்மிங்கா பிடித்தார்.

வெறும் 26 வயதே ஆகும் ஆடம் பேட்டி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்து உள்ளார். எட்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் ஏற்கனவே வென்று இருக்கிறார். 13 உலக சாதனைகளை இதுவரை முறியடித்து இருக்கிறார்.

தற்போது 2020 ஒலிம்பிக் தொடரின் முதல் தங்கத்தை இன்று கிரேட் பிரிட்டன் அணிக்காக வென்று கொடுத்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympic 2020: Adam Peaty wins first gold for Great Britain in swimming today.
Story first published: Monday, July 26, 2021, 9:00 [IST]
Other articles published on Jul 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X