ஒலிம்பிக் 2020.. 50மீ நீச்சலில் அமெரிக்காவின் கேலிப் டிரெஸ்ஸல் ஒலிம்பிக் சாதனை.. மொத்தமாக 5 தங்கம்!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரின் 50மீ நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் கேலிப் டிரெஸ்ஸல் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். 21.07 நொடிகளில் 50மீ இலக்கை அடைந்து கேலிப் டிரெஸ்ஸல் தங்கம் வாங்கினார்.

2020 ஒலிம்பிக் தொடரில் அமெரிக்க வீரர் கேலிப் டிரெஸ்ஸல் தொடர்ந்து நீச்சல் போட்டிகளில் கலக்கி வருகிறார். நேற்று 100மீ ஆண்கள் பட்டர்பிளை பிரிவு ஆட்டத்தில் இவர் தங்கம் வாங்கினார். 49.45 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய உலக சாதனை படைத்தார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, ஒலிம்பிக்கில் மைக்கல் பெல்ப்ஸ் சாதனையையே முறியடித்த ஹங்கேரி வீரர் க்ரிஸ்தாப் மாலிக் இதில் இரண்டாம் இடம்தான் பிடித்தார். மாலிக் 49.68 நிமிடங்களில் இலக்கை அடைய அவரை முந்தி கேலிப் டிரெஸ்ஸல் முதல் இடம் பிடித்தார்.

நீச்சல்

நீச்சல்

இன்னொரு பக்கம் இன்றும் 50மீ ப்ரீ ஸ்டைல் நீச்சல் பிரிவில் கேலிப் டிரெஸ்ஸல் புதிய ஒலிம்பிக் ரெக்கார்ட் படைத்துள்ளார். இதில் 21.07 நொடிகளில் 50மீ இலக்கை அடைந்து கேலிப் டிரெஸ்ஸல் தங்கம் வாங்கினார். இது புதிய ஒலிம்பிக் 50மீ நீச்சல் ரெக்கார்ட் ஆகும்.

இரண்டாவது இடம்

இரண்டாவது இடம்

இதில் இரண்டாவது இடத்தை பிரான்சின் புளோரண்ட் பிடித்தார். அவர் 21.55 நொடிகளில் இலக்கை அடைந்தார். அவரை விட 48 நொடிகள் வேகமாக நீச்சல் அடித்து கேலிப் டிரெஸ்ஸல் சாதனை படைத்துள்ளார். இன்று நடந்த 400மீ ரிலேவில் அமெரிக்க அணி தங்கம் வெல்லவும் கேலிப் டிரெஸ்ஸல் காரணமாக இருந்தார்.

ரிலே

ரிலே

இதில் 3:26.78 நிமிடங்களில் அமெரிக்கா வென்றது. இந்த அணியில் கேலிப் டிரெஸ்ஸல் இடம்பெற்று இருந்தார். . இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 குழு தங்கம், 3 தனி நபர் தங்கம் என்று 5 தங்கங்களை கேலிப் டிரெஸ்ஸல் வாங்கி உள்ளார்.

 சாதனை

சாதனை

இதற்கு முன் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ். மார்க் ஸ்பீட்ஸ், மாட் பியொண்டி, கிழக்கு ஜெர்மனியின் கிறிஸ்டன் ஆகியோர் மட்டுமே 5 அல்லது அதற்கும் கூடுதலான தங்கங்களை ஒரே ஒலிம்பிக்கில் வாங்கி உள்ளனர். இந்த எலைட் பட்டியலில் கேலிப் டிரெஸ்ஸல் இணைந்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympic 2020: Caeleb Dressel wins 5 gold for USA in swimming with 2 Olympic record and 1 world record.
Story first published: Sunday, August 1, 2021, 9:46 [IST]
Other articles published on Aug 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X