மீராபாய், சிந்து பதக்கம் வாங்கியும்.. பதக்க பட்டியலில் 61வது இடத்தில் இந்தியா.. முதலிடத்தில் சீனா!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் 2020 பதக்க பட்டியலில் இந்தியா 61வது இடத்தில் உள்ளது.

PV Sindhu Unknown Facts | Tokyo Olympics | Who Is PV Sindhu? | Oneindia Tamil

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் கடைசி வாரத்தை எட்டி உள்ளது. தடகள போட்டிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் இறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகளில் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அதேபோல் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட ஆட்டங்களில் தென்கொரியா, ரஷ்யா உள்ளிட்ட அணிகளும், நீச்சல் போட்டிகளில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் 24 தங்கம் உட்பட 51 பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகித்து வருகிறது.

அமெரிக்கா 20 தங்கம் உட்பட 60 பதக்கங்களுடன் 2ம் இடம் வகித்து வருகிறது. டாப் மூன்று இடங்களுக்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்தியா 1 வெண்கலம், 1 வெள்ளிப்பதக்கத்துடன் 61வது இடத்தில் உள்ளது. இதில் மீராபாய் பளு தூக்குதலில் 1 வெள்ளி, பிவி சிந்து பாட்மின்டனில் 1 வெண்கலம் வாங்கி உள்ளனர். ஆனால் இந்தியா தங்கம் வாங்காத காரணத்தால் பதக்க பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஒலிம்பிக்.. பெண்கள் ஹாக்கி காலிறுதி முதல் துப்பாக்கி சுடுதல் வரை.. இந்தியா இன்று ஆடும் ஆட்டங்கள் ஒலிம்பிக்.. பெண்கள் ஹாக்கி காலிறுதி முதல் துப்பாக்கி சுடுதல் வரை.. இந்தியா இன்று ஆடும் ஆட்டங்கள்

ஜப்பான் 17 தங்கம் உட்பட 31 பதக்கங்களுடன் 3ம் இடம் வகித்து வருகிறது. ஆஸ்திரேலியா 14 தங்கம் உட்பட 31 பதக்கங்களுடன் 4ம் இடம் வகித்து வருகிறது. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 12 தங்கம் உட்பட 44 பதக்கங்களுடன் 5ம் இடம் வகித்து வருகிறது

கிரேட் பிரிட்டன் 10தங்கம் உட்பட 32 பதக்கங்களுடன் 6ம் இடம் வகித்து வருகிறது. பிரான்ஸ் 10 தங்கம் உட்பட 32 பதக்கங்களுடன் 7ம் இடம் வகித்து வருகிறது

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympic 2020: China remains top with 24 golds, With 2 medal India at the 60th place in medal tally so far.
Story first published: Monday, August 2, 2021, 9:30 [IST]
Other articles published on Aug 2, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X