ஒலிம்பிக் 2020.. ஆண்கள் ஹாக்கி முதல் சதிஷ் பாக்சிங் வரை.. இந்தியா இன்று ஆட உள்ள போட்டிகள்!

டோக்கியோ: ஒலிம்பிக்கில் 9ம் நாளான இன்று முக்கியமான சில ஆட்டங்கள் நடக்க உள்ளன. ஆண்கள் ஹாக்கி அணியின் காலிறுதி சுற்று ஆட்டம் இன்று நடக்க உள்ளது.

ஒலிம்பிக் 2020 தொடரில் இந்தியா தொடர்ந்து அதிர்ச்சி அளித்து வருகிறது. நேற்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து செமி பைனல் ஆட்டத்தில் தைபே சீனாவின் யிங் திசுவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

அதேபோல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அட்டானு தாஸும் வில்வித்தையில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார். இந்த நிலையில் இந்திய அணி இன்று சில முக்கியமான போட்டிகளில் ஒலிம்பிக்கில் ஆட உள்ளது.

போட்டிகள் விவரம் பின்வருமாறு:

பாக்சிங்

ஆண்கள் ஹெவிவெயிட் காலிறுதி: சதிஷ் குமார் vs உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலவ், காலை 09:36 AM

குதிரை பந்தயம்

ஒற்றையர் ஆட்டம் - பாயோத் மிர்சா, காலை 04:15 AM

கோல்ப்

ஆண்கள் ஒற்றையர் ஆட்டம்- ரவுண்ட் 4: அனிர்பன் லஹ்ரி, உதயன் மனே, காலை 04:00 AM

ஹாக்கி

ஆண்கள் காலிறுதி: இந்தியா vs கிரேட் பிரிட்டன் மாலை 5:30 PM.

பேட்மிண்டன்

பெண்கள் வெண்கலப்பதக்கம் போட்டி: பிவி சிந்து vs சீனா ஹீ பிங்ஜியோ மாலை 5:00 PM.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympic 2020: Day 9 round up of India's contingent’s schedule for today.
Story first published: Sunday, August 1, 2021, 7:32 [IST]
Other articles published on Aug 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X