ஒலிம்பிக் 2020.. ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸிலும் சொதப்பல்.. இந்திய வீரர் சுமித் நகல் தோல்வி

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸில் இந்திய வீரர் சுமித் நகல் தோல்வி அடைந்து வெளியேறினார் .

ஒலிம்பிக் 2020 தொடரில் பல்வேறு பிரிவுகளில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் ஏமாற்றமான ஆட்டத்தை ஆடி வருகிறார்கள். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கி சூடு, வில்வித்தை இரண்டிலும் இந்திய அணி வீரர்கள் மோசமாக சொதப்பி உள்ளனர்.

மெகா ஏலம்: CSK தக்க வைக்கும் மெகா ஏலம்: CSK தக்க வைக்கும்

இன்றுதான் ஒலிம்பிக் 2020 தொடரில் வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் குழு காலிறுதி சுற்றில் தென் கொரியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இன்னொரு பக்கம் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இதுவரை இந்தியா பெரிதாக வெற்றி எதையும் பெறவில்லை.

டென்னிஸ்

டென்னிஸ்

இன்னொரு பக்கம் டென்னிஸ் போட்டிகளிலும் இந்திய அணி வீரர்கள் மோசமாக சொதப்பி வருகிறார்கள். நேற்று நடந்த ஆட்டத்தில் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வியை தழுவி உள்ளது. உக்ரைனின் நாதியா கிசேனோக் மற்றும் லயும்லா கிசேனோக் ஜோடியிடம் இந்திய பெண்கள் இரட்டையர் அணி தோல்வியை தழுவியது.

மோசம்

மோசம்

சானியா மற்றும் ரெய்னா ஜோடி 6-0, 6-7(0). 8-10 என்ற புள்ளிகளில் தோல்வி அடைந்தது. அதோடு ஒலிம்பிக் இரட்டையர் பெண்கள் சுற்றில் இருந்தும் வெளியேறியது. இந்த நிலையில் இன்று ஒலிம்பிக் 2020 தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக சுமித் நகல் ஆடினார்.

 தோல்வி

தோல்வி

ரஷ்யா ஒலிம்பிக் கமிட்டி வீரர் டேனில் மெட்விதேவிடம் சுமித் மோதினார். இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே டேனில் மெட்விதேவ் போட்டியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். 6-2 என்ற கணக்கில் முதல் சேட்டையில் டேனில் வெற்றிபெற்றார். அடுத்த சுற்றிலாவது சுமித் நகல் மீண்டு வந்து போராடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வெளியேற்றம்

வெளியேற்றம்

ஆனால் ரஷ்ய வீரர் எதற்கும் இடம் கொடுக்காமல் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். 36 நிமிடம் நடந்த இரண்டாவது செட்டில் 6-1 என்ற கணக்கில் மீண்டும் டேனில் வெற்றிபெற்றார். இதனால் மொத்தமாக 6-2, 6-1 ரஷ்யா ஒலிம்பிக் கமிட்டி வீரர் டேனில் மெட்விதேவிடம் சுமித் தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympic 2020: India's Sumit Nagal knocked out of the game after losing Tennis single men against ROC.
Story first published: Monday, July 26, 2021, 12:46 [IST]
Other articles published on Jul 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X