For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1 தென்னிந்தியா.. 2 வடகிழக்கு.. 3 பெண்கள்.. ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பதக்கம் வாங்கிய படை.. லிஸ்ட்

டோக்கியோ: 2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு இதுவரை பதக்கம் வாங்கிய மூன்று பேருமே பெண்கள். அதில் இரண்டு பேர் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

2020 ஒலிம்பிக் தொடரில் இன்று இந்தியா மூன்றாவது பதக்கத்தை வாங்கியது. ஒலிம்பிக் பெண்கள் பாக்சிங் 69 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் லோவ்லினதுருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலியிடம் 5:0 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தார். செமி பைனலில் தோல்வி அடைந்ததன் மூலம் இவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.

 India vs England Test LIVE: இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்.. கம்பேக் கொடுக்குமா இந்தியா? India vs England Test LIVE: இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்.. கம்பேக் கொடுக்குமா இந்தியா?

தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே வெண்கலம் வென்று லோவ்லினா பதக்கம் வென்றுள்ளார்.

லோவ்லினா

லோவ்லினா

ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் என்ற லோவ்லினா அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். அசாம் மாநிலம் கோலாஹாட் என்ற பகுதியில் பிறந்து. வளர்ந்தவர் ஒலிம்பிக் 2020 தொடரில் லோவ்லினா வாங்கிய பதக்கத்தோடு இந்தியா மூன்று பதக்கங்களை பெற்றுள்ளது. இந்தியாவிற்காக பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

மணிப்பூர்

மணிப்பூர்

இவர் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். மணிப்பூரில் இம்பால் மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர் மீராபாய் சானு. இந்தியாவிற்கான இரண்டு பதக்கங்கள் வடகிழக்கு மாநிலங்களில் இருந்துதான் வந்துள்ளது. இதுபோக பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கலம் வென்றுள்ளார்.

ஆந்திரா

ஆந்திரா

ஆந்திராவை சேர்ந்த இவர் இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 2020 ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியாவிற்காக பதக்கம் வாங்கிய மூன்று பேருமே பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய பெரிய தேசியத்தின் பார்வை படாத, வடகிழக்கு மாநிலங்களும், தென்னிந்தியாவும்தான் இந்தியாவிற்கு இந்த முறை பதக்கம் வாங்கி கொடுத்துள்ளது.

பட்டியல்

பட்டியல்

தற்போது இந்த மொத்தமாக 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இதனால் பதக்க பட்டியலில் 62வது இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை தங்க பதக்கம் வெல்லாத காரணத்தால் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

இரண்டு பதக்கம்

இரண்டு பதக்கம்

இந்த தொடரில் இந்தியாவிற்கு மேலும் இரண்டு பதக்கம் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. ஹாக்கி ஆண்கள் போட்டியில் வெண்கலமும், பெண்கள் ஹாக்கி போட்டியில் மூன்று பதக்கங்களில் ஏதாவது ஒரு பதக்கமும் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Wednesday, August 4, 2021, 17:35 [IST]
Other articles published on Aug 4, 2021
English summary
Olympic 2020: Pv Sindu, Lovlina and Meerabai, India won 3 medals so far all from the women in Three different games.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X