For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் 100 மீ நீச்சல் பிரிவில் தங்கம் வென்ற ஆஸ்திரேலியாவின் மெக்கியான்.. புதிய ஒலிம்பிக் ரெக்கார்ட்

டோக்கியோ: பெண்கள் 100 மீ நீச்சல் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை கைலீ மெக்கியான் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார்.

ஒலிம்பிக் 2020 தொடரில் அமெரிக்கா 8 தங்கங்களுடன் 19 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. சீனா 8 தங்கங்களுடன் 13 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவும் பதக்கங்களை குவிக்க தொடங்கி உள்ளது.

Olympic 2020: Kaylee McKeown wins gold for Australia in swimming

ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இரண்டு தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்று இருந்த நிலையில் இன்று கூடுதலாக இன்னொரு பதக்கத்தையும் வென்றது.

பெண்கள் 100 மீ நீச்சல் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை கைலீ மெக்கியான் இன்று காலை வெற்றிபெற்று தங்கம் வென்றார். 57.47 நொடியில் 100 மீ நீச்சல் போட்டியில் வென்று கைலீ மெக்கியான் சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவில் இது புதிய ரெக்கார்ட் ஆகும்.

57.72 நொடியில் 100 மீட்டரை கடந்த இரண்டாவது இடத்தை கனடாவின் கைலி மாஸே பிடித்தார். நீச்சல் 100 மீ பெண்கள் பிரிவின் தகுதி சுற்று போட்டியிலேயே முந்தைய ஒலிம்பிக் ரெக்கார்ட்கள் 4 முறை பிரேக் செய்யப்பட்டது.

மெகா ஏலம்: CSK தக்க வைக்கும் மெகா ஏலம்: CSK தக்க வைக்கும்

அமெரிக்காவின் ஸ்மித், ஆஸ்திரேலிய வீராங்கனை கைலீ மெக்கியான், கனடாவின் கைலி மாஸே இடையே செமி பைனலில் கடும் போட்டி நிலவியது. இதிலேயே அடுத்தடுத்து ரெக்கார்கள் பிரேக் செய்யப்பட்டதால் இறுதி போட்டியில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

இந்த நிலையில் பைனலில் ஆஸ்திரேலிய வீராங்கனை கைலீ மெக்கியான் வென்று தங்கத்தை தட்டி சென்றுள்ளார்.

Story first published: Tuesday, July 27, 2021, 12:51 [IST]
Other articles published on Jul 27, 2021
English summary
Olympic 2020: Kaylee McKeown wins gold for Australia in swimming 100m backstrokes with record timing.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X