For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடக்கி போட்ட மன அழுத்தம்.. எல்லாம் தவறாக முடிந்துவிட்டது.. கலங்கும் டென்னிஸ் ஸ்டார் நயோமி ஒசாக்கா!

டோக்கியோ: மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாக்கா நேற்று தோல்வி அடைந்தது டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எல்லாமே தவறாக முடிந்துவிட்டது, எதுவுமே நினைத்தபடி நடக்கவில்லை என்று நயோமி தனது தோல்வி குறித்து உருக்கமாக பேசி உள்ளார்.

முதல் இரண்டு போட்டிகளில் நயோமி சீனாவின் செங் சென்சாய்க்கு எதிராக 6-1, 6-4 என்ற செட் கணக்கிலும், அதன்பின் சுவிட்சர்லாந்து விக்டோரிஜாவிற்கு எதிராக 6-3, 6-2 என்ற புள்ளிகள் கணக்கிலும் வெற்றிபெற்றார்.

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறை.. 1,500-meter நீச்சல் போட்டி.. தங்கம் வென்று சாதித்த முதல் பெண்ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறை.. 1,500-meter நீச்சல் போட்டி.. தங்கம் வென்று சாதித்த முதல் பெண்

ஆனால் நேற்று நடந்த போட்டியில் செக் குடியரசின் மார்கெட்டாவிடம் தோல்வி அடைந்து நயோமி வெளியேறினார். 6-1, 6-4 என்ற நேர் செட்களில் தோல்விஅடைந்தார் .

தோல்வி

தோல்வி

ஜப்பான் வீராங்கனை நாயோமி ஒசாக்கா கடந்த ஒரு வருடமாகவே மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். சரியாக போட்டிகளில் கவனம் செலுத்த முடியாமல் திணறினார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

கடந்த பிரென்ச் ஓபன் போட்டியில் இருந்தும் கூட நயோமி இதன் காரணமாக வெளியேறினார். அப்போது செய்தியாளர்களை கூட சந்திக்க முடியாத அளவிற்கு கடும் மன அழுத்தத்தில் இருந்தார். இதன் காரணமாகவே கடந்த ஆறு மாதமாக நயோமி ஒசாக்கா ஓய்வில் இருந்தார். தனக்கு மன அழுத்தம் மற்றும் அச்சங்கள் இருப்பதாக வெளிப்படையாக நயோமி அறிவித்து இருந்தார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இதனால் பெரிதாக தொடரில் பங்கேற்காமல் சில பயிற்சி ஆட்டங்களில் மட்டுமே ஆடிவிட்டு ஒலிம்பிக் வந்தார். போதிய பயிற்சி இல்லாத காரணத்தால் நேற்று நடந்த ஒலிம்பிக் போட்டியில் நயோமி தோல்வி அடைந்துள்ளார். மனு அழுத்தம் கடந்த ஒரு வருடமாக இவரை முடக்கிய நிலையில் தற்போது ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்த வெளியேறி இருக்கிறார்.

பேட்டி

பேட்டி

இது குறித்து உருக்கமான பேட்டி அளித்த நயோமி, நான் மிகவும் கவலையாக இருக்கிறேன். எல்லா தோல்விக்கு பின்பும் நான் கலங்குவது இயல்பு. ஆனால் இந்த தோல்வி மிக மோசமானதாக இருக்கிறது. நான் திட்டமிட்ட எதுவும் சரியாக நடக்கவில்லை. எல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டது.

முடியவில்லை

முடியவில்லை

நான் போட்டு வைத்திருந்த திட்டங்கள் எதுவும் பயன் அளிக்கவில்லை. எனக்கு நிறைய அழுத்தம் இருந்தது. நான் இதற்கு முன் ஒலிம்பிக் போட்டியிலும் விளையாடியது இல்லை. இது எனக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுத்தது. என்னுடைய எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யவில்லை.

பிரேக்

பிரேக்

இதற்கு முன்பும் நீண்ட பிரேக் எடுத்துவிட்டு ஆடி இருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் இப்படி நடந்தது இல்லை. என்னுடைய ஆட்டம், செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை. எனக்கு இந்த அழுத்தத்தை எப்படி தாங்கிக்கொள்வது என்றே தெரியவில்லை, என்று நயோமி ஒசாக்கா குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, July 28, 2021, 12:17 [IST]
Other articles published on Jul 28, 2021
English summary
Olympic 2020: Jappan tennis star Naomi Osaka feels depressed about her olympic knock out.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X