For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏமாற்றம் அளித்த.. ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நயோமி.. ஒலிம்பிக் தீபத்தை ஏற்றியவருக்கே தோல்வி!

டோக்கியோ: ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாக்கா மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செக் குடியரசின் மார்கெட்டாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஒலிம்பிக் 2020 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரை நடத்தும் ஜப்பான் நாடு 8 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று மொத்தமாக 14 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 23ம் தேதி தொடங்கிய இந்த விழாவின் ஒலிம்பிக் தீபத்தை ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாக்கா ஏற்றி வைத்தார்

ஒரே போட்டியில் 5 அறிமுக வீரர்கள்.. மிகப்பெரும் ரிஸ்க் எடுத்த டிராவிட்.. சவாலை எதிர்கொள்ளுமா இலங்கை! ஒரே போட்டியில் 5 அறிமுக வீரர்கள்.. மிகப்பெரும் ரிஸ்க் எடுத்த டிராவிட்.. சவாலை எதிர்கொள்ளுமா இலங்கை!

பல்வேறு நபர்களிடம் மாறி மாறி வரும் இந்த தீபம் கடைசியில் ஒலிம்பிக் கிராமத்தில் நயோமியிடம் அளிக்கப்பட்டது. 23 வயது ஆன கறுப்பின வீராங்கனையிடம் ஒலிம்பிக் தீபத்தை கொடுத்தது பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்தான் இன்று நடந்த டென்னிஸ் போட்டியில் நயோமி தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார்.

நயோமி

நயோமி

இந்த ஒலிம்பிக் தொடரை நயோமி ஒசாக்கா வெற்றியோடுதான் தொடங்கினார். முதலில் சீனாவின் செங் சென்சாய்க்கு எதிராக 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று நம்பிக்கை அளித்தார். அதன்பின் சுவிட்சர்லாந்து விக்டோரிஜாவிற்கு எதிராக 6-3, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார்.

தோல்வி

தோல்வி

இதனால் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நயோமி நன்றாக ஆடுவார், ஜப்பானுக்கு மெடல் வாங்கித்தருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் மார்கெட்டாவிடம் ஒசாக்கா தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார்.

நேர் செட்

நேர் செட்

6-1, 6-4 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து நயோமி வெளியேறினார். இன்று அவரின் ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே சொதப்பலாக அமைந்தது. பொதுவாக சர்வ்கள் செய்வதில் கவனம் ஈர்க்கும் நாயோமி இன்று எனோ மோசமாக திணறினார்.

இரண்டு மாதம்

இரண்டு மாதம்

இந்த ஒலிம்பிக் போட்டிக்காக நயோமி இரண்டு மாதம் ஓய்வில் இருந்தார். மனம் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஓய்வில் இருந்தார். ஓய்விற்கு பின் வந்து இரண்டு போட்டிகளை வென்றாலும் கூட இன்று ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

Story first published: Tuesday, July 27, 2021, 20:06 [IST]
Other articles published on Jul 27, 2021
English summary
Olympic 2020: Japan tennis star Naomi Osaka knocked out after losing to Marketa Vondrousova of the Czech Republic.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X