For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண் சக்திக்கு உதாரணம்.. பாக்சிங்கில் வெண்கலம் வாங்கிய லோவ்லினா.. பிரதமர் மோடி போனில் வாழ்த்து

டோக்கியோ: ஒலிம்பிக் பாக்சிங்கில் வெண்கலம் வென்ற லோவ்லினாவுடன் பிரதமர் மோடி போனில் பேசி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஒலிம்பிக் பெண்கள் பாக்சிங் 69 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் லோவ்லினா தோல்வி அடைந்து அதிர்ச்சி உள்ளார். பெண்கள் பிரிவு பாக்சிங்கில் சிறப்பாக ஆடி வந்தவர் இன்று நடந்த போட்டியில் லேசாக சறுக்கி தோல்வியை தழுவினார்.

ஒலிம்பிக் ஈட்டி எறிதல்.. 3 முயற்சியிலும் சொதப்பிய இந்திய வீரர் ஷிவ்பால் சிங்.. மொத்தமாக வெளியேற்றம் ஒலிம்பிக் ஈட்டி எறிதல்.. 3 முயற்சியிலும் சொதப்பிய இந்திய வீரர் ஷிவ்பால் சிங்.. மொத்தமாக வெளியேற்றம்

செமி பைனலில் துருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலியிடம் 5:0 என்ற புள்ளி கணக்கில் லோவ்லினா வீழ்ந்தார். செமி பைனலில் தோல்வி அடைந்த காரணத்தால் இவர் வெண்கலம் வென்றார்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இன்று போட்டியில் இவருக்கு வெற்றிபெறும் வாய்ப்புகள் இருந்தது. ஆனால் இன்று தொடக்கத்தில் இருந்தே சுர்மனேலி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதால் லோவ்லினா தோல்வியை தழுவினார். இன்றைய போட்டியில் லோவ்லினா ஸ்டைல் லேசாக மிஸ் ஆனது. அவரின் அந்த வேகம் இந்த போட்டியில் இல்லை.

பதக்கம்

பதக்கம்

இதுவே அவரின் தோல்விக்கும் காரணமாக இருந்தது. லோவ்லினா வாங்கிய வெண்கலம் காரணத்தால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்தியா மொத்தமாக 2 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது. அதேபோல் 1 வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளது.

 பெண் சக்தி

பெண் சக்தி

வெண்கலம் வென்ற லோவ்லினாவுடன் பிரதமர் மோடி போனில் பேசி உள்ளார். போட்டிக்கு பின் லோவ்லினாவிற்கு போன் செய்த பிரதமர் மோடி இந்தியாவிற்காக வெண்கலம் வென்றதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெண் சக்திக்கு உதாரணமாக லோவ்லினா பதக்கம் வென்று இருக்கிறார்.

 பெருமை

பெருமை

உங்களின் இந்த வெற்றி மொத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்க கூடியது. முக்கியமாக அசாம் மாநிலத்திற்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் உங்களின் வெற்றி பெருமை சேர்க்க கூடிய ஒரு வெற்றி. உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி போனில் வாழ்த்தி உள்ளார்.

Story first published: Wednesday, August 4, 2021, 17:32 [IST]
Other articles published on Aug 4, 2021
English summary
Olympic 2020: PM Narendra Modi spoke to Lovlina Borgohain as she won a bronze medal, and congratulated her for the achievement.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X