For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவை "பீட்" செய்த ஜப்பான்.. 15 தங்கம் வாங்கி அசத்தல்.. தொடர்ந்து முதலிடத்தில் கலக்கும் சீனா!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் 2020 தொடரில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

2020 ஒலிம்பிக் போட்டிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எல்லா வருடமும் போல இந்த வருடமும் ஒலிம்பிக்கில் சீனா, ஜப்பான், அமெரிக்கா ரஷ்யா (ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி) ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Olympic 2020: the USA goes down to 3rd place in the medal tally, China continues on the top

இந்தியா இந்த ஒலிம்பிக் தொடரில் ஒரே ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. பளு தூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு பதக்கம் வென்றார். இதனால் இந்தியா தற்போது பதக்க பட்டியலில் 48வது இடத்தில் உள்ளது.

சீனா பதக்க பட்டியலில் 16 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என்று 33 பதக்கங்களை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவை ஜப்பான் முந்தி உள்ளது. ஜப்பான் 15 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என்று 26 பதக்கங்களை பெற்று 2வது இடத்தில் உள்ளது.

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி.. 3 தோல்விக்கு பின் மீண்டு வந்த இந்திய அணி.. அயர்லாந்துக்கு எதிராக வெற்றி ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி.. 3 தோல்விக்கு பின் மீண்டு வந்த இந்திய அணி.. அயர்லாந்துக்கு எதிராக வெற்றி

அமெரிக்கா 14 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலம் என்று 41 பதக்கங்களை பெற்று 3வது இடத்தில் உள்ளது. ஆனால் பதக்க எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 9 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என்று 30 பதக்கங்களை பெற்று 4வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா 9 தங்கம், 2 வெள்ளி, 11 வெண்கலம் என்று 22 பதக்கங்களை பெற்று 5வது இடத்தில் உள்ளது.

Story first published: Friday, July 30, 2021, 16:06 [IST]
Other articles published on Jul 30, 2021
English summary
Olympic 2020: the USA goes down to 3rd place in the medal tally, China continues on the top with 16 gold.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X