உயிரிழந்த அக்கா.. மறைத்த பெற்றோர்.. ஒலிம்பிக்கில் இருந்து திரும்பியவுடன்.. கதறி அழுத தனலட்சுமி

திருச்சி: ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்று திருச்சி விமான நிலையம் வந்த தமிழக வீராங்கனை தனலட்சுமி, அவருடைய அக்கா இறந்த செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்கச் செய்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் தொடர், இன்றோடு (ஆக.8) நிறைவடைகிறது. இதில் இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றிருந்தாலும், அதில் தங்கம் வென்றது நீரஜ் தான்.

குவியும் கோடிகள்.. கொட்டும் பரிசு மழை.. இலவச விமான பயணம் - ஒரே இரவில் மாறிய நீரஜ் சோப்ரா வாழ்க்கைகுவியும் கோடிகள்.. கொட்டும் பரிசு மழை.. இலவச விமான பயணம் - ஒரே இரவில் மாறிய நீரஜ் சோப்ரா வாழ்க்கை

டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப்பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. தமிழகத்தில் இருந்து டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தலைமையில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதிவேக பெண்மணி

அதிவேக பெண்மணி

இதில், திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த சேகர்-உஷா தம்பதியரின் மகள் தனலட்சுமியும் (வயது 22) ஒருவர். தடகள வீராங்கனையான இவர் பல்வேறு தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்த தேசிய தடகள போட்டியில் பங்கேற்ற தனலட்சுமி தங்கப்பதக்கம் வென்றார். ஒடிசாவின் டூட்டீஐ விட (11.58) குறைந்த விநாடிகளில் ஓடி(11.39), என்.ஐ.எஸ் (NIS) வளாகத்தில் நடைபெற்ற இரண்டாவது நாள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, அதிவேகப் பெண்மணி என்ற பெருமை பெற்றார். பிறகு, 400 மீட்டர் கலப்பு தொடர் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து ஒலிம்பிக்கிற்கு அவர் தகுதிப் பெற்றார்

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

இதையடுத்து, ஒலிம்பிக்கில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட போட்டியில் தமிழகம் சார்பாக பங்கேற்க தேர்வானார். ஆனால், ஒலிம்பிக்கில் இந்திய 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து, அவர்கள் டோக்கியோவில் இருந்து தமிழகம் திரும்பினர். இதற்கிடையே, தனலட்சுமியின் அக்காள் கடந்த 12.7.21 அன்று திடீரென உயிரிழந்துள்ளார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தனலட்சுமியின் கவனம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக அவரது குடும்பத்தினர் அக்கா இறந்ததை தனலட்சுமியிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

கதறி அழுத தனலட்சுமி

கதறி அழுத தனலட்சுமி

இந்நிலையில், விமான நிலையம் வந்த தனலட்சுமியிடம் தகவலை தெரிவித்த போது துக்கம் தாங்காமல் விமான நிலையத்திலேயே கதறி அழுதார். தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றனர். தனலட்சுமி தன்னுடைய அக்கா இறந்த செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது.

சோகம்

சோகம்

இதில், பெரியளவில் பாதிக்க வைத்த சம்பவம் தனலட்சுமியின் பெற்றோர்கள், அவரது அக்காவின் மறைவை அவர் திரும்பி வரும் வரை சொல்லாமல் இருந்தது தான். நாட்டிற்காக ஒலிம்பிக்க்கில் பங்கேற்க சென்ற மகளின் கவனம் திசைமாறிவிடக் கூடாது என்பதனால் அவர்கள் துக்கத்தை மறைத்து தங்களுக்குள்ளேயே அடக்கிக் கொண்டு இருந்தது தான் கொடுமையிலும் கொடுமை!.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
olympic athlete dhanalakshmi sister passed away - ஒலிம்பிக்
Story first published: Sunday, August 8, 2021, 15:58 [IST]
Other articles published on Aug 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X