For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"கடத்தி வரப்பட்டேன்".. ஒலிம்பிக் சாம்பியனின் அதிர்ச்சி வாக்குமூலம்.. போலி பெயரில் வாழ்ந்தது அம்பலம்

லண்டன்: பிரிட்டனை சேர்ந்த நெடுந்தூர ஓட்டப்பந்தய வீரர் முகமது ஃபரா தம்மை பற்றி பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டு, விளையாட்டு உலகத்தையே கதி கலங்க வைத்துள்ளார்.
100 மீ, 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசேன் போல்ட் எப்படியோ, அதே போல் 5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்திற்கு முகமது ஃபரா.

மோசடி செய்கிறதா இங்கிலாந்து அணி.. டியூக் பந்தால் ஜெய்க்கும் ஸ்டோக்ஸ்? 3 முறை புகார் அளித்த இந்தியா மோசடி செய்கிறதா இங்கிலாந்து அணி.. டியூக் பந்தால் ஜெய்க்கும் ஸ்டோக்ஸ்? 3 முறை புகார் அளித்த இந்தியா

2012 லண்டன் ஒலிம்பிக், 2016 ரியோ ஒலிம்பிக் என இரண்டிலும் 5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் டபுள் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர்.

ஒலிம்பிக் சாதனைகள்

ஒலிம்பிக் சாதனைகள்

இதில் 2016 ரியோ ஒலிம்பிக்கில் இவர் செய்த சாதனை தான் இன்னும் பேசப்படுகிறது. 10 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் முகமது ஃபரா ஓடும் போது, அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஓடும் போது ஒரு முறை கீழே விழுந்தால் கதை அவ்வளவு தான். ஆனால் அவர் மீண்டும் தன்னம்பிக்கையுடன் ஓடி, யாரும் எதிர்பாராத வகையில் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.

உண்மை

உண்மை

சிறு வயதில், அகதியாக பெற்றோருடன் லண்டனுக்கு வந்தததாக முகமது ஃபரா பல முறை கூறியுள்ளார். ஆனால், அவர் கீழே விழுந்தும் எழுந்து வென்றதற்கான உண்மையான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. பிபிசிக்கு அவரது வாழ்க்கை தொடர்பான டாக்குமெண்டரியில் அவர் பல உண்மைகளை கூறியுள்ளார்.

கடத்தி வரப்பட்டேன்

கடத்தி வரப்பட்டேன்

அதில், தமது பெயர் முகமது ஃபாரா கிடையாது. உண்மையில் நீங்கள் நினைக்கும் ஆள் நான் கிடையாது. என்னுடைய உண்மையான பெயர் ஹூசைன் அபித் காயின். நாங்கள் சோமாலியாவில் இருந்த போது என்னுடைய தந்தை , அங்கு நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டார். அப்போது ஒரு பெண், என்னை முகமது ஃபரா என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் கடத்தி லண்டனுக்கு அழைத்து சென்றார்.

குழந்தை தொழிலாளி

குழந்தை தொழிலாளி

அங்கு என்னுடைய பெயர் முகமது ஃபரா என்று சொல்லுமாறு மிரட்டினார். லண்டன் வந்ததும் அவர் என்னை விட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நான் ஏழ்மை நிலையில், குழந்தை தொழிலாளியாக பணிபுரிந்தேன்.என்னை பற்றின உண்மை என்னுடைய பி.டி. மாஸ்டர் வாட்டிங்சன்னுக்கு மட்டும் தான் தெரியும். அவர் தான் எனக்கு பிரிட்டன் குடிமகனாக விண்ணப்பம் செய்து, ஓட்டப்பந்தயத்தில் பயிற்சி அளித்தார். முகமது ஃபரா என்ற அந்த நபர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் நினைத்து பாத்ரூம்மில் கதறி அழுவேன்.

கவலையை மறக்க ஓடினேன்

கவலையை மறக்க ஓடினேன்

என் கஷ்டங்களிலிருந்து மறக்க, நான் களத்தில் ஓடத் தொடங்கினேன். நான் ஓடும் போது தான் என்னுடைய பழைய கதையை நான் மறப்பேன். அதனால் எப்போதும் களத்தில் பயிற்சியை மேற்கொண்டு ஓடத் தொடங்கினேன். எனக்குள் நான் பூட்டி வைத்திருந்த இந்த உண்மையை வெளியே சொல்லும் படி, எனது குழந்தைகள் தான் வலியுறுத்தினார்கள் என்றார். முகமது ஃபரா கூறிய இந்த உண்மை அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இதனை வெளியே கூறியதற்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, July 12, 2022, 11:04 [IST]
Other articles published on Jul 12, 2022
English summary
Olympic Great Mo Farah stunning revelation about his past life"கடத்தி வரப்பட்டேன்".. ஒலிம்பிக் சாம்பியனின் அதிர்ச்சி வாக்குமூலம்.. போலி பெயரில் வாழ்ந்தது அம்பலம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X