For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் சின்னம்: ஏன் 5 வளையங்கள்.. 6 நிறங்கள் எதனை குறிக்கிறது.. தெரிந்துக்கொள்ள வேண்டிய பின்னணி!

சென்னை: உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டியின் சின்னத்திற்கு பின்னால் உள்ள வரலாற்றை தெரிந்துக்கொள்ளலாம்.

Recommended Video

Olympic Rings history in Tamil | Meaning behind the 5 Olympic rings | OneIndia Tamil

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கவுள்ளது.

ஒலிம்பிக் தொடக்க விழா.. புதுவகை நடனங்கள்.. 15 நாட்டு தலைவர்கள்.. மற்றும் பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகள்! ஒலிம்பிக் தொடக்க விழா.. புதுவகை நடனங்கள்.. 15 நாட்டு தலைவர்கள்.. மற்றும் பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகள்!

இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், ஒலிம்பிக் சின்னத்திற்கு பின்னால் உள்ள காரணம் இன்னும் பலருக்கும் தெரியாமல் உள்ளது.

ஒலிம்பிக் சின்னம்

ஒலிம்பிக் சின்னம்

ஒலிம்பிக் போட்டிகள் 1896ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ சின்னம் 1913ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பெய்ரே டி கௌபெர்டின் தான் ஒலிம்பிக் சின்னத்தை உருவாக்கியவர். ஆனால் அந்த சின்னம் 1920ம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது.

சின்னத்தின் பின்னணி

சின்னத்தின் பின்னணி

ஒலிம்பிக் போட்டிக்கான சின்னம் 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி இருப்பது போன்று உருவாக்கப்பட்டிருக்கும். அந்த 5 வலையளங்களும் அமெரிக்க, ஆஃப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஓசியானா ஆகிய 5 கண்டங்களை குறிக்கிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் ஒரே இடத்தில் சங்கமித்து ஒன்றாக போட்டியில் கலந்துக்கொள்கின்றன. பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒரே இடத்தில் குவிகின்றனர். இதனை குறிப்பிடும் வகையில் தான் வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டுள்ளது.

சின்னத்தின் நிறங்கள்

சின்னத்தின் நிறங்கள்

ஒலிம்பிக் சின்னத்தின் 5 வளையளங்களும் 5 வெவ்வேறு நிறங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் (நீளம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிகப்பு). இந்த 5 நிறங்கள் 5 கண்டங்களை குறிக்கிறது என தகவல்கள் பரவுகின்றன. ஆனால் அது உண்மை காரணம் அல்ல. 5 வலையளங்களுக்கு பொதுவாக வெள்ளை நிற 'பேக் ரவுண்ட்' கொடுக்கப்பட்டிருக்கும். எனவே உலகின் அனைத்து நாடுகளின் தேசிய கொடியிலும், ஒலிம்பிக் சின்னத்தில் உள்ள 6 நிறங்களில் ஏதாவது ஒன்று இடம்பெற்றிருக்கும் என நம்பப்படுகிறது.

சின்னத்தில் மாற்றம்

சின்னத்தில் மாற்றம்

1913ம் ஆண்டு கௌபெர்டின் ஒலிம்பிக் சின்னத்தை உருவாக்கப்பட்ட பிறகு தற்போது வரை ஒரே ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1986ம் ஆண்டு ஒலிம்பிக் வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னப்படாமல், பிரிக்கப்பட்டது போன்று மாற்றி வடிவமைக்கப்பட்டது. ஆனால் 2010ம் ஆண்டு மீண்டும் பழைய சின்னத்திற்கே மாற்றி அமைத்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

Story first published: Thursday, July 22, 2021, 18:03 [IST]
Other articles published on Jul 22, 2021
English summary
What is the meaning behind the five Olympic Rings, Complete Details u need to know
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X