ஒலிம்பிக் கிராமத்தில் அதிகரிக்கும் கொரோனா.. மேலும் 16 பேர் பாதிப்பு.. இதுவரை 148 பேர் பாதிப்பு!

டோக்கியோ: டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் கிராமத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் தள்ளிவைக்கப்பட்ட போட்டிகள் இந்த வருடம் நடந்து வருகிறது. கொரோனா பரவலுக்கு இடையே மிகுந்த பாதுகாப்போடு ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.

பாதுகாப்பு கருதி இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வீரர்கள், பயிற்சியாளர்கள், கமிட்டியினர், வீரர்களின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் மட்டுமே இந்த முறை ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

 ஒலிம்பிக் பெண்கள் பிரிவு டேபிள் டென்னிஸ்.. சுதிர்தா முகர்ஜி அதிர்ச்சி தோல்வி.. வெளியேற்றம்! ஒலிம்பிக் பெண்கள் பிரிவு டேபிள் டென்னிஸ்.. சுதிர்தா முகர்ஜி அதிர்ச்சி தோல்வி.. வெளியேற்றம்!

இத்தனை பாதுகாப்புகளுக்கு இடையில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும் கூட தொடர்ந்து பல்வேறு வீரர், வீராங்கனைகள் கொரோனா காரணமாக ஒலிம்பிக் மைதானத்தில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கமிட்டியினர், பயிற்சியாளர் குழுவினர் பலர் வரிசையாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி இன்று ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக் கிராமத்தில் இதுவரை 148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. துடுப்பு படகு போட்டியில் கலந்து கொண்ட டச் வீரர்கள் உட்பட பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டச் துடுப்பு படகு போட்டியில் ஒரு கோச், ஒரு வீரர் உட்பட பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் எல்லோரும் தனிமைப்படுத்த ஒப்புக்கொண்டனர். ஒலிம்பிக் கிராமத்தில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டோக்கியோவில் மட்டும் நேற்று 1763 கொரோனா கேஸ்கள் பதிவானது. அதில் 16 கேஸ்கள் ஒலிம்பிக் கிராமத்தில் ஏற்பட்ட கேஸ்கள் ஆகும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics: 16 New Covid Caes found at Tokyo 2020 today, total cases rises to 148.
Story first published: Monday, July 26, 2021, 10:19 [IST]
Other articles published on Jul 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X