For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

4 மணிக்கு எழுந்து.. இந்தியர்களை கோல்ப் பார்க்க வைத்த அதிதி.. ஒலிம்பிக்கில் தரமான ஆட்டம்.. யார் இவர்?

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் அதிதி அசோக் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடி வருகிறார். ஒலிம்பிக்கில் கோல்ப் மீது பெரிதாக யாரும் கவனம் செலுத்தாத நிலையில், அதிதி அசோக் இந்த போட்டியை சுவாரசியமாக்கி உள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கோல்ப் ஆடப்படுகிறது. இந்தியா சார்பாக பெண்கள் பிரிவில் அதிதி அசோக் மற்றும் டாகர் திக்சா 2 பேரும் இன்று ஆடுகிறார்கள். பொதுவாக ஒலிம்பிக் மட்டுமின்றி சர்வதேச அளவிலேயே கோல்ப் போட்டிகளை இந்தியர்கள் அவ்வளவு ஆர்வமாக பார்த்தது கிடையாது.

கோல்ப் விளையாடி அதனால் ஈர்க்கப்பட்டு போட்டிகளை பார்ப்பவர்களை தவிர பெரிய அளவில் கோல்ப் போட்டிகளுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடையாது. ஆனால் அந்த விதியை மாற்றி எழுதி இருக்கிறார் இந்தியாவின் அதிதி அசோக்.

அதிதி அசோக்

அதிதி அசோக்

இந்தியர்களை வீக் எண்ட் காலை 4 மணிக்கே எழுந்து ஒலிம்பிக் கோல்ப் போட்டிகளை பார்க்க வைத்துள்ளார் அதிதி அசோக். ஒலிம்பிக் 2020 தொடரின் கோல்ப் ரவுண்டு 4 ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. இதன் இறுதியில் இந்தியாவின் அதிதி அசோக் மூன்று பதக்கங்களில் ஏதாவது ஒன்று வாங்க வாய்ப்பு வாய்ப்பு உள்ளது. முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பதால் அதிதி அசோக் பதக்கம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

முன்னிலை

முன்னிலை

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்தவர் ரவுண்ட் 2ம் சுற்று முடிவில் முதலிடத்தில் இருந்தார். தங்க பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இவருக்கு இருந்தது.தற்போது இவர் மூன்றாம் இடத்திற்கு பின் தங்கி விட்டாலும். ரவுண்டு நான்கு முடிவில் இவர் மீண்டும் முதல் அல்லது இரண்டாம் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. தொடக்கத்தில் இருந்து போட்டிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த அதிதி இந்தியர்களின் பார்வையை கோல்ப் பக்கம் திருப்பி உள்ளார்.

எப்படி

எப்படி

இந்த ஒலிம்பிக் கோல்ப் போட்டி மொத்தம் 4 சுற்றுகளாக நடக்கும். ஒவ்வொரு சுற்றுக்கு மொத்தம் 18 துளைகளில் பந்துகளை போட வேண்டும். மொத்தமாக 72 துளைகளில் பந்துகளை போட வேண்டும். இதில் குறைந்த ஸ்ட்ரோக் உள்ளவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார். அதாவது ஒரு பந்தை துளையில் போடுவதற்கு குறைவான ஸ்டிரோக்களை எடுத்துக்கொள்ளும் நண்பர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.

வெற்றி

வெற்றி

ஒவ்வொரு துளையின் தூரம், அது அமைந்து இருக்கும் இடம் இதை பொறுத்து அதற்கு என்று குறைந்தபட்ச ஸ்டிரோக் ஒன்று நிர்ணயிக்கப்படும். சில துளைகளுக்கு 4 ஸ்டிரோக் நிர்ணயிக்கப்படும், சில துளைகளுக்கு 3 ஸ்டிரோக் நிர்ணயிக்கப்படும். உதாரணமாக ஒரு துளைக்கு 4 ஸ்டிரோக் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் 4 ஸ்டிரோக்குகளுக்கு (ஷாட்கள்) உள்ளாக பந்தை குழிக்குள் போட்டு இருக்க வேண்டும்.

வெற்றியாளர்

வெற்றியாளர்

நிர்ணயிக்கப்பட்ட ஸ்டிரோக்களை விட கூடுதலாக ஸ்டிரோக் எடுத்துக்கொண்டால் அது பூக்கி அல்லது டபுள் பூக்கி என்று அழைக்கப்படும். அதாவது மோசமான ஆட்டம். நிர்ணயிக்கப்பட்ட ஸ்டிரோக்குகளை விட குறைவான ஒரு ஸ்டிரோக் எடுத்துக்கொண்டால் அது பேர்டி (நல்ல ஆட்டம்) என்று அழைக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட ஸ்டிரோக்குகளை விட 2 ஸ்டிரோக் குறைவாக எடுத்துக்கொண்டால் அது ஈகிள் (மிக சிறந்த ஆட்டம்) என்று அழைக்கப்படும்.

தற்போது

தற்போது

தற்போது ஒலிம்பிக் கோல்ப் பெண்கள் பிரிவில் ஒவ்வொரு சுற்றிலும் தலா 71 ஸ்டிரோக்குகள் வரை மொத்தமாக நிர்ணயிக்கபட்டுள்ளது. இதில் குறைவாக ஸ்டிரோக்குகளை எடுப்பவர்கள் வெற்றியாளர்கள். குறைவான ஸ்டிரோக் எடுத்தால் அதிக நெகட்டிவ் புள்ளிகள் கொடுக்கப்படும் .அதிக நெகட்டிவ் புள்ளிகள் உள்ளவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.

இந்தியா

இந்தியா

தற்போது இந்தியாவிற்காக ஆடி வரும் அதிதி 15 நெகட்டிவ் புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில உள்ளார். இவர் இதுவரை நடந்த மூன்று சுற்றுகளில் 67, 66, 68 புள்ளிகளை பெற்றுள்ளார். மொத்தமாக 201 புள்ளிகளை பெற்றுள்ளார். நான்காவது சுற்றில் 66 அல்லது 65 என்ற புள்ளிகளை பெற்றால் அதிதி பதக்கம் வெள்ள வாய்ப்புகள் எளிதாகும்.

 யார் இவர்

யார் இவர்

இந்தியாவிற்காக கோல்ப் ஆடி வரும் அதிதி அசோக் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவர் ஐரோப்பா ஒலிம்பிக் சுற்ற மற்றும் பெண்கள் ஒலிம்பிக் சர்வதேச அசோசியேஷன் போட்டிகளில் இந்தியாவிற்காக சிறப்பாக ஆடி இருக்கிறார். இதன் மூலம் கடந்த வருட ஒலிம்பிக்கில் முதல்முறை ஆடியவர், இந்த முறை இந்தியாவிற்காக பதக்கம் வெல்லும் நிலையில் இருக்கிறார்.

Story first published: Saturday, August 7, 2021, 12:43 [IST]
Other articles published on Aug 7, 2021
English summary
Olympics 2020: Thanks to Aditi Ashok, for making Indians to wake up early in the morning to watch golf on a week end day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X