For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

7 வயதிலிருந்து மல்யுத்தம்.. உடல் முழுக்க காயம்..ஒலிம்பிக்கில் சர்ப்ரைஸ் தந்த பஜ்ரங் "பாகுபலி" புனியா

டோக்கியோ: சிறு வயதில் இருந்தே தீவிரமாக மல்யுத்த பயிற்சி மேற்கொண்டு வந்த இந்திய வீரர் பஜ்ரங் புனியா டோக்கியோ மல்யுத்தத்தில் தற்போது செமி பைனல் வரை சென்றுள்ளார். இதனால் முதல் ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வெல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

மல்யுத்தத்தின் 50 கிலோ பெண்கள் ஆட்டம்.. 3:1 என்ற புள்ளி கணக்கில்.. இந்தியாவின் சீமா பிஸ்லா தோல்வி மல்யுத்தத்தின் 50 கிலோ பெண்கள் ஆட்டம்.. 3:1 என்ற புள்ளி கணக்கில்.. இந்தியாவின் சீமா பிஸ்லா தோல்வி

இன்று காலை ஒலிம்பிக் மல்யுத்தம் ஆண்கள் 65kg ஆட்டம் 1/8 பைனல் ஆட்டத்தில் பஜ்ரங் புனியா சிறப்பாக வெற்றிபெற்றார். இந்த போட்டியில் கிரகஸ்தான் வீரர் ஏர்னேசரை பஜ்ரங் புனியா டேக் டவுன் புள்ளி அடிப்படையில் வீழ்த்தினார்.

அடுத்த வெற்றி

அடுத்த வெற்றி

அதன்பின் காலிறுதியில் ஈரான் வீரர் மோர்டேசாவை பஜ்ரங் எதிர்கொண்டார். இதில் 2:1 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று பஜ்ரங் புனியா செமி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் ஆடும் செமி பைனல் போட்டி இன்று பிற்பகல் 2.52 மணிக்கு நடக்க உள்ளது. இதில் ஹசர்பைஜான் நாட்டின் ஹாஜியை இதில் பஜ்ரங் புனியா எதிர்கொள்ள இருக்கிறார்.

 போராட்டம்

போராட்டம்

இந்தியாவிற்கு பதக்கம் வாங்குவதற்காக போராடிக்கொண்டு இருக்கும் பஜ்ரங் புனியா ஹரியானவை சேர்ந்தவர். ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜார் என்ற சின்ன மாவட்டத்தில் பிறந்தவர். இவர் தன்னுடைய 7 வயதில் இருந்தே மல்யுத்தம் ஆடி வருகிறார். இவரின் அப்பா மல்யுத்த வீரர். ஊருக்குள் சிறிய அளவிலான போட்டிகளில் ஆடியவர், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தேசிய அளவில் கவனம் பெற தொடங்கினார். ஆனால் இவரின் கனவுகளுக்கு பணம் தடையாக இருந்தது.

பணம் தடை

பணம் தடை

பஜ்ரங் அப்பாதான் அவருக்கு முறையாக தொடக்க கால பயிற்சிகளை கொடுத்து இருக்கிறார். 2015ல் பஜ்ரங் தேசிய அளவிலான போட்டிகளில் ஆட வேண்டும் என்பதற்காக மொத்த குடும்பமும் சோனிபட் மாறியது. உள்ளூர் போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகளில் ஆடி கவனம் ஈர்த்தவர் ஆசிய போட்டிகளில்தான் இந்திய பாக்சிங் தேர்வாளர்களை திரும்பி பார்க்க வைத்தார்.

வெண்கலம்

வெண்கலம்

2013 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் செமி பைனல் வரை பஜ்ரங் சென்றார். செமி பைனலில் இவர் தோல்வி அடைந்து இருந்தாலும் முதல் போட்டியிலேயே வெண்கலம் வாங்கி நம்பிக்கை கொடுத்தார். 2013 உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் ரெப்சேஜ் முறையில் வெண்கலம்வென்றார். 2014 காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்காக வெள்ளி வாங்கினார்.

 வெற்றி

வெற்றி

2014 ஆசிய போட்டிகளில் மீண்டும் வெள்ளி பதக்கம் பெற்றார். 2014 ஆசிய போட்டிகளிலும் இந்தியாவிற்காக வெள்ளி வாங்கி அசத்தினார். 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வாங்காமல் ஏமாற்றம் அளித்தார். 2017 ஆசிய கோப்பை போட்டியில் தங்கமும், 2018 ஆசிய கோப்பை போட்டியில் தங்கமும், வென்றார். அதேபோல் 2018 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி, 2019ல் வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்றார்.

தேசிய

தேசிய

கடந்த சில வருடங்களாக தேசிய அளவிலான போட்டிகளில் பெரிதாக ஆடாமல் ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டார். நேரடியாக ஒலிம்பிக் தகுதி சுற்றில் கலந்து கொண்டு இந்தியா சார்பாக தேர்வானவர் தற்போது செமி பைனல் வரை சென்றுள்ளார். கடந்த வருடமே கொரோனா காரணமாக ஒலிம்பிக் பாதிக்கப்பட்டதால் மீண்டும் தொடக்கத்தில் இருந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

காயம்

காயம்

உடலில் பல இடங்களில் இவருக்கு காயம் இருக்கிறது. லீக் போட்டிகளில் கடுமையாக காயம் அடைந்தவர் அதே காயங்களோடு தொடர்ந்து ஆடி வருகிறார். செமி பைனல் சென்றுள்ளதால் முதல் ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வெல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

Story first published: Friday, August 6, 2021, 21:01 [IST]
Other articles published on Aug 6, 2021
English summary
Olympics 2020: All you need to know about Indian wrestler Bajrang Punia who qualified to semi finals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X