ஒலிம்பிக்.. துடுப்பு படகு போட்டியில் கலக்கும் இந்தியா.. செமி பைனலுக்கு முன்னேறிய அரவிந்த் - அர்ஜுன்

டோக்கியோ: துடுப்பு படகு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியா சார்பாக அரவிந்த் சிங் மற்றும் அர்ஜுன் லால் ஆகியோர் செமி பைனலுக்கு தேர்வாகி உள்ளனர்.

ஒலிம்பிக் தொடரில் இந்தியா பல்வேறு பிரிவுகளில் ஏமாற்றம் அளித்து வருகிறது. முக்கியமாக இரண்டு நாட்களாக நடந்த துப்பாக்கி சூடு பிரிவில் இந்தியா மோசமாக ஆடியது. ஒரே ஆறுதலாக தற்போது துடுப்பு படகு போட்டியில் இந்தியா சிறப்பாக கலக்கி வருகிறது.

ஒலிம்பிக் 2020 வில்வித்தை ரேங்கிங் சுற்று.. மோசமாக சொதப்பிய இந்திய வீரர்கள்.. 3 வீரர்களும் சறுக்கல்! ஒலிம்பிக் 2020 வில்வித்தை ரேங்கிங் சுற்று.. மோசமாக சொதப்பிய இந்திய வீரர்கள்.. 3 வீரர்களும் சறுக்கல்!

ஒலிம்பிக் 2020 தொடரில் முதல் கட்டமாக துடுப்பு படகு போட்டியின் பல்வேறு பிரிவு ஆட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக தகுதி போட்டிகள், முதல் சுற்று போட்டிகள் இதில் நடைபெற்றது.

எப்போது

எப்போது

பல்வேறு சுற்று ஆட்டங்களுக்கு பிறகு ஜூலை 30ம் தேதி இறுதிப்போட்டிகள் அனைத்து பிரிவிலும் நடக்க உள்ளது. இன்று முதல் கட்டமாக பெண்கள், ஆண்கள் பிரிவில் 16 தகுதி சுற்று ஹீட் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றன. இன்று repechage எனப்படும் அடுத்தகட்ட சுற்றுகள் நடைபெற்றன.

படகு

படகு

துடுப்பு படகு போட்டியில் நேற்றே இந்திய தரப்பு சிறப்பாக ஆடி இருந்தது. நேற்று இரட்டையர்களுக்கான துடுப்பு படகு போட்டி தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக அரவிந்த் சிங் மற்றும் அர்ஜுன் லால் ஆகியோர் கலந்து கொண்டனர். இரட்டையர் பிரிவில் இவர்கள் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார்கள்.

தகுதி சுற்று

தகுதி சுற்று

தகுதி சுற்று போட்டியில் இவர்கள் இருவரும் ஐந்தாவது இடத்தை பிடித்தனர். 6:40.33 நிமிடத்தில் தங்கள் சுற்றுகளை இவர்கள் முடித்தனர். இதையடுத்து இன்று நடக்க இருந்த இரண்டாம் கட்ட சுற்றான repechage சுற்றுக்கு இருவரும் தகுதி பெற்றனர். இன்று நடந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி இரண்டு பேரும் செமி பைனலுக்கு தேர்வாகி உள்ளனர்.

செமி பைனல்

செமி பைனல்

இன்று நடந்த போட்டியில் 6.51.36 நிமிடத்தில் தங்கள் சுற்றுகளை அரவிந்த் மற்றும் அர்ஜுன் நிறைவு செய்தனர். இதன் மூலம் மூன்றாம் இடத்திற்கு இந்திய அணி முன்னேறியது. இதன் காரணமாக தற்போது செமி பைனல் துடுப்பு படகு போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics 2020: Arjun and Arvind from India qualify for the Rowing semi-final today.
Story first published: Sunday, July 25, 2021, 7:32 [IST]
Other articles published on Jul 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X