ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனல் பி.. இந்தியாவிற்கு 11வது இடம்!

டோக்கியோ: ஒலிம்பிக் துடுப்பு படகு ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் 11வது இடம் பிடித்தனர் அரையிறுதியில் இவர்களின் இணை தோல்வி அடைந்த நிலையில் மொத்தமாக ரேங்கிங்கில் 11வது இடம் பிடித்தனர்.

ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் நேற்று இந்திய இணை தோல்வி அடைந்தது. முன்னதாக இந்திய வீரர்கள் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் ஒலிம்பிக் துடுப்பு படகு இரட்டையர் காலிறுதி போட்டியில் 6.51.36 நிமிடத்தில் வென்று இவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

இதனால் இவர்கள் ஆடிய செமி பைனல் போட்டி அதிக கவனம் பெற்றது. செமி பைனலில் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் ஜோடி 6வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. 6:24.41 நிமிடங்களில் இலக்கை அடைந்து இந்தியா 6வது இடம் மட்டுமே பிடித்தது.

ஒலிம்பிக் வில்வித்தை போட்டி.. அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அட்டானு தாஸ்.. 6-4 புள்ளி கணக்கில் வெற்றி!ஒலிம்பிக் வில்வித்தை போட்டி.. அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அட்டானு தாஸ்.. 6-4 புள்ளி கணக்கில் வெற்றி!

இந்த நிலையில் இன்று ரேங்கிங் சுற்று போட்டிகள் நடந்தது. மொத்தமாக இவர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டாலும், மொத்த குழுவில் எத்தனையாவது இடம் பிடிக்கிறார்கள் என்பதை உறுதி செய்வதற்காக இந்த ஆட்டம் நடைபெற்றது. இன்று நடந்த பைனல் பி குழு ரேங்கிங் ஆட்டத்தில் இந்தியா 5வது இடம் பிடித்தது.

6:29.66 நிமிடத்தில் இலக்கை அடைந்து 5வது இடம் பிடித்தது. இதனால் மொத்தமாக துடுப்பு படகு ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் 11வது இடம் பிடித்து தொடரில் இருந்தே வெளியேறி உள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Arvind Singh and Arun Lal Jat finished 11th in Men’s Double Sculls overall, after gets 5th in final B.
Story first published: Thursday, July 29, 2021, 8:33 [IST]
Other articles published on Jul 29, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X