For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் 2020 ஈட்டி எறிதல்.. இந்தியாவின் அன்னு ராணி ஏமாற்றம்.. தகுதி சுற்றிலேயே வெளியேற்றம்!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

ஒலிம்பிக் 2020 தொடரின் தடகள போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் மோசமாக ஆடி வருகிறார்கள். வட்டு எறிதல் போட்டிகளில் மட்டும் இந்தியாவின் கமலபிரீத் கார் நம்பிக்கை அளித்து வருகிறார். இவர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டார்.

Olympics 2020 Athletics: Indias Annu Rani loses in Javelin Throw qualifier round

இதை தவிர தடகள போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் சரியாக நம்பிக்கை அளிக்கும் அளவிற்கு ஆடவில்லை. இன்று ஒலிம்பிக் 2020 தொடரின் ஈட்டி எறிதல் போட்டிகள் நடைபெற்றது. இதில் 63.00 புள்ளிகளுக்கு அதிகம் எடுக்கும் வீராங்கனைகள் அல்லது முதல் 12 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக் 2020.. ஹாக்கி செமி பைனல் முதல் மல்யுத்தம் வரை.. இந்தியா இன்று ஆடும் போட்டிகள் விவரம்ஒலிம்பிக் 2020.. ஹாக்கி செமி பைனல் முதல் மல்யுத்தம் வரை.. இந்தியா இன்று ஆடும் போட்டிகள் விவரம்

இதில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட அன்னு ராணி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார். இன்று நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் தகுதி சுற்றில் 14வது இடம் பிடித்து அன்னு ராணி வெளியேறி உள்ளார்.

54.04 புள்ளிகள் மட்டுமே பெற்று இவர் 14வது இடம் பிடித்தார். இவரின் தனிப்பட்ட கெரியர் பெஸ்ட் 61 ஆகும். ஆனால் அந்த புள்ளியை இவரால் இன்று எடுக்க முடியவில்லை. முதல் 12 இடங்களுக்குள் வர முடியாததால் தகுதி சுற்றிலேயே இவர் வெளியேறினார்.

Story first published: Tuesday, August 3, 2021, 11:12 [IST]
Other articles published on Aug 3, 2021
English summary
Olympics 2020 Athletics: India's Annu Rani loses in Javelin Throw qualifier round today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X