33 வருட ரெக்கார்ட் காலி.. 100மீ பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் 3 பதக்கங்களையும் அள்ளிய ஜமைக்கா.. சாதனை

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100மீ பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் 3 பதக்கங்களையும் அள்ளி ஜமைக்கா நாடு சாதனை படைத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சிறிய நாடுகள் பல சிறப்பாக ஆடி வருகிறது. குறைவான மக்கள் தொகை கொண்டு இருக்கும் நாடுகள், வறுமையில் கஷ்டப்படும் ஆப்ரிக்க நாடுகள், போரால் சிரமப்பட்டு வரும் இஸ்லாமிய நாடுகள் பல சிறப்பாக ஆடி பதக்கங்களை பெற்று வருகிறது.

ஒலிம்பிக் 2020 குதிரை ஓட்டம்.. 2வது சுற்று முடிவில் இந்திய வீரர் மிர்ஸா 13வது இடத்திற்கு பின்னடைவு!ஒலிம்பிக் 2020 குதிரை ஓட்டம்.. 2வது சுற்று முடிவில் இந்திய வீரர் மிர்ஸா 13வது இடத்திற்கு பின்னடைவு!

பல்வேறு நாடுகளுக்கு ஒலிம்பிக் போட்டிகள்தான் சிறந்த அடையாளமாக மாறி உள்ளது.

ஜமைக்கா

ஜமைக்கா

அந்த வகையில் நேற்று 100மீ பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா மிகப்பெரிய சாதனையை படைத்தது. இதில் முதல் மூன்று இடங்களையும் ஜமைக்கா பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. நேற்று இதில் ஜமைக்காவும் எலைன் தாம்ப்சன் ஹெரா முதல் இடம் பிடித்தார். 10.61 நொடிகளில் இவர் 100 மீட்டரை கடந்தார்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

இதன் மூலம் இரண்டாவது வேகமான பெண் ஓட்டப்பந்தய வீரர் என்ற சாதனையை அடைந்துள்ளார். 1988 அமெரிக்காவின் புளோரன்ஸ் க்ரிப்த் 10.61 நொடியில் 100 மீட்டரை கடந்த நிலையில், ஜமைக்காவின் எலைன் தாம்ப்சன் ஹெரா அதே சாதனையை 33 வருடங்களுக்கு பின் சமன் செய்துள்ளார்.

மூன்றாம் இடம்

மூன்றாம் இடம்

அதோடு நேற்று நடந்த இந்த பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி ஆன் பிரஷர் 10.74 நொடிகளில் இலக்கை அடைந்து 2வது இடம் பிடித்தார். இன்னொரு பக்கம் ஜமைக்காவின் ஷெரிகா ஜாக்சன் 10.76 நொடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடம் பிடித்தார்.

சாதனை

சாதனை

ஒரே நாட்டை சேர்ந்த மூன்று வீராங்கனை தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர். இதில் ஷெல்லி மற்றும் ஷெரிகா இடையே இரண்டாம் இடத்தை பிடித்தது யார் என்ற சந்தேகம் இருந்தது. கடைசியில் ஹெல்லிதான் இரண்டாம் இடம் பிடித்தார் என்பது வீடியோ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics 2020 Athletics: Jamaica wins top 3 medals in women 100m running and breaks 33 year old record.
Story first published: Sunday, August 1, 2021, 9:02 [IST]
Other articles published on Aug 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X