51.46 நொடி.. பெண்கள் 400மீ தடை தாண்டும் ஓட்டத்தில்.. அமெரிக்காவின் மெக்லாகின் அசாத்திய உலக சாதனை!

டோக்கியோ: பெண்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லாகின் உலக சாதனை படைத்துள்ளார். 51.46 நொடிகளில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ச்சியாக நீச்சல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் பல்வேறு சாதனைகள் வரிசையாக பிரேக் செய்யப்பட்டு வருகிறது.

முக்கியமாக ஓட்டப்பந்தயத்தில் வரிசையாக ஒலிம்பிக் சாதனைகள், உலக சாம்பியன்ஷிப் சாதனைகள் மற்றும் உலக சாதனைகள் பிரேக் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று பெண்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.

ஒலிம்பிக் 2020 மல்யுத்தம்.. தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிக்குமார் தஹியா.. காலிறுதிக்கு தகுதி!ஒலிம்பிக் 2020 மல்யுத்தம்.. தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிக்குமார் தஹியா.. காலிறுதிக்கு தகுதி!

பெண்கள்

பெண்கள்

பெண்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லாகின் 51.46 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தன்னுடைய பழைய உலக ரெக்கார்டை சிட்னி மெக்லாகின் முறியடித்துள்ளார். அதோடு ஒலிம்பிக்கில் தங்கமும் வென்றுள்ளார்.

டிரையல்

டிரையல்

கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த டிரையல் ஆட்டங்களில் 400மீ பெண்கள் தடை தாண்டும் ஓட்டத்தில் 51.90 நொடியில் வெற்றிபெற்று புதிய உலக சாதனை படைத்தார். அந்த சாதனையை இன்று ஒலிம்பிக் மேடையில் சிட்னி மெக்லாகின் முறியடித்துள்ளார். இந்த போட்டியில் இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் தலில்லா முகமது பிடித்தார்.

இலக்கு

இலக்கு

இவர் 51.58 நொடிகளில் இலக்கை அடைந்தார். இவர் கடந்த ஒலிம்பிக்கில் அமெரிக்காவிற்காக 400மீ தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வாங்கியவர். இந்த முறை வெள்ளி வாங்கி உள்ளார். இவரின் சிட்னி மெக்லாகினின் கடந்த மாத ரெக்கார்டை இவரும் முறியடித்துள்ளார். முதல் இரண்டு பதக்கங்களையும் அமெரிக்க வீராங்கனைகள் வென்ற நிலையில் நெதர்லாந்து வீராங்கனை பெம்கே 52.03 நொடிகளில் இலக்கை அடைந்து 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தை கடந்து 3ம் இடம் பிடித்தார்.

வேகமான வீராங்கனை

வேகமான வீராங்கனை

சிட்னி மெக்லாகின் 51.46 நொடிகளில் இன்று வென்றதன் மூலம் 400மீ தடை தாண்டும் ஓட்டத்தில் உலகிலேயே வேகமாக வீராங்கனை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். 21 வயதே நிரம்பிய சிட்னி மெக்லாகின் நிகழ்த்தி இருக்கும் இந்த சாதனை தடகள உலகில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போது இவர் வாழ்நாள் பார்மில் இருக்கிறார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதனால் வரும் நாட்களில் மேலும் பல சர்வதேச போட்டிகளில் இதைவிட சிறப்பாக சாதனைகளை படைக்கும் வாய்ப்புகளும் உள்ளது. தடை தாண்டும் பெண்கள் 400மீ பிரிவு ஆட்டத்தில் சிட்னி மெக்லாகின் புதிய ஜாம்பவான் வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். இன்று தலில்லா முகமதுதான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் மீது அதிக கவனம் இருந்த நிலையில் சத்தமே இல்லாமல் சிட்னி மெக்லாகின் தங்கம் வென்றுள்ளார்.

கடினம்

கடினம்

தடை தாண்டும் ஓட்டம் என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். 400மீட்டர் தூரத்தை 10 தடைகளை தாண்டி ஓட வேண்டும். சாதாரண 400மீட்டர் ஓட்டமே மிகவும் கடினமானது என்ற நிலையில் 10 தடைகளுடன் ஓடுவது என்பது மிக மிக சவாலான விஷயம் ஆகும். ஆனால் இப்படிப்பட்ட சவாலான ஆட்டத்தில் கூட அடுத்தடுத்து புதிய உலக ரெக்கார்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

ஆண்கள்

ஆண்கள்

நேற்று ஆண்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ம்ஹோல்ம் புதிய உலக சாதனை படைத்தார். 45.94 நொடிகளில் இலக்கை அடைந்து உலக சாதனை படைத்தார். உலகிலேயே 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 46 நொடிக்கும் குறைவாக இலக்கை அடைந்த ஒரே நபர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

தொடர் சாதனை

தொடர் சாதனை

தன்னுடைய முந்தைய உலக ரெக்கார்டை ஒரே மாதத்தில் கார்ஸ்டென் வார்ம்ஹோல்ம் முறியடித்துள்ளார். நேற்று இந்த ஆட்டத்தில் இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் ராய் பெஞ்சமின் பிடித்தார். அமெரிக்காவின் ராய் பெஞ்சமின் 46.17 நொடிகளில் கடந்து 2ம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள் பிரிவில் 2 தங்கம், 2 வெள்ளியை அமெரிக்க வென்று அசத்தி உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics 2020 Athletics: Sydney McLaughlin breaks world record to win gold in women's 400m hurdles final.
Story first published: Wednesday, August 4, 2021, 9:05 [IST]
Other articles published on Aug 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X