For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரிய நம்பிக்கை.. ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பைனலில் இன்று ஆடும் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.. யார் இவர்?

டோக்கியோ: ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் பைனலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இன்று ஆட உள்ளார்.

Recommended Video

Who Is Neeraj Chopra? | Neeraj Chopra Biography In Tamil | Oneindia Tamil

இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர்களில் மிக முக்கியமானவராக, இந்தியாவின் நம்பர் 1 வீரராக மதிக்கப்படுபவர் நீரஜ் சோப்ரா. 24 வயதான இவர் ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர். இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் ஆப்ஸர் ரேங்கில் பணியாற்றி வருகிறார்.

அண்டர் 20 ஆட்டங்கள் தொடங்கி 2014ல் இருந்தே இந்தியாவிற்காக தேசிய அளவிலான போட்டிகளில் நீரஜ் சோப்ரா ஆடி வருகிறார். 2016 உலக அண்டர் 20 சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஒரே முயற்சிதான்.. ஈட்டி எறிதலில் டாப்பில் வந்து அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா.. பைனலுக்கு தகுதி! ஒரே முயற்சிதான்.. ஈட்டி எறிதலில் டாப்பில் வந்து அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா.. பைனலுக்கு தகுதி!

சாதனை

சாதனை

இந்த போட்டியிலேயே 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய அண்டர் 20 உலக சாதனையை நீரஜ் படைத்தார். இந்தியாவிற்காக அண்டர் 20 தடகளத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் இவர்தான். தேசிய அளவில் ஈட்டி எறிதலில் ரெக்கார்ட் வைத்து இருக்கும் வீரரும் இவர்தான். 88.07மீ என்ற ரெக்கார்ட் தேசிய அளவில் இவர் வசம் உள்ளது.

ஆசிய போட்டி

ஆசிய போட்டி

இதற்கு முன் 2018 ஆசிய போட்டியில் 88.06 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இவர் தங்கம் வென்றார். அதே வருடம் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றார். இந்தியாவிற்காக 2018 ஆசிய போட்டிகளில் தேசிய கொடி ஏந்தி சென்று இருக்கிறார். தற்போது ஒலிம்பிக்கில் இவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்

ஒலிம்பிக்

ஒலிம்பிக்கில் நடந்த தகுதி சுற்றில் மிக எளிதாக முதல் முயற்சியிலேயே நீரஜ் சோப்ரா வெற்றிபெற்று பைனல் சென்றார். முதல்முறை ஈட்டி எறிந்து அதை 86.65 மீட்டர் தூரத்தில் வீசினார். இதனால் எளிதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். தகுதி சுற்றில் 83.50மீ தூரத்திற்கு ஈட்டி எறியும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் நீரஜ் எளிதாக பைனல் சென்றார்.

பைனல்

பைனல்

இன்று நடக்கும் பைனல் போட்டியில் நீரஜ் சோப்ரா இந்தியாவிற்காக பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . நீரஜ் சோப்ரா உலகின் 16வது ரேங்க் கொண்ட வீரர். ஈட்டி எறிதல் போட்டிகளில் தனிப்பட்ட வகையில் உலகிலேயே முக்கியமான வீரர்களில் ஒருவராக நீரஜ் சோப்ரா மதிக்கப்படுகிறார். ஆனால் இன்று இவர் பதக்கம் வெல்வது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.

சவால்

சவால்

காயத்தில் இருந்து இப்போதுதான் சோப்ரா மீண்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஒலிம்பிக் தகுதி சுற்றில் இவர் தனது பர்சனல் ரெக்கார்டை கூட தொட முடியவில்லை. ஆனாலும் பைனலுக்கு தகுதி பெற்று உள்ளதால் இன்றைய ஆட்டம் அவருக்கு கொஞ்சம் சவாலாகவே இருக்கும்.

ஏன்

ஏன்

அதோடு ஜெர்மனி வீரர் வெட்டர் இன்று வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. உலகின் நம்பர் 1 வீரரான இவர் குழு ஆட்டத்தில் 85.64மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதனால் இவரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அதே சமயம் இவர்தான் தனிப்பட்ட வகையில் மிக சிறப்பான பர்சனல் ரெக்கார்ட் வைத்து இருக்கும் வீரர்.

ஏன்

ஏன்

வெட்டர் தனிப்பட்ட வகையில் 97.76 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தனிப்பட்ட வகையில் ரெக்கார்ட் வைத்து இருக்கிறார். இதனால் அவரை முந்தி நீரஜ் சோப்ரா தங்கம் வெல்ல வாய்ப்பு குறைவு. ஆனாலும் கூட கண்டிப்பாக ஈட்டி எறிதலில் இந்தியாவிற்காக ஏதாவது ஒரு பதக்கம் வாங்கி கொடுக்க நீரஜ் சோப்ராவிற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Saturday, August 7, 2021, 12:42 [IST]
Other articles published on Aug 7, 2021
English summary
Olympics 2020 Athletics: Who is Neeraj Chopra? All you need to know about India's Javelin Throw finalist at the age of 24.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X