ஒலிம்பிக் 2020.. ஆண்கள் பாக்சிங் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சதிஷ் குமார் தோல்வி.. வெளியேற்றம்

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் ஆண்கள் ஹெவிவெயிட் காலிறுதி பாக்சிங்கில் இந்திய வீரர் சதிஷ் குமார் தோல்வி அடைந்துள்ளார். உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலவிடம் இந்தியாவின் சதிஷ் குமார் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

2020 ஒலிம்பிக்கில் ஆண்கள் பாக்சிங்கில் இந்தியாவின் நம்பிக்கையாக இருந்த சதிஷ் குமாரும் தற்போது தோல்வியை தழுவி இருக்கிறார். இந்த தொடரில் இந்தியா பாக்சிங்கில் அதிகம் நம்பிய அமித் பங்கால், மனிஷ் கவுசிக், விகாஸ் கிருஷ்ணன், ஆஷிஷ் சவுத்திரி ஆகிய எல்லோரும் தோல்வி அடைந்து வெளியேறிவிட்டனர்.

இதனால் ஆண்கள் பாக்சிங்கில் இன்று ஒரே நம்பிக்கையாக சதிஷ் குமார் இருந்தார். ஆனால் அவரும் இன்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சதிஷ்

சதிஷ்

உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலவிடம் சதிஷ் மோதினார். இன்று வெற்றிபெற்றால் கண்டிப்பாக சதிஷ் ஒரு பதக்கம் வெல்வார் என்ற நிலை இருந்தது. ஆனால் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலவ் ஆதிக்கம் செலுத்தினார்.

முதல் ரவுண்ட்

முதல் ரவுண்ட்

முதல் ரவுண்டில் மிக எளிதாக அனைத்து 10 புள்ளிகளையும் பகோதிர் ஜலோலவ் வென்றார். முதல் சுற்று முழுக்க சதிஷ் பெரிய பிளான் எதுவும் இல்லாமல் ஆடியது போல இருந்தது. இரண்டாவது சுற்றிலும் பகோதிர் ஜலோலவின் ஆதிக்கம் தொடர்ந்தது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இரண்டாவது சுற்றிலும் அனைத்து நடுவர்களிடம் இருந்தும் அனைத்து புள்ளிகளையும் பகோதிர் கைப்பற்றினார். இதிலும் மொத்தமாக 50 புள்ளிகளை அவர் பெற்றார். இந்த சுற்றிலும் சதிஷ் எந்த புள்ளியும் பெறவில்லை.

கடைசி ரவுண்ட்

கடைசி ரவுண்ட்

பின்னர் கடைசி சுற்றிலும் சதிஷ் எந்த புள்ளியும் பெறவில்லை. இதனால் மொத்தமாக 5-0 என்ற கணக்கில் சதிஷ் குமார் படுதோல்வி அடைந்தார். அதோடு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics 2020 Boxing: India's Satish Kumar loses to Uzbekistan JALOLOV Bakhodir in quarter finals.
Story first published: Sunday, August 1, 2021, 10:08 [IST]
Other articles published on Aug 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X