"ஆர்மி பவர்".. கண்களில் ரத்தம் சொட்ட சொட்ட பாக்சிங் ஆடிய இந்திய வீரர்.. சதிஷின் "ரோசமான" குத்துசண்டை

டோக்கியோ: ஆண்கள் ஹெவிவெயிட் காலிறுதி பாக்சிங்கில் இந்திய வீரர் சதிஷ் தோல்வி அடைந்து இருந்தாலும், முகம் முழுக்க காயங்களோடு இன்று கடைசி வரை சதிஷ் போராடியது பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஒலிம்பிக் 2020 தொடரில் ஆண்கள் ஹெவிவெயிட் காலிறுதி பாக்சிங்கில் இந்திய வீரர் சதிஷ் குமார் தோல்வி அடைந்துள்ளார். உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலவிடம் இந்தியாவின் சதிஷ் குமார் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

டான்சிங் ரோஸ்னு நினைப்போ? வெற்றிபெற்றதும் டான்சிங் ரோஸ்னு நினைப்போ? வெற்றிபெற்றதும்

இதனால் ஆண்கள் பாக்சிங்கில் ஒரே நம்பிக்கையாக சதிஷ் குமார் இருந்தார். ஆனால் இன்று மொத்தமாக 5-0 என்ற கணக்கில் சதிஷ் குமார் படுதோல்வி அடைந்தார். அதோடு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

ரத்தம்

ரத்தம்

இந்த போட்டியில் சதிஷ் குமார் கண்களில் ரத்தம் சொட்ட சொட்ட ஆடினார். இவரின் வலது கண்ணுக்கு கீழே காயம் ஏற்பட்டு இருந்தது. முகத்தில் பகோதிர் குத்தியதில் கண்களிலும் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக கண்களில் இருந்த சில துளிகள் ரத்தம் சொட்டியது. ஒரே குத்தில் சதிஷின் கண்ணில் இருந்த ரத்தம் பகோதிர் தோள்பட்டையில் தெறித்தது.

போராட்டம்

போராட்டம்

முதல் ரவுண்டிலேயே முகத்தில் ரத்தம் வந்தாலும் வாக் அவுட் கொடுக்காமல் கடைசி வரை சதிஷ் ரிங்கிற்கு உள்ளேயே போராடினார். தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, கடைசி வரை ஆடுவோம் என்று விடாமல் போராடினார். கடந்த போட்டியிலேயே ஜமைக்கா வீரருக்கு எதிராக நடந்த மேட்சில் இவரின் முகத்தில் காயம் ஏற்பட்டது.

தையல்

தையல்

முகம் முழுக்க ஏற்பட்ட காயம் காரணமாக மொத்தம் 7 இடங்களில் இவரின் முகத்தில் மட்டுமே தையல் போடப்பட்டது. அந்த காயத்தோடுதான் இன்று சதிஷ் பகோதிருடன் மோதினார். இதனால்தான் இன்று இவரின் ஆட்டத்தில் கொஞ்சம் வேகம் குறைவாக இருந்தது. வலியில் துடித்தபடி, கஷ்டப்பட்டு போராடிதான் பகோதிருடன் ஆடினார்.

போராட்டம்

போராட்டம்

நேற்று 7 தையல்.. இன்று கண்ணில் காயம்.. இதனால்தான் ஒரு புள்ளி கூட எடுக்காமல் கடைசியில் 5:0 என்ற புள்ளி கணக்கில் பகோதிரிடம் சதிஷ் தோல்வி அடைந்தார். இன்று நடந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் சதிஷ் கடைசி வரை தன்னுடைய போராட்ட குணத்தை சதிஷ் வெளிப்படுத்தினார். ஒரு ராணுவ வீரருக்கு இருக்கும் திறனை அவர் ரிங்கிற்கு உள்ளேயே வெளிப்படுத்தினார்.

ராணுவ வீரர்

ராணுவ வீரர்

இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் ஆடிய சதிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கபடி வீரரான இவர், ராணுவ அணியின் தலைமை கோச் கொடுத்த அறிவுரையால் பாக்ஸர் ஆனவர். காமன்வெல்த் போட்டியில் ஏற்கனவே வெள்ளி, அதன்பின் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2 வெண்கலம் வென்று இருக்கிறார்.

அசத்தலான ஆட்டம்

அசத்தலான ஆட்டம்

இந்த நிலையில்தான் இன்று கடும் காயங்கள், வலிகளுக்கு இடையிலும் சதிஷ் அசத்தலான ஆட்டம் ஆடி உள்ளார். இன்றைய போட்டியில் சதிஷ் தோல்வி அடைந்து இருந்தாலும் கண்டிப்பாக அவரின் காலிறுதி ஆட்டம் ஒலிம்பிக் பாக்சிங் வரலாற்றில் மிக முக்கியமான ஆட்டமாக நினைவு கூறப்படும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics 2020 Boxing: India's Satish Kumar showed his army spirit against Uzbekistan JALOLOV Bakhodir in quarter finals.
Story first published: Sunday, August 1, 2021, 13:59 [IST]
Other articles published on Aug 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X