டான்சிங் ரோஸ்னு நினைப்போ? வெற்றிபெற்றதும் "ஓவராக" துள்ளிய பாக்சர்.. ப்ச் கடைசியில் இப்படி ஆகிடுச்சே!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020ன் பாக்சிங் காலிறுதி போட்டியில் வென்ற அயர்லாந்து வீரர் வால்ஷ் காயம் காரணமாக வெளியேறி உள்ளார். இவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பதுதான் சுவாரசியமான விஷயமே!

பாக்சிங்கின் பல்வேறு பிரிவு போட்டிகள் ஒலிம்பிக் தொடரில் தற்போது நடந்து வருகின்றன. இன்று காலை ஆண்கள் ஹெவிவெயிட் காலிறுதி பாக்சிங்கில் இந்திய வீரர் சதிஷ் குமார் தோல்வி அடைந்தார்.

உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலவிடம் இந்தியாவின் சதிஷ் குமார் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார். இந்த நிலையில் இன்று பாக்சிங் வெல்டர்வெய்ட் செமி பைனல் போட்டிகள் நடப்பதாக இருந்தது.

பார்க்கில் உட்கார்ந்து மது அருந்திய தடகள வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் சர்ச்சை தொடங்கியது விசாரணைபார்க்கில் உட்கார்ந்து மது அருந்திய தடகள வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் சர்ச்சை தொடங்கியது விசாரணை

ஆனால்

ஆனால்

ஆனால் அயர்லாந்து வீரர் ஐடன் வால்ஷ் காயம் காரணமாக நீக்கப்பட்டதால் இந்த செமி பைனல் போட்டி ரத்து செய்யப்பட்டது. காலிறுதி போட்டியில் மொரிஷியஸ் வீரர் மேர்வான் கிளாரை அயர்லாந்து வீரர் ஐடன் வால்ஷ் வீழ்த்தி வெற்றிபெற்றார். 4:1 என்ற புள்ளி கணக்கில் ஐடன் வால்ஷ் வெற்றிபெற்றார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

இந்த வெற்றிக்கு பின் ஐடன் வால்ஷ் மிகவும் உற்சாகமாக தனது வெற்றியை கொண்டாடினார். ரிங்கிற்கு உள்ளேயே துள்ளி குதித்தார். சார்பட்டா டான்சிங் ரோஸ் போல இவர் குதித்து குதித்து டான்ஸ் ஆடினார். அப்போது திடீரென இவரின் காலில் சுளுக்கு ஏற்படவே மேடையிலேயே காலை பிடித்தபடி உட்கார்ந்தார். வலியில் துடித்தவர் பின்னர் நடக்க முடியாமல் நொண்டியபடி வெளியேறினார்.

கால்

கால்

ஓவராக துள்ளியதால் இவரின் கணுக்காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று எழுந்து நிற்க முடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறார். இன்று இவர் தனக்கு இருந்த மருத்துவ சோதனைக்கும் வரவில்லை. அதோடு எடை சோதிப்பதற்கும் ஐடன் வால்ஷ் வரவில்லை.

நீக்கம்

நீக்கம்

இதனால் இவர் ஆட இருந்த செமி பைனல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இவருக்கு எதிராக செமி பைனலில் ஆட இருந்த பிரிட்டன் வீரர் பேட் மேக்கோர்மாக் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். அதே சமயம் காலிறுதியில் வென்றதால் ஐடன் வால்ஷ் வெறும் வெண்கலத்தோடு ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.

பார்ம்

பார்ம்

நல்ல பார்மில் இருந்த ஐடன் வால்ஷ் கொஞ்சம் அமைதியாக தனது வெற்றியை கொண்டாடி இருந்தால் செமி பைனலில் ஆடி வெள்ளியோ அல்லது பைனலில் தங்கமோ வென்று இருப்பார். ஆர்வ கோளாறாக துள்ளியதில் பாதியில் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics 2020 Boxing: Irish boxer Aidan Walsh knocked out of semi due to injury after his quarters celebration.
Story first published: Sunday, August 1, 2021, 12:56 [IST]
Other articles published on Aug 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X