For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் 2020 மல்யுத்தம்.. இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி.. ரெப்சேஜ் முறைக்கு அதிக வாய்ப்பு!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 மல்யுத்தத்தின் 57kg பிரிவு- 1/8 பைனல் ஆட்டத்தில் இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்துள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா மொத்தம் மூன்று போட்டிகளில் ஆடியது. இதில் இரண்டில் இந்தியா வெற்றிபெற்றது.

மல்யுத்தம் ஆண்கள் 86kg பிரிவு- 1/8 பைனலில் இந்தியாவின் தீபக் புனியா வெற்றி பெற்றார். மல்யுத்தம் ஆண்கள் 57 kg பிரிவு- 1/8 பைனலில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெற்றி பெற்றார்

ஆனால் அதன்பின் நடந்த மல்யுத்தம் பெண்கள் 57kg பிரிவு- 1/8 பைனலில் இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்தார். பெலாரசஸ் நாட்டின் ஐரினாவிடம் 8:2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

Olympics 2020: India wrestler Anshu Malik lost her round of 16 to Belarus Iryna

இந்த போட்டியில் முதல் சுற்றில் ஐரினா 1 1 2 என்ற புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்றார். இதில் அன்ஷு புள்ளி எதையும் பெறவில்லை. இரண்டாவது சுற்றில் அன்ஷு 1 1 புள்ளிகளை மட்டும் பெற்றார். ஆனால் ஐரினா 2 2 புள்ளிகள் பெற்றார்.

இதனால் மொத்தமாக ஐரினாவிடம் 8:2 என்ற புள்ளி கணக்கில் அன்ஷு தோல்வி அடைந்தார்.ஒலிம்பிக் 2020 மல்யுத்தத்தில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் தோல்வி அடைந்து இருந்தாலும் இந்தியாவின் அன்ஷு மாலிக் ரெப்சேஜ் முறையில் வாய்ப்பு வெண்கல சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

பைனல் செல்லும் நபரோடு காலிறுதி அல்லது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதியவருக்கு கொடுக்கப்படும் கூடுதல் வாய்ப்பாகும் இது. இதை ஒலிம்பிக்கில் ரெப்சேஜ் முறை என்று அழைப்பார்கள். தற்போது பெலாரசஸ் நாட்டின் ஐரினா செமி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார். ஐரினா பைனலுக்கு தகுதி பெற்றால் அன்ஷு மாலிக் ரெப்சேஜ் முறையில் வாய்ப்பு வெண்கல சுற்றுக்கு தகுதி பெறுவார்.

Story first published: Wednesday, August 4, 2021, 17:08 [IST]
Other articles published on Aug 4, 2021
English summary
Olympics 2020: India wrestler Anshu Malik lost her round of 16 to Belarus Iryna in 8:2 points different.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X