For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் 2020 மல்யுத்தம்.. ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் தீபக்.. மாஸ் வெற்றி.. காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 மல்யுத்தத்தின் ஆண்கள் 86kg பிரிவு- 1/8 பைனல் ஆட்டத்தில் இந்தியாவின் தீபக் புனியா வெற்றி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் 2020 தொடரின் பல்வேறு பிரிவு மல்யுத்த போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சோனம் மாலிக் 62 கிலோ எடை பிரிவு ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

 India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு

இதையடுத்து இன்று காலை மல்யுத்தத்தின் ஆண்கள் 57 kg பிரிவு- 1/8 பைனல் ஆட்டத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெற்றி பெற்றுள்ளார்.

 வெற்றி

வெற்றி

இவர் கொலம்பியாவின் டைக்ரசை இன்று அவர் எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ரவிக்குமார் தஹியா ஆதிக்கம் செலுத்தினார்.இதில் கொலம்பியாவின் டைக்ரசை எளிதாக 13:2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, 1/8 பைனல் ஆட்டத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெற்றி பெற்றுள்ளார்.

காலிறுதி

காலிறுதி

இதனால் ரவிக்குமார் தஹியா தற்போது காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று இன்னொரு பக்கம் ஒலிம்பிக் 2020 மல்யுத்தத்தின் ஆண்கள் 86kg பிரிவு- 1/8 பைனல் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபக் புனியா நைஜீரியா நாட்டின் அகிமிரோவை எதிர்கொண்டார்.

தீபக் புனியா

தீபக் புனியா

இதில் தொடக்கத்தில் இருந்தே தீபக் புனியா ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றில் தீபக் புனியா அடுத்தடுத்து 2 முறை 2 புள்ளிகளை பெற்றார். முதல் சுற்றிக் நைஜீரியா நாட்டின் அகிமிரோ ஒரே ஒரு புள்ளி மட்டுமே பெற்றார். அதன்பின் இரண்டாவது சுற்றிலும் தீபக் புனியா ஆதிக்கம் செலுத்தினார்.

இரண்டாவது சுற்று

இரண்டாவது சுற்று

இரண்டாவது சுற்றில் வரிசையாக 1 2 1 2 2 என்று மொத்தமாக எட்டு புள்ளிகளை பெற்றார். இதனால் மொத்தமாக தீபக் புனியா நைஜீரியா நாட்டின் அகிமிரோவை 12:1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் தீபக் புனியா மல்யுத்தத்தின் ஆண்கள் 86kg பிரிவு ஆட்டத்தில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Story first published: Wednesday, August 4, 2021, 11:45 [IST]
Other articles published on Aug 4, 2021
English summary
Olympics 2020: India wrestler Deepak Puniya wins his round of 16 against Nigeria Agiomor with 12:1 points.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X