For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

8 தங்கம்.. மொத்தமாக 12 பதக்கம்.. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிதான் டாப்.. சாதனை!

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக இந்திய ஆண்கள் அணி உருவெடுத்துள்ளது. ஒலிம்பிக்கில் அதிக மெடல்கள் வாங்கிய அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

2020 ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலம் வென்றுள்ளது. செமி பைனலில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்த இந்திய அணி இன்று ஜெர்மனியிடம் வென்றது.

Olympics 2020: Indian hockey has more number of medals in Olympics than any other countries

ஜெர்மனியிடம் 5:4 என்ற கோல் கணக்கில் வென்று இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. இந்திய ஆண்கள் அணி ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பின் இப்படி பதக்கம் வெல்கிறது. 41 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வென்று இருந்தாலும் கூட ஒலிம்பிக்கிலேயே மிகவும் வெற்றிகரமான அணி இந்தியாதான் என்ற சாதனையை படைத்துள்ளது.

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணி இதுவரை வென்ற பதக்கங்கள் விவரம்

  • 1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது
  • 1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது
  • 1936 பெர்லின் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது
  • 1948 லண்டன் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது
  • 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது
  • 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது
  • 1960 ரோம் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றது
  • 1964 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது
  • 1968 மெக்சிக்கோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலம் வென்றது
  • 1972 முனிச் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலம் வென்றது
  • 1980 மாஸ்கோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது
  • 2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலம் வென்றது

1 தென்னிந்தியா.. 2 வடகிழக்கு.. 3 பெண்கள்.. ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பதக்கம் வாங்கிய படை.. லிஸ்ட்

இந்தியா ஒலிம்பிக்கில் மொத்தமாக இதுவரை எட்டு தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது. இதுதான் ஒலிம்பிக் ஹாக்கியில் ஆண்கள் அணி வென்ற அதிகபட்ச பதக்கங்கள் ஆகும். இதில் ஜெர்மனி 11 பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 9 பதக்கங்களை வென்றுள்ளது.

நெதர்லாந்து ஒலிம்பிக்கில் 9 பதக்கங்களை இதுவரை ஹாக்கி ஆண்கள் போட்டியில் வென்றுள்ளது.

Story first published: Thursday, August 5, 2021, 18:40 [IST]
Other articles published on Aug 5, 2021
English summary
Olympics 2020: Indian hockey has more number of medals in Olympics than any other countries with eight golds.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X