41 ஆண்டுகளுக்கு பின்.. ஒலிம்பிக்கில் இமாலய சாதனை படைத்த இந்திய ஆண்கள் அணி.. பெருமித தருணம்!

டோக்கியோ: ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் இந்தியா ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பின் பதக்கம் வாங்கி அசத்தி உள்ளது. இந்தியாவின் இந்த வெண்கல பதக்கம் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.

ஏக்கம்.. விறுவிறுப்பு.. கடைசி நொடி வரை திக்திக்... இன்று நடந்த ஜெர்மனி vs இந்தியா இடையிலான ஹாக்கி வெண்கல பதக்க போட்டியை இப்படித்தான் விவரிக்க முடியும். கடைசி 6 நொடிகள் வரைக்கும் மிகவும் திரில்லாக நடந்த ஆட்டத்தில் ஜெர்மனியை 5:4 கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கல பதக்கத்தை தட்டி சென்றுள்ளது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் இந்த வெற்றி அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. இந்திய ஹாக்கி வரலாற்றில் இது மிக முக்கியமான வெற்றி.. ஏன் என்று பார்க்கலாம்!

திக்திக் ஆட்டம்.. கோல் மழை.. கலக்கிய இந்திய ஆண்கள் ஹாக்கி படை.. ஜெர்மனியை வீழ்த்தியது எப்படி?திக்திக் ஆட்டம்.. கோல் மழை.. கலக்கிய இந்திய ஆண்கள் ஹாக்கி படை.. ஜெர்மனியை வீழ்த்தியது எப்படி?

செமி பைனல்

செமி பைனல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி அணி செமி பைனல் சென்றதே பெரிய சாதனைதான். 49 வருடங்களுக்கு பின் இப்படி செமி பைனல் போட்டிக்கு இந்திய ஆண்கள் படை தகுதி பெற்றது. கடைசியாக 1972 ஒலிம்பிக் செமி பைனலில் இந்தியா ஆடியது. அதன்பின் இப்போதுதான் இந்தியா செமி பைனல் சென்றுள்ளது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

செமி பைனலில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தாலும் வெண்கல பதக்க போட்டியில் ஜெர்மனியை இந்தியா வீழ்த்தி உள்ளது. இந்த வெண்கலம் முக்கியம் பெற காரணம் இது 41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஹாக்கி மூலம் கிடைக்க கூடிய ஒரு பதக்கம் ஆகும். ரஷ்யாவில் 1980ல் ஒலிம்பிக் நடைபெற்றது. இதில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது.

முக்கியம்

முக்கியம்

ஆனால் அப்போது குழு போட்டிகளில் எடுக்கப்பட்ட புள்ளிகளை வைத்தே நேரடியாக தங்கத்திற்கான போட்டி நடந்தது. அதோடு இந்த 1980 வெற்றியை பெரிய அளவில் இந்தியா கொண்டாடவும் முடியாது. காரணம் அப்போது ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக இந்த தொடரை ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் புறக்கணித்தது.

வெறும் 6 அணிகள்

வெறும் 6 அணிகள்

பெரும்பாலான நாடுகள் இந்த தொடரை புறக்கணித்தது. இதனால் இந்தியாவிற்கு இந்த தொடரில் பெரிய அளவில் போட்டியே இல்லை. வெறும் 6 அணிகள் மட்டுமே ஆடிய தொடரில் இந்தியா வென்றது. ஆம் 6 அணிகள் மட்டுமே ஆடி, செமி பைனல் போட்டிகள் எல்லாம் இல்லாமல், மொத்தமாக புள்ளி பட்டியலில் டாப்பில் இருந்த இரண்டு அணிகள் பைனல் ஆட, அதில் இந்தியா தங்கம் வென்றது.

கடினம்

கடினம்

ஆனால் இந்த முறை இந்தியா மிக கடுமையான அணிகளை எதிர்கொண்டு, வெண்கலம் வென்றுள்ளது. 41 வருடங்களுக்கு முன் பெற்ற வெற்றியும், இதுவும் ஒன்று கிடையாது. இந்த ஒலிம்பிக்கில் நடந்த ஹாக்கி மிகவும் கடினமானது, போட்டி நிறைந்தது. அதோடு ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற அணிகள் மிக சிறப்பாக பார்மில் இருக்கும் போது இந்தியா இப்படி ஒரு வெற்றியை நிகழ்த்தி இருக்கிறது.

வெற்றி

வெற்றி

41 வருடங்களுக்கு பின் இந்திய ஆண்கள் அணியின் இந்த ஹாக்கி வெற்றி மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. ஜாம்பவான்கள் கோலோச்சும் காலத்தில் இந்தியா இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. இவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்தியா மீண்டும் பதக்கம் வென்றுள்ளது. முழுக்க முழுக்க இந்திய வீரர்களின் பார்ம், நுணுக்கமான ஆட்டம், கோச்சிங்கில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் என்று இந்தியாவிற்கு வெற்றிக்கு நிறைய காரணங்கள் உள்ளன... மிகவும் சவாலான அணிகளை எதிர்கொண்டு வெண்கல பதக்கத்தை இந்திய ஆண்கள் அணி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளது இந்தியாவிற்கே பெருமிதமான தருணம் ஆகும்.

பெருமிதம்

பெருமிதம்

பெண்கள் ஹாக்கி அணியும் இதேபோல் இந்தமுறை வெண்கலம் வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணியின் இந்த வெற்றி ஹாக்கி போட்டிகளை இந்தியாவில் மீண்டும் ஊக்குவிக்க பெரிய அளவில் உதவும். ஹாக்கி போட்டிகள் மீது மீண்டும் ரசிகர்களின் கவனம் திரும்ப இது வழிவகுக்கும். முக்கியமாக புதிய வீரர்கள் பலர் உருவாக்கவும், ஸ்பான்சர்கள் அதிகம் ஆகவும், தேசிய அளவிலான போட்டிகள் முக்கியத்துவம் பெறவும் இந்த வெற்றி வழிவகுக்கும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics 2020: Indian hockey wins a medal in Olympics after 41 years of struggle in the international stage.
Story first published: Thursday, August 5, 2021, 9:36 [IST]
Other articles published on Aug 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X