50மீ துப்பாக்கி சூடு.. இந்திய வீரர்கள் பிரதாப் சிங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் தோல்வி.. வெளியேற்றம்!

டெல்லி: 50மீ 3 பொஷிஷன் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் இருவரும் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளனர்.

ஒலிம்பிக் 2020 தொடரின் 50மீ துப்பாக்கி 3 பொஷிஷன் துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 3 பொஷிஷன்களில் துப்பாக்கி மூலம் சுட வேண்டும். 50 மீ தூர இலக்கை நின்றபடி சுட வேண்டும், பின்னர் முட்டி போட்டு சுட வேண்டும்.

கடைசியாக படுத்தபடி சுட வேண்டும். இதுதான் 3 பொஷிஷன் துப்பாக்கி சுடுதல் ஆகும். ஒவ்வொரு சுற்றுக்கு 40 முறை சுட வேண்டும். மொத்தமாக மூன்று சுற்றுக்கு 120 முறை சுட வேண்டும். ஆகவே மதிப்பெண் 1200 வழங்கப்படும். இதில் முதல் எட்டு இடங்களுக்குள் வரும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

இதில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட ஐஸ்வரி பிரதாப் சிங் முட்டி போட்டு சுடும் சுற்றில் சிறப்பாக ஆடினார். இதில் 400க்கும் 397 புள்ளிகள் பெற்றார். ஆனால் அடுத்த இரண்டு சுற்றுகளில் 391 மற்றும் 379 புள்ளிகள் மட்டுமே பெற்றார். முதலில் 3ம் இடத்தில் இருந்தவர் மூன்று சுற்றுகள் முடிவில் 1167/1200 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் 21வது இடத்திற்கு பின்னடைவை சந்தித்தார்.

அதேபோல் இந்தியா சார்பாக ஆடிய சஞ்சீவ் ராஜ்புட் முதல் சுற்றில் 387 புள்ளிகள் மட்டுமே பெற்றார். பின்னர் இரண்டாம் சுற்றில் 393 புள்ளிகளையும், மூன்றாம் சுற்றில் வெறும் 367 புள்ளிகளையும் மட்டுமே பெற்றார். இதனால் 1157/1200 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் 32வது இடத்திற்கு பின்னடைவை சந்தித்தார்.

ஒரே நேரத்தில்.. ஹாக்கி செமியில் இந்திய ஆண்கள் & பெண்கள் அணி.. முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.. ஏன்?ஒரே நேரத்தில்.. ஹாக்கி செமியில் இந்திய ஆண்கள் & பெண்கள் அணி.. முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.. ஏன்?

இரண்டு பேருமே எட்டு இடங்களுக்குள் வராத நிலையில் 50மீ துப்பாக்கி 3 பொஷிஷன் துப்பாக்கி சுடுதலில் இருந்து இருவரும் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics 2020: Both Indian men lose in 3 positioning 50m Pistol Shooting in the initial heat.
Story first published: Monday, August 2, 2021, 13:57 [IST]
Other articles published on Aug 2, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X