For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் வில்வித்தை.. இந்திய ஆண்கள் குழு காலிறுதிக்கு தகுதி.. அட்டானு, ஜாதவ், தருண் கலக்கல் ஆட்டம்

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் குழு காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அட்டானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் குழு அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

2020 ஒலிம்பிக் தொடரின் நேற்று மிகவும் மோசமான நாள் . இந்திய அணி நேற்று துப்பாக்கி சுடுதல் பிரிவில் மிக மோசமாக சொதப்பியது. பேட்மிட்டன் சிந்து, பாக்சிங் மேரி கோம், பாய்மர படகு போட்டி நேத்ரா குமணன், டேபிள் டென்னிஸ் மானிக பத்ரா ஆகியோர் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறி நம்பிக்கை கொடுத்தனர்.

நேற்று இந்திய அணி எந்த பிரிவிலும் பதக்கம் எதையும் வாங்காமல் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தது.

ஒலிம்பிக்: வாள்வீச்சு போட்டியில் அசத்திய தமிழ்நாட்டின் பவானி தேவி.. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்ஒலிம்பிக்: வாள்வீச்சு போட்டியில் அசத்திய தமிழ்நாட்டின் பவானி தேவி.. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

இன்று

இன்று

இந்த நிலையில் இன்று வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் குழு கலந்து கொண்டது. அட்டானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் 16 அணிகள் சுற்றில் கலந்து கொண்டது. இதில் வெற்றிபெறும் அணி எட்டு அணிகள் கொண்ட காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டி அதிக முக்கியத்துவம் பெற்றது .

எப்படி

எப்படி

கஜகஸ்தான் அணியை இந்திய வில்வித்தை ஆண்கள் படை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டில் இந்திய ஆண்கள் படை 55 புள்ளிகள் பெற்றது. கஜகஸ்தான் அணி வெறும் 54 புள்ளிகள் பெற்றது. இதனால் முதல் சுற்றிலேயே இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றது.

அடுத்த சுற்று

அடுத்த சுற்று

அதன்பின் இரண்டாவது சுற்றிலும் இந்தியா 52-50 என்ற மதிப்பெண்களை பெற்றதால், மொத்தமாக 4-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. இதில் மீண்டு வந்த கஜகஸ்தான் அணி மூன்றாவது சுற்றில் 57 புள்ளிகள் பெற்றது. இந்தியா 56 புள்ளிகள் மட்டுமே பெற்றது.

வெற்றி

வெற்றி

இதன்பின் நான்காவது சுற்று வரை நீண்ட ஆட்டத்தில் இந்தியா கடைசி சுற்றல் 55-54 எடுத்தது. இதனால் 6-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியா காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. காலிறுதியில் இந்தியா தென் கொரியா அணியுடன் மோதும்.

Story first published: Monday, July 26, 2021, 21:39 [IST]
Other articles published on Jul 26, 2021
English summary
Olympics 2020: Indian men team qualifies for the Archery quarter finals rounds, will face south korea in next match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X