For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடைசி வரை விறுவிறுப்பு.. தரமான ட்விஸ்ட்.. மல்யுத்தத்தில் அசத்திய பஜ்ரங் புனியா.. காலிறுதிக்கு தகுதி!

டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்தம் ஆண்கள் 65kg ஆட்டம் 1/8 பைனல் ஆட்டத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா இன்று வெற்றிபெற்றுள்ளார்.

ஒலிம்பிக் 2020 தொடரின் மல்யுத்த போட்டிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடந்து வருகிறது. நாளையோடு மல்யுத்த போட்டிகள் முடிய உள்ளதால் இன்று பல்வேறு செமி பைனல், பைனல் ஆட்டங்கள் நடக்கிறது.

மல்யுத்தத்தின் 50 கிலோ பெண்கள் ஆட்டம்.. 3:1 என்ற புள்ளி கணக்கில்.. இந்தியாவின் சீமா பிஸ்லா தோல்வி மல்யுத்தத்தின் 50 கிலோ பெண்கள் ஆட்டம்.. 3:1 என்ற புள்ளி கணக்கில்.. இந்தியாவின் சீமா பிஸ்லா தோல்வி

இதில் இன்று இந்தியா சார்பாக பஜ்ரங் புனியா 65kg எடை பிரிவு ஆட்டத்தில் கலந்து கொண்டார்.

யார்

யார்

கிரகஸ்தான் வீரர் ஏர்னேசரை பஜ்ரங் புனியா எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே இரண்டு தரப்பு வீரர்களும் கடுமையாக ஆதிக்கம் செலுத்தினார்கள். மாறி மாறி புள்ளிகளை பெற்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

முதல் சுற்றில் ஏர்னேசர் ஒரு புள்ளி மட்டுமே பெற்றார். ஆனால் முதல் சுற்றிலேயே 1, 2 என்று மொத்தம் 3 புள்ளிகளை பஜ்ரங் புனியா பெற்றுவிட்டார். இதனால் பஜ்ரங் புனியா எளிதாக வெற்றிபெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாம் சுற்றில் ஆட்டம் மாறியது.

இரண்டாம் சுற்று

இரண்டாம் சுற்று

இரண்டாம் சுற்றில் ஏர்னேசர் மேலும் 2 புள்ளிகள் பெற ஆட்டம் சமன் ஆனது. அதன்பின் கடைசி வரை பஜ்ரங் புனியா புள்ளிகளை பெற முடியாமல் திணறினார். ஆனால் ஆட்டம் முடிவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக பஜ்ரங் புனியா ஏர்னேசரை 5 நொடிகள் தரையில் படுக்க வைத்து லாக் செய்தார்.

லாக்

லாக்

இப்படி எதிரணி வீரரை சில நொடிகள் தரையில் படுக்க வைப்பது டேக் டவுன் என்று அழைக்கப்படும். பொதுவாக ஆட்டம் டிரா ஆகும் சமயங்களில் யார் டேக் டவுன் புள்ளிகளை எடுக்கிறார்களோ அதை வைத்தே வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இந்த நிலையில் இன்று 3 புள்ளிகள் மற்றும் டேக் டவுன் புள்ளிகள் பெற்று பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Story first published: Friday, August 6, 2021, 12:03 [IST]
Other articles published on Aug 6, 2021
English summary
Olympics 2020: Indian wrestler Bajrang Punia qualifies to quarterfinals by defeating Kyrgyzstan Ernezer.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X