பெண்கள் 53 கிலோ மல்யுத்தம்.. காலிறுதியில் வீழ்ந்த இந்தியாவின் வினேஷ்.. 9:3 புள்ளி கணக்கில் தோல்வி

டோக்கியோ: பெண்கள் 53 கிலோ மல்யுத்த ஆட்டத்தின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

ஒலிம்பிக் 2020 தொடரின் மல்யுத்த போட்டிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பாக நேற்று ஆண்கள் 57 கிலோ ஆட்ட பிரிவில் ரவி குமார் தஹியா பைனல் சுற்றுக்கு தகுதி பெற்றார். கஜகஸ்தானின் நுரிஸ்லாமிற்கு எதிரான செமி பைனல் போட்டியில் வென்று ரவி குமார் பைனல் சென்றார்.

இந்த போட்டியில் நுரிஸ்லாம் 9 புள்ளிகள் பெற்றார், ரவி குமார் 7 புள்ளிகள் மட்டுமே பெற்றார். ஆனால் டிஎப்ஏ புள்ளிகள் அடிப்படையில் ரவி குமார் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

கைக்கு எட்டாத வெண்கலம்.. ரெப்சேஜ் வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக்.. என்ன நடந்தது?கைக்கு எட்டாத வெண்கலம்.. ரெப்சேஜ் வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக்.. என்ன நடந்தது?

இன்று காலை

இன்று காலை

அதேபோல் இன்று காலை நடந்த பெண்கள் 53 கிலோ ஆட்டம் - 1/8 பைனல் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட் வெற்றி பெற்றார். இது காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஆகும். இதில் தொடக்கத்தில் இருந்தே வினேஷ் ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றிலேயே ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இதில் ஸ்விட்சர்லாந்து வீராங்கனை சோபியாவை 7:1 கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

சோபியா

சோபியா

இந்த போட்டியில் முதல் சுற்றில் 2 2 1 புள்ளிகளை வினேஷ் போகட் பெற்றார். சோபியா முதல் சுற்றில் புள்ளிகள் எதையும் பெறவில்லை. இரண்டாவது சுற்றில் வினேஷ் போகட் 2 புள்ளிகள் பெற்றார். இதில் சோபியா ஒரே ஒரு புள்ளி மட்டுமே பெற்றார். இதனால் மொத்தமாக சோபியாவை 7:1 கணக்கில் வினேஷ் போகட் வெற்றிபெற்றார். இதனால் அவரின் காலிறுதி ஆட்டம் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

மேஜிக் இல்லை

மேஜிக் இல்லை

ஆனால் காலிறுதியில் தோல்வி அடைந்து வினேஷ் ஏமாற்றம் அளித்துள்ளார். காலிறுதி போட்டிக்கு முந்தைய போட்டியில் இவரிடம் இருந்த மேஜிக் காலிறுதி போட்டியில் மிஸ் ஆனது. அந்த வேகம் அவரின் ஆட்டத்தில் இல்லை. பெண்கள் 53 கிலோ ஆட்டம் - காலிறுதி போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட் தோல்வி அடைந்தார். பெல்ரஸஸ் நாட்டின் வானீசாவிடம் 9:3 என்ற புள்ளி கணக்கில் வினேஷ் தோல்வி அடைந்து வெளியேறினார். இதில் முதல் சுற்றில் வனீசா 2 2 1 புள்ளிகள் பெற்றார்.

வினேஷ்

வினேஷ்

இந்தியாவின் வினேஷ் வெறும் 2 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இரண்டாவது சுற்றில் வனீசா 2 2 புள்ளிகள் பெற்றார். இதில் வினேஷ் வெறும் 1 புள்ளி மட்டுமே பெற்றார். இதனால் மொத்தமாக 9:3 புள்ளி கணக்கில் வினேஷ் தோல்வி அடைந்தார்.இவரின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் காரணமாக, இவர் மீது கடுமையான எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இவர் அதை பூர்த்தி செய்யவில்லை.

இன்னொரு தோல்வி

இன்னொரு தோல்வி

இதேபோல் 57kg பிரிவு- 1/8 ரெப்சேஜ் ஆட்டத்தில் இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து இன்று வெளியேறினார். ரெப்சேஜ் முறை மூலம் ஒரு வெண்கல பதக்கம் எப்படியும் வந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மல்யுத்தத்தில் ரெப்சேஜ் வாய்ப்பு கிடைப்பது எல்லாம் பெரிய அதிர்ஷ்டம். ஆனாலும் கிடைத்த ரெப்சேஜ் வாய்ப்பை பயன்படுத்தாமல் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்து உள்ளார்.

வாய்ப்பு கஷ்டம்

வாய்ப்பு கஷ்டம்

ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் வெலேரியாவிடம் 5:1 என்ற புள்ளி கணக்கில் இவர் தோல்வி அடைந்தார். இந்த போட்டியில் முதல் சுற்றில் வெலேரியா 1 புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்றார். இதில் அன்ஷு புள்ளி எதையும் பெறவில்லை. இரண்டாவது சுற்றில் அன்ஷு 1 புள்ளிகளை மட்டும் பெற்றார். ஆனால் வெலேரியா 2 2 புள்ளிகள் பெற்றார்.

மற்ற ஆட்டங்கள்

மற்ற ஆட்டங்கள்

மொத்தமாக வெலேரியாவிடம் 5:1 என்ற புள்ளி கணக்கில் அன்ஷு தோல்வி அடைந்தார். ஒலிம்பிக் 2020 மல்யுத்தத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சி தோல்விகளை இந்தியா சந்தித்துள்ளது. இன்று மல்யுத்தத்தில் மேலும் சில போட்டிகள் நடக்க உள்ளது.

இன்று நடக்க உள்ள மற்ற மல்யுத்த போட்டிகளின் விவரங்கள்:

  • ஆண்கள் 57கிலோ ஆட்டம் - பைனல் - ரவி குமார் தஹியா மாலை 4:20PM
  • ஆண்கள் 86 கிலோ ஆட்டம் - வெண்கல பதக்க ஆட்டம்- தீபக் புனியா, மாலை 4:40 PM
  • பெண்கள் 57கிலோ ஆட்டம் - வெண்கல பதக்க ஆட்டம் - அன்ஷு மாலிக், தகுதி பெரும்பட்சத்தில், மாலை 5.35 PM
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics 2020: Indian wrestler Vinesh Phogat loses to Belarusn Vanesa in 9:3 points difference.
Story first published: Thursday, August 5, 2021, 13:27 [IST]
Other articles published on Aug 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X