For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாய்மரப் படகுப் போட்டி.. லேசாக சறுக்கிய கணபதி மற்றும் வருண் ஜோடி.. 4வது ரேஸ் முடிவில் 19வது இடம்

டோக்கியோ: ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியா சார்பாக ஆடிய கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் நான்காவது ரேஸை 19வது இடத்தில் முடித்தனர்.

ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா சார்பாக நான்கு பேர் விளையாட தேர்வாகி உள்ளனர். நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன், கேசி கணபதி ஆகிய மூன்று தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் மற்றும் வருண் தாக்கர் என்ற இன்னொரு வீரர் இதில் ஆடி வருகிறார்கள்.

க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா.. 3 டாப் கிளாஸ் வீரர்கள் மிஸ்ஸிங் - பெரும் சிக்கலில் இந்திய அணிக்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா.. 3 டாப் கிளாஸ் வீரர்கள் மிஸ்ஸிங் - பெரும் சிக்கலில் இந்திய அணி

2018 ஆசியன் விளையாட்டு போட்டியில் கேசி கணபதி மற்றும் வருண் தாக்கர் ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்த ஒலிம்பிக்கில் இவர்கள் ஜோடியாக ஆடுகிறார்கள்.

இன்று

இன்று

இன்று ஆண்கள் இரட்டையர் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இது 49இ ஆர் பிரிவாகும். இதில் இரண்டு கைகளில் பாய்மரத்தை இயக்க முடியும். இன்று நடத்த போட்டியில் ஸ்பெயின், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன.இதில் இந்தியா சார்பாக கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

12 ரேஸ்கள்

12 ரேஸ்கள்

இந்த போட்டியில் தினமும் 2 ரேஸ்கள் வீதம் மொத்தம் 12 ரேஸ்கள் நடக்கும். நேற்று ஒரே ஒரு ரேஸ்தான் நடந்தது. இதில் கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் ஜோடி 18வது இடம் பிடித்தனர். இந்த நிலையில் இந்திய ஜோடி முன்னேற்றத்துடன் ரேஸை தொடங்கியது. 14 இடங்கள் வரை இந்திய ஜோடி முன்னேறி வந்தது. ஆனால் இரண்டாவது ரேஸ் முடிவில் மீண்டும் 18 இடத்திற்கு இவர்கள் பின் தங்கினார்கள்.

மூன்றாவது ரேஸ்

மூன்றாவது ரேஸ்

இதையடுத்து பின் மூன்றாவது ரேஸில் வேகமாக முன்னேறி வந்த கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் ஜோடி ஒரு இடம் மேலே சென்று 17வது இடத்தில் முடித்தனர். இதில் இவர்களுக்கு 16வது இடத்திற்கு செல்லும் வாய்ப்பு இருந்தும் கூட சின்ன தாமதத்தால் கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் மூன்றாவது ரேஸை 17வது இடத்திலேயே முடித்தனர்.

நான்காவது ரேஸ்

நான்காவது ரேஸ்

பின்னர் நான்காவது ரேஸில் மேலும் பின்னடைவை சந்தித்து கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் ஜோடி அதிர்ச்சி அளித்தனர். கடைசி ரேஸை முடிக்க 3.24 நிமிடம் கூடுதலாக எடுத்துக் கொண்டனர். இறுதியாக கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் நான்காவது ரேஸை 19கேது இடத்தில் முடித்தனர். 12வது ரேஸ் முடியும் போது இவர்கள் 10 இடங்களுக்கு இருந்தால் மட்டுமே பைனல்ஸ் போட்டிக்கு தகுதி பெற முடியும், என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 28, 2021, 16:48 [IST]
Other articles published on Jul 28, 2021
English summary
Olympics 2020: KC Ganapathy and Varun pair end at 19th place in their 4th place in sailing for India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X