For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தது... வாண வேடிக்கைகளுடன் நிறைவுப்பெற்றது!

ஜப்பான்: ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவில் இருந்து தடகள பிரிவில், ஈட்டி எறிதலில் தனி நபராக தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன

 Tokyo Olympics 2020 LIVE Updates Results Highlights in Tamil

Aug 08, 2021, 5:13 pm IST

இந்தியாவின் சார்பில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக்கொடியை ஏந்திச்சென்றார்.

Aug 08, 2021, 5:06 pm IST

17 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வந்த ஒலிம்பிக் தொடர் வான வேடிக்கைகளுடன் முடிவடைந்துள்ளது.

Aug 08, 2021, 4:46 pm IST

டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சி: அணிவகுப்பில் முதலாவதாக ஜப்பான் நாட்டு அணியினர் தேசியக்கொடியை ஏந்திச்சென்றனர்.

Aug 08, 2021, 4:46 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்கின் நிறைவு நிகழ்ச்சி தொடங்கியது. முதலாவதாக ஜப்பான் இளவரசர் மற்றும் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச்சை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Aug 08, 2021, 12:07 pm IST

ஒலிம்பிக்கின் கடைசி நாளான இன்று, கூடைப்பந்து விளையாட்டில், பெண்களுக்கான இறுதிப் போட்டியில் அமெரிக்கா 90-75 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது

Aug 08, 2021, 8:53 am IST

சென்னை சூப்பர் கிங்ஸ், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது

Aug 08, 2021, 8:53 am IST

அதுமட்டுமின்றி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 8758 என்ற எண் கொண்ட ஒரு சிறப்பு ஜெர்சியை உருவாக்கவிருக்கிறது

Aug 08, 2021, 8:00 am IST

டோக்கியோ ஒலிம்பிக் இறுதி நாளான இன்று பல போட்டிகள் நடைபெற உள்ளன

Aug 08, 2021, 7:59 am IST

கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ், வாலிபால் உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன

Aug 08, 2021, 7:59 am IST

இந்தியா சார்பில் இன்று எந்த போட்டிகளும் கிடையாது. நேற்று கடைசியாக நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது

Aug 07, 2021, 6:09 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குவிந்து வரும் வாழ்த்து

Aug 07, 2021, 6:09 pm IST

ஒலிம்பிக்கில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது; இந்த சாதனை என்றென்றும் நினைவில் இருக்கும் - பிரதமர் மோடி

Aug 07, 2021, 5:46 pm IST

100 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா தடகளத்தில் தங்கத்தை வென்று சாதனை. நீரஜ் சோப்ராவுக்கு குவியும் பாராட்டு

Aug 07, 2021, 5:46 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்.

Aug 07, 2021, 5:37 pm IST

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி: கடைசி மற்றும் 6வது சுற்று தொடங்கியது. இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீ தூரத்துடன் தொடர்ந்து முதலிடம்.

Aug 07, 2021, 5:34 pm IST

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்ல அதிக வாய்ப்பு. முதல் 4 சுற்று முடிவுகளிலும் தொடர்ந்து முதலிடம்.

Aug 07, 2021, 5:34 pm IST

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2வது சுற்றில் 87.58 தூரம் வீசி அபாரம். தங்கப்பதக்கம் பெற அதிக வாய்ப்பு.

Aug 07, 2021, 4:47 pm IST

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி: முதல் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா டாப் 8 இடங்களில் முதல் இடத்தை பிடித்து அசத்தல்.

Aug 07, 2021, 4:35 pm IST

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் 87.30 மீட்டர் தூரம் எறிந்து அசத்தல்.

Aug 07, 2021, 4:23 pm IST

இந்தியாவுக்கு 6வது பதக்கம் வென்று கொடுத்தார் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் அபார வெற்றி.

Aug 07, 2021, 4:21 pm IST

ஆடவர் மல்யுத்தம்: 65 கிலோ எடைப்பிரிவின் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா முன்னிலை.

Aug 07, 2021, 4:21 pm IST

முதல் சுற்றின் முடிவில் 2 -0 என்ற கணக்கில் கஜகஸ்தான் வீரர் தௌலெத் நியாஸ்பேகோவை விட முன்னிலையில் உள்ளார்.

Aug 07, 2021, 1:45 pm IST

கோல்ப் போட்டி ஒன்றை மக்கள் இவ்வளவு ஆர்வமாக ஆதரிப்பார்கள் என்று நினைக்கவில்லை : அதிதி

Aug 07, 2021, 1:45 pm IST

இந்திய கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் பேச்சு

Aug 07, 2021, 1:45 pm IST

இன்று கோல்ப் ஆட்டத்தில் கடைசி ரவுண்டில் இந்தியாவின் அதிதி அசோக் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்

Aug 07, 2021, 1:45 pm IST

கடைசி ரவுண்டில் வெண்கல பதக்கம் வெல்லும் வாய்ப்பை இவர் இழந்தார்

Aug 07, 2021, 1:45 pm IST

ஒலிம்பிக்கில் 4ம் இடம் பிடித்தது கஷ்டமாக இருக்கிறது : அதிதி

Aug 07, 2021, 1:45 pm IST

நான் சிறப்பாக ஆடினேன்: அதிதி

Aug 07, 2021, 1:45 pm IST

என்னுடைய முழு திறமையை, முயற்சிகளை களத்தில் காட்டினேன்

Aug 07, 2021, 1:44 pm IST

முதலில் கொஞ்சம் ஆட்டம் கட்டுப்பாட்டில் இருந்தது : அதிதி

Aug 07, 2021, 1:44 pm IST

கடைசி சுற்றுகளில் கொஞ்சம் கூடுதல் ஸ்டிரோக்குகளை எடுத்துக்கொண்டதாக நினைக்கிறேன்

Aug 07, 2021, 1:44 pm IST

இன்று நடந்தது துரதிஷ்டவசமானது: அதிதி

Aug 07, 2021, 11:40 am IST

ஒலிம்பிக் கோல்ப்: பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் இந்தியாவின் அதிதி அசோக்

Aug 07, 2021, 11:40 am IST

கடைசி ரவுண்டில் 4வது இடம் பிடித்து அதிதி அசோக் நூலிழையில் தோல்வி

Aug 07, 2021, 9:40 am IST

ஒலிம்பிக் கோல்ப் ஆட்டம்: மழையால் பாதிப்பு

Aug 07, 2021, 9:40 am IST

கடைசி ரவுண்டு போட்டிகள் நடந்து வந்த நிலையில் ஆட்டம் மழையால் பாதிப்பு

Aug 07, 2021, 9:04 am IST

ஒலிம்பிக் கோல்ப் 2020: இந்திய வீராங்கனை திக்சா டகாரின் நான்கு சுற்றுகள் முடிவிற்கு வந்தது

Aug 07, 2021, 9:04 am IST

நான்கு சுற்று முடிவில் 290 ஸ்டிரோக் புள்ளிகளை திக்சா பெற்றுள்ளார்

Aug 07, 2021, 9:04 am IST

அடிக்க வேண்டிய ஸ்டிரோக்குகளை விட கூடுதலாக 6 ஸ்டிரோக்குகளை திக்சா பெற்றுள்ளார்

Aug 07, 2021, 9:04 am IST

இதனால் +6 புள்ளிகள் பெற்று பட்டியலில் திக்சா பின்தங்கினார்

Aug 07, 2021, 9:04 am IST

கோல்ப் ஆட்டத்தில் இந்தியாவிற்காக திக்சா பதக்கம் வெல்ல வாய்ப்பு இல்லை

Aug 07, 2021, 8:06 am IST

2020 ஒலிம்பிக் தொடர் நாளையோடு முடிவிற்கு வருகிறது

Aug 07, 2021, 8:06 am IST

இந்த தொடர் முழுக்க சீனாதான் ஆதிக்கம் செலுத்தியது

Aug 07, 2021, 8:05 am IST

தினமும் அந்த நாடு சராசரியாக 2 முதல் 3 தங்கங்களை வென்றது

Aug 07, 2021, 8:05 am IST

மொத்தமாக 36 தங்கம் உட்பட 79 பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகித்து வருகிறது.

Aug 07, 2021, 8:05 am IST

சீனாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்கா மிக சிறப்பாக ஆடியுள்ளது

Aug 07, 2021, 8:05 am IST

அமெரிக்கா 31 தங்கம் உட்பட 99 பதக்கங்களுடன் 2ம் இடம் வகித்து வருகிறது

Aug 07, 2021, 8:05 am IST

மொத்த பதக்கங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது

Aug 07, 2021, 8:05 am IST

ஜப்பான் 24 தங்கம் உட்பட 51 பதக்கங்களுடன் 3ம் இடம் வகித்து வருகிறது

Aug 07, 2021, 8:05 am IST

கிரேட் பிரிட்டன் 18 தங்கம் உட்பட 58 பதக்கங்களுடன் 4ம் இடம் வகித்து வருகிறது

Aug 07, 2021, 8:04 am IST

ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 17 தங்கம் உட்பட 62 பதக்கங்களுடன் 5ம் இடம் வகித்து வருகிறது

Aug 07, 2021, 8:04 am IST

ஆஸ்திரேலியா 17 தங்கம் உட்பட 44 பதக்கங்களுடன் 6ம் இடம் வகித்து வருகிறது

Aug 07, 2021, 8:04 am IST

2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியா இன்று மேலும் 3 பதக்கங்களை வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Aug 07, 2021, 8:04 am IST

இந்தியாவின் அதிதி அசோக் கோல்ப் போட்டியில் மூன்று பதக்கங்களில் ஏதாவது ஒன்று வாங்க வாய்ப்பு வாய்ப்பு உள்ளது

Aug 07, 2021, 8:04 am IST

மல்யுத்தம் ஆண்கள் 65kg வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியா பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.

Aug 07, 2021, 8:04 am IST

தடகளத்தில் ஆண்கள் ஈட்டி எறிதல் பைனல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்ல வாய்ப்புகள் உள்ளன.

Aug 07, 2021, 8:04 am IST

2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வாங்கி உள்ளது.

Aug 07, 2021, 8:04 am IST

இந்தியா இதுவரை வாங்கிய பதக்கங்களின் விவரம்:,

Aug 07, 2021, 8:03 am IST

எடை தூக்குதல்- வெள்ளி - மீராபாய் சானு

Aug 07, 2021, 8:03 am IST

பாட்மிண்டன் - வெண்கலம் - பிவி சிந்து

Aug 07, 2021, 8:03 am IST

பாக்சிங் - வெண்கலம் - லோவ்லினா

Aug 07, 2021, 8:03 am IST

ஹாக்கி - வெண்கலம் - இந்திய ஆண்கள் அணி

Aug 07, 2021, 8:03 am IST

மல்யுத்தம் - வெள்ளி - ரவி குமார் தஹியா

Aug 07, 2021, 8:03 am IST

2020 ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று ஆட உள்ள போட்டிகள் விவரம்:

Aug 07, 2021, 8:02 am IST

கோல்ப்: பெண்கள் ஒற்றையர் பிரிவு ரவுண்ட் 4 — திக்சா டகார்

Aug 07, 2021, 8:02 am IST

கோல்ப்: பெண்கள் ஒற்றையர் பிரிவு ரவுண்ட் 4 — அதிதி அசோக்

Aug 07, 2021, 8:02 am IST

மல்யுத்தம் : ஆண்கள் 65kg வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் — பஜ்ரங் புனியா, மாலை 3:55 மணிக்கு

Aug 07, 2021, 8:02 am IST

தடகளம் : ஆண்கள் ஈட்டி எறிதல் பைனல் — நீரஜ் சோப்ரா, மாலை 04:30 மணிக்கு

Aug 06, 2021, 10:02 pm IST

புதிய 100 மீ ஒலிம்பிக் சாம்பியனான இத்தாலியின் லாமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ், இப்போது இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 100 மீ & 4x100 மீ ரிலே பிரிவில் அவர் தங்கம் வென்றுள்ளார்.

Aug 06, 2021, 9:59 pm IST

தடகளப் பிரிவில் பெண்கள் 4x100 மீட்டர் ரிலே போட்டியில் ஜமைக்கா தங்கப்பதக்கம் வென்றது

Aug 06, 2021, 9:57 pm IST

ஆண்கள் 4x100 மீட்டர் ரிலேவில், 37.50 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை வென்றது இத்தாலி. இந்த நிகழ்வில் இத்தாலியின் முதல் தங்கம் இதுதான். தவிர, 4x100 மீ ரிலேவில் கடந்த 70 ஆண்டுகளில் இத்தாலி வென்ற முதல் பதக்கம் இதுதான்

Aug 06, 2021, 9:50 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் கால்பந்து இறுதிப் போட்டியில், கனடா 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வென்று, முதன் முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது

Aug 06, 2021, 3:12 pm IST

ஆடவர் மல்யுத்தம்: அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தோல்வி. அலேர்பாய்ஜன் வீரர் ஹாஜி ஆலியேவிடம் 12 - 5 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோல்வி

Aug 06, 2021, 3:08 pm IST

ஆடவர் மல்யுத்தம்: அரையிறுதிப்போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பஜ்ரங் புனியா பின்னடைவு. அலேர்பாய்ஜன் வீரர் ஹாஜி ஆலியேவ் 4 - 1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை.

Aug 06, 2021, 3:02 pm IST

ஆடவர் மல்யுத்தம்: இந்தியாவின் பஜ்ரங் புனியாவுக்கான அரையிறுதிப்போட்டி தொடங்கியது.

Aug 06, 2021, 3:00 pm IST

ஆடவர் மல்யுத்தம்: 65 கிலோ பிரிவுக்கான அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா பின்னடைவு

Aug 06, 2021, 9:18 am IST

மல்யுத்தம் ஆண்கள் 65kg ஆட்டம் 1/8 பைனல் ஆட்டத்தில் பஜ்ரங் புனியா வெற்றி

Aug 06, 2021, 9:17 am IST

கிரகஸ்தன் வீரர் ஏர்னேசரை வீழ்த்தி பஜ்ரங் புனியா வெற்றி

Aug 06, 2021, 9:17 am IST

3 புள்ளிகள் மற்றும் டேக் டவுன் புள்ளிகள் பெற்று பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி

Aug 06, 2021, 8:47 am IST

கடைசி 2 நிமிட ஆட்டத்தில் இந்தியா கோல் அடிக்க தீவிரம்

Aug 06, 2021, 8:42 am IST

ஆனால் 51வது நிமிடத்தில் இந்தியாவால் அடிக்க முடியவில்லை

Aug 06, 2021, 8:40 am IST

51வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 06, 2021, 8:35 am IST

கடைசி 10 நிமிட ஆட்டங்கள் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது

Aug 06, 2021, 8:35 am IST

மல்யுத்தம்: பெண்கள் 50kg ஆட்டம் 1/8 பைனல்: இந்தியாவின் சீமா பிஸ்லா தோல்வி

Aug 06, 2021, 8:35 am IST

துனிஷியாவின் சாராவிடம் 3:1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவின் சீமா பிஸ்லா தோல்வி

Aug 06, 2021, 8:29 am IST

கடைசி பெனால்டி கார்னரில் பிரிட்டன் கோல் அடித்து 4:3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

Aug 06, 2021, 8:29 am IST

45, 46, 47வது நிமிடங்களில் வரிசையாக பிரிட்டனுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு

Aug 06, 2021, 8:20 am IST

மூன்றாம் கால் ஆட்டத்தில் ஸ்கோர் சமன்: இந்தியா 3, பிரிட்டன் 3

Aug 06, 2021, 8:18 am IST

ஆனால் இந்திய கீப்பர் சவிதா சிறப்பாக செயல்பட்டு கோலை சேவ் செய்தார்

Aug 06, 2021, 8:18 am IST

44வது நிமிடத்தில் பிரிட்டன் அணிக்கு மீண்டும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது

Aug 06, 2021, 8:11 am IST

39வது நிமிடத்தில் இந்தியா சிறிய ட்ரிங்ஸ் பிரேக் எடுத்தது

Aug 06, 2021, 8:07 am IST

ஆனால் இந்தியா கோல் அடிக்க முடியாமல் மிஸ் செய்தது

Aug 06, 2021, 8:07 am IST

36வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 06, 2021, 8:06 am IST

இதனால் ஆட்டம் 3:3 என்ற கணக்கில் சமன் ஆனது

Aug 06, 2021, 8:06 am IST

35வது நிமிடத்தில் பிரிட்டன் பெனால்டி கார்னரில் 3வது கோல் போட்டது

Aug 06, 2021, 8:05 am IST

ஆனால் கோல் அடிக்கும் வாய்ப்பை பிரிட்டன் நழுவவிட்டது

Aug 06, 2021, 8:01 am IST

32வது நிமிடத்தில் பிரிட்டனுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 06, 2021, 8:01 am IST

இந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரிட்டனுக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 06, 2021, 7:55 am IST

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது

Aug 06, 2021, 7:47 am IST

முதல் பாதி ஆட்டம் முடிந்தது: தொடக்கத்தில் சுணக்கம் காட்டிய இந்தியா சிறப்பான காம்பேக்

Aug 06, 2021, 7:47 am IST

இதனால் பிரிட்டனுக்கு எதிராக 3:2 என்ற கோல் கணக்கில் இந்தியா லீட் எடுத்தது

Aug 06, 2021, 7:47 am IST

ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்தியாவின் கட்டாரியா 3வது கோல் போட்டார்

Aug 06, 2021, 7:41 am IST

பின்னடைவை சந்தித்த இந்திய மகளிர் அணி வேகமாக மீண்டு வந்தது

Aug 06, 2021, 7:41 am IST

இதனால் இந்தியா vs பிரிட்டன் ஆட்டம் 2:2 என்ற சமன் ஆகியுள்ளது

Aug 06, 2021, 7:40 am IST

இதில் இந்தியாவின் குர்ஜித் கார் மீண்டும் இன்னொரு கோல் போட்டு அசத்தினார்

Aug 06, 2021, 7:39 am IST

26வது நிமிடத்தில் இந்தியாவிற்கு இன்னொரு பெனால்டி கார்னர் வாய்ப்பும் கிடைத்தது

Aug 06, 2021, 7:39 am IST

இந்தியாவிற்காக முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து குர்ஜித் கார் கோல் அடித்து அசத்தி வருகிறார்

Aug 06, 2021, 7:39 am IST

இந்தியாவின் குர்ஜித் கார் கோல் அடித்து அசத்தினார்

Aug 06, 2021, 7:39 am IST

23வது நிமிடத்தில் இந்தியாவிற்கு இரண்டாவது பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 06, 2021, 7:35 am IST

இதனால் இந்தியாவிற்கு எதிராக பிரிட்டன் 2:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

Aug 06, 2021, 7:35 am IST

ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் பிரிட்டன் அணி இரண்டாவது கோல் போட்டது

Aug 06, 2021, 7:35 am IST

இரண்டாம் கால் ஆட்டத்தில் பிரிட்டன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது

Aug 06, 2021, 7:35 am IST

ஆனால் பொன்னான கோல் அடிக்கும் வாய்ப்பை இந்தியா இழந்தது

Aug 06, 2021, 7:33 am IST

19வது நிமிடத்தில் இந்திய அணிக்கு முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 06, 2021, 7:31 am IST

கோல் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டது பிரிட்டன்

Aug 06, 2021, 7:30 am IST

17வது நிமிடத்தில் பிரிட்டனுக்கு மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பு

Aug 06, 2021, 7:28 am IST

இதனால் இந்தியாவிற்கு எதிராக பிரிட்டன் 1:0 என்ற கணக்கில் முன்னிலை

Aug 06, 2021, 7:28 am IST

இந்தியாவின் தீப் கிரேஸ் செய்த தவறால் "செல்ப் கோல்" விழுந்தது

Aug 06, 2021, 7:23 am IST

இந்தியாவிற்கு எதிராக 16வது நிமிடத்தில் பிரிட்டனின் முதல் கோல் போடப்பட்டது

Aug 06, 2021, 7:23 am IST

இரண்டாம் கால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பிரிட்டன் அணி கோல் போட்டது

Aug 06, 2021, 7:23 am IST

முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவின் டிபன்ஸ், கீப்பிங் இரண்டும் அபாரமாக அமைந்து இருந்தது

Aug 06, 2021, 7:20 am IST

இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் கால் ஆட்டத்தில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை

Aug 06, 2021, 7:20 am IST

இந்தியாவின் கீப்பர் சவிதா மீண்டும் கோலை தடுத்தார்.

Aug 06, 2021, 7:18 am IST

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் பிரிட்டன் அணிக்கு கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது.

Aug 06, 2021, 7:16 am IST

இந்திய பெண்கள் அணியின் கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு சேவ் செயதார்

Aug 06, 2021, 7:15 am IST

ஆனால் இதிலும் கோல் போடும் வாய்ப்பை பிரிட்டன் இழந்தது

Aug 06, 2021, 7:15 am IST

10வது நிமிடத்தில் பிரிட்டன் அணிக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 06, 2021, 7:15 am IST

முதல் 10 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை

Aug 06, 2021, 7:15 am IST

முதல் 10 நிமிடங்கள் வரை ஆட்டம் மிகவும் நிதானமாக சென்றது

Aug 06, 2021, 7:09 am IST

இரண்டாவது நிமிடத்தில் இந்த பெனால்டி கார்னரில் கோல் அடிக்கும் வாய்ப்பை பிரிட்டன் நழுவ விட்டது

Aug 06, 2021, 7:08 am IST

ஆட்டத்தின் இரண்டாம் நிமிடத்தில் கிரேட் பிரிட்டனுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு

Aug 06, 2021, 7:03 am IST

ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி: வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் தொடங்கியது

Aug 06, 2021, 7:03 am IST

கிரேட் பிரிட்டன் அணியை இந்திய பெண்கள் ஹாக்கி அணி எதிர்கொள்கிறது

Aug 06, 2021, 7:03 am IST

இன்று இந்திய அணி வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள போட்டிகளின் விவரம் பின்வருமாறு,

Aug 06, 2021, 7:02 am IST

தடகளம்: ஆண்கள் 50கிமீ ரேஸ் பயண நடை பைனல்– குர்பிரீத் சிங், காலை 2:00 மணிக்கு

Aug 06, 2021, 7:02 am IST

தடகளம்: பெண்கள் 20கிமீ ரேஸ் பயண நடை பைனல்– ப்ரியங்காக கொசுவாமி, பாவனா ஜாட், பிற்பகல் 1:00 மணிக்கு

Aug 06, 2021, 7:02 am IST

தடகளம்: ஆண்கள் 4x400m ரிலே ரவுண்ட் 1, தகுதி சுற்று 2 – அமோஜி ஜேக்கப், ராஜிவ் ஆரோக்கியா, பாண்டி நாகநாதன், நிர்மல் டாம் நோவா, அனாஸ் முகமது யாஹியா மாலை 5:07 மணிக்கு

Aug 06, 2021, 7:01 am IST

கோல்ப்: பெண்கள் ரவுண்டு 3 – திக்ஸ்ஹா தாக்கர், காலை 5:29 AM

Aug 06, 2021, 7:01 am IST

கோல்ப்: ஆண்கள் ரவுண்டு 3 – அதிதி அசோக், காலை 5:48 AM

Aug 06, 2021, 7:01 am IST

ஹாக்கி: ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கியில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் இன்று நடக்கிறது. கிரேட் பிரிட்டன் அணியை இந்திய பெண்கள் ஹாக்கி அணி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஆட்டம் நடக்கிறது.

Aug 06, 2021, 7:01 am IST

மல்யுத்தம்: பெண்கள் 50kg ஆட்டம் 1/8 பைனல் – சீமா பிஸ்லா, காலை 8:07 AM

Aug 06, 2021, 7:01 am IST

மல்யுத்தம்: ஆண்கள் 65kg ஆட்டம் 1/8 பைனல் – Bajrang Punia, காலை 8:49 AM

Aug 06, 2021, 7:01 am IST

மல்யுத்தம்: பெண்கள் 50kg ஆட்டம் காலிறுதி– சீமா பிஸ்லா, தேர்வாகும் பட்சத்தில், காலை 8:56 AM

Aug 06, 2021, 7:01 am IST

மல்யுத்தம்: ஆண்கள் 65kg ஆட்டம் காலிறுதி– பஜ்ரங் புனியா, தேர்வாகும் பட்சத்தில், காலை 9:17 AM

Aug 06, 2021, 7:01 am IST

மல்யுத்தம்: ஆண்கள் 65kg ஆட்டம் செமி பைனல்– பஜ்ரங் புனியா, தேர்வாகும் பட்சத்தில், காலை 2:52 PM

Aug 06, 2021, 7:00 am IST

மல்யுத்தம்: பெண்கள் 50kg ஆட்டம் செமி பைனல்– சீமா பிஸ்லா, தேர்வாகும் பட்சத்தில், காலை 3:13 PM

Aug 06, 2021, 6:51 am IST

ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி: வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் இன்று நடக்கிறது

Aug 06, 2021, 6:51 am IST

கிரேட் பிரிட்டன் அணியை இந்திய பெண்கள் ஹாக்கி அணி எதிர்கொள்கிறது

Aug 06, 2021, 6:51 am IST

இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஆட்டம் நடக்கிறது

Aug 05, 2021, 5:13 pm IST

ஆடவர் மல்யுத்தம்: வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா தோல்வி. சான் மரினோனொவை சேர்ந்த மைல்ஸ் அமைனிடம் 4 - 2 என்ற புள்ளிக்கணக்கில் போராடித்தோல்வி

Aug 05, 2021, 4:57 pm IST

ஆடவர் மல்யுத்தம்: வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா முன்னிலை. சான் மரினோனொவை சேர்ந்த மைல்ஸ் அமைனுக்கு எதிராக 2 - 0 என முன்னிலை

Aug 05, 2021, 4:41 pm IST

ஆடவர் மல்யுத்தம்: இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா தோல்வி.

Aug 05, 2021, 4:41 pm IST

ரஷ்யாவின் சாவுரிடம் 7 - 4 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவினார். இதன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை வென்றார் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா

Aug 05, 2021, 4:38 pm IST

கடைசி சில நிமிடம் இருக்கையில் ரவிக்குமார் 2 புள்ளிகளை எடுத்து நம்பிக்கை. 7 - 4 என புள்ளிக்கணக்கில் பரபரப்பு போட்டி

Aug 05, 2021, 4:37 pm IST

முதல் சுற்றின் முடிவில் 2 - 4 என்ற புள்ளிக்கணக்கில் ரஷ்ய வீரர் முன்னிலை. புள்ளிகளை எடுக்க ரவிக்குமார் போராட்டம்.

Aug 05, 2021, 4:36 pm IST

ஆட்டம் முடிய இன்னும் 2 நிமிடங்களே உள்ளதால் ரவிக்குமார் புள்ளிகளை எடுத்து முன்னிலை பெற வேண்டிய கட்டாயம்.

Aug 05, 2021, 4:36 pm IST

2ஆம் சுற்றின் தொடக்கத்திலேயே ரவிக்குமார் மற்றொரு புள்ளியை விட்டுக்கொடுத்தார்.

Aug 05, 2021, 4:25 pm IST

ஆடவர் மல்யுத்தம்: இந்தியாவின் ரவிக்குமார் தஹியா - ரஷ்யாவின் சாவுர் மோதும் இறுதிப்போட்டி தொடங்கியது.

Aug 05, 2021, 11:54 am IST

பெண்கள் 53 கிலோ ஆட்டம் – காலிறுதி போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்

Aug 05, 2021, 10:18 am IST

“இந்தியாவுக்கு பதக்கம் வென்ற கொடுத்த எனது மகன்களுக்கு வாழ்த்துகள். ஒட்டுமொத்த தேசமும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது. இந்திய ஹாக்கிக்கு இது புது அத்தியாயம்” - பி.டி.உஷா

Aug 05, 2021, 10:18 am IST

“இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் வாழ்துகள். அற்புதமான ஆட்டம். பெனால்டி கார்னர் கோலை ஸ்ரீஜேஷ் தடுத்தது திருப்புமுனையாக இருந்து, உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்” - சச்சின் டெண்டுல்கர்

Aug 05, 2021, 10:10 am IST

இந்திய ஹாக்கி அணிக்கு நெஞ்சார்ந்த வாழ்துகள் உங்கள் கடும் முயற்சியை நினைத்து பெருமை கொள்கிறோம். இது என்றும் நிலைத்திருக்கும்” - சுரேஷ் ரெய்னா

Aug 05, 2021, 10:09 am IST

“வெண்கலம் கூட எனக்கு தங்கம் பதக்கம் போல் தான் தெரிகிறது. இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்”- ஆனந்த் மஹிந்திரா

Aug 05, 2021, 9:58 am IST

41 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஒலிம்பிக் ஹாக்கில் இந்தியாவுக்கு 12வது பதக்கத்தை கொண்டு வருவதற்கு வாழ்த்துகள்” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

Aug 05, 2021, 9:57 am IST

“இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்திய இளைஞர்களுக்கு விளையாட்டு துறையில் பங்காற்ற வேண்டும் என்ற தூண்டுகோலாக இது இருக்கும்” - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

Aug 05, 2021, 9:57 am IST

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணி இதுவரை வென்ற பதக்கங்கள் விவரம்

Aug 05, 2021, 9:57 am IST

1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது

Aug 05, 2021, 9:57 am IST

1932 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது

Aug 05, 2021, 9:57 am IST

1936 பெர்லின் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது

Aug 05, 2021, 9:56 am IST

1948 லண்டன் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது

Aug 05, 2021, 9:56 am IST

1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது

Aug 05, 2021, 9:56 am IST

1956 மெல்போர்ன் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது

Aug 05, 2021, 9:56 am IST

1960 ரோம் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றது

Aug 05, 2021, 9:56 am IST

1964 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது

Aug 05, 2021, 9:56 am IST

1968 மெக்சிக்கோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலம் வென்றது

Aug 05, 2021, 9:56 am IST

1972 முனிச் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலம் வென்றது

Aug 05, 2021, 9:55 am IST

1980 மாஸ்கோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கம் வென்றது

Aug 05, 2021, 9:55 am IST

2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலம் வென்றது

Aug 05, 2021, 9:52 am IST

இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து, வரலாறு படைக்கப்பட்டது! இந்தியர் ஒவ்வொருவர் மனதில் மறக்க முடியாத நாளாக இது இருக்கும் என புகழாரம்.

Aug 05, 2021, 8:55 am IST

ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் இந்தியா ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பின் பதக்கம் வாங்கி அசத்தி உள்ளது

Aug 05, 2021, 8:55 am IST

கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வென்றது

Aug 05, 2021, 8:55 am IST

வெறும் 6 அணிகள் ஆடிய போட்டியில் இந்தியா தங்கம் வென்றது

Aug 05, 2021, 8:55 am IST

அதன்பின் இவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்தியா மீண்டும் பதக்கம் வென்றுள்ளது

Aug 05, 2021, 8:55 am IST

அதன்பின் இவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்தியா மீண்டும் பதக்கம் வென்றுள்ளது

Aug 05, 2021, 8:50 am IST

ஒலிம்பிக் ஹாக்கி; ஜெர்மனியை வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்றது

Aug 05, 2021, 8:50 am IST

ஜெர்மனியை இந்திய ஹாக்கி அணி 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது

Aug 05, 2021, 8:48 am IST

கடைசி 6 நொடி இருக்கும் போது ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர்

Aug 05, 2021, 8:47 am IST

போட்டி முடியும் நேரத்தில் 57வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர்

Aug 05, 2021, 8:47 am IST

ஆனால் கோல் அடிக்கும் வாய்ப்பை ஜெர்மனி நழுவவிட்டது

Aug 05, 2021, 8:46 am IST

கடைசி 4 நிமிட ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது

Aug 05, 2021, 8:46 am IST

ஜெர்மனி கோல் அடிக்க தீவிரம் காட்டி வருகிறது

Aug 05, 2021, 8:40 am IST

53வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 05, 2021, 8:40 am IST

இதையும் சேவ் செய்து இந்திய அணியை காப்பாற்றினார் கீப்பர் ஸ்ரீஜேஷ்

Aug 05, 2021, 8:36 am IST

கடைசி 7 நிமிடங்கள்: எப்படியாவது கோல் போட்டு சமன் செய்ய ஜெர்மனி தீவிரம்

Aug 05, 2021, 8:36 am IST

பெண்கள் 53கிலோ ஆட்டம் – 1/8 பைனல்: இந்தியாவின் வினேஷ் போகட் வெற்றி

Aug 05, 2021, 8:36 am IST

ஸ்விட்சர்லாந்து வீராங்கனை சோபியாவை 7:1 கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி

Aug 05, 2021, 8:30 am IST
Mykhel

47வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் ஜெர்மனி 4வது கோல் அடித்தது

Aug 05, 2021, 8:29 am IST

ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது

Aug 05, 2021, 8:29 am IST

கடைசி கால் ஆட்டம் நடந்து வருகிறது

Aug 05, 2021, 8:29 am IST

அடுத்தடுத்த பெனால்டி கார்னர்களில் ஜெர்மனியால் கோல் அடிக்க முடியவில்லை

Aug 05, 2021, 8:22 am IST

44வது நிமிடத்தில் அடுத்தடுத்து ஜெர்மனிக்கு 2 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 05, 2021, 8:17 am IST

42வது நிமிடத்தில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 05, 2021, 8:17 am IST

ஆனால் இந்தியாவின் ஸ்மித் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்

Aug 05, 2021, 8:11 am IST

37வது நிமிடத்தில் இந்தியாவிற்கு மீண்டும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது

Aug 05, 2021, 8:10 am IST

ஆனால் நூலிழையில் கோல் வாய்ப்பை இந்தியாவின் மன்பிரீத் சிங் மிஸ் செய்தார்

Aug 05, 2021, 8:06 am IST

34வது நிமிடத்தில் இந்தியாவின் ஐந்தாவது கோலை சிம்ரான் ஜித் பதிவு செய்தார்

Aug 05, 2021, 8:04 am IST

34வது நிமிடத்தில் இந்தியா மீண்டும் கோல் போட்டு அசத்தல்

Aug 05, 2021, 8:04 am IST

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டம்

Aug 05, 2021, 8:03 am IST

ஜெர்மனிக்கு எதிராக இந்தியா 4:3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது

Aug 05, 2021, 8:02 am IST

ருபிண்டர் சிங் 31வது நிமிடத்தில் இந்தியாவிற்காக கோல் போட்டார்

Aug 05, 2021, 8:02 am IST

பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா 4வது கோல் போட்டது

Aug 05, 2021, 8:02 am IST

நீண்ட நேரத்திற்கு பின் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 05, 2021, 8:02 am IST

ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 05, 2021, 7:52 am IST

பெண்கள் 57கிலோ ஆட்டம் – ரெப்சேஜ் பிரிவில் அன்ஷு மாலிக் தோல்வி

Aug 05, 2021, 7:52 am IST

அன்ஷு மாலிக் ரஷ்யாவின் வலேரியாவிடம் 5:1 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தார்

Aug 05, 2021, 7:52 am IST

முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இந்தியா 3: ஜெர்மனி 3

Aug 05, 2021, 7:52 am IST

30வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் கோல் போட்டு அசத்தினார்

Aug 05, 2021, 7:49 am IST

விறுவிறுப்பின் உச்சத்தில் இந்தியா vs ஜெர்மனி ஹாக்கி மேட்ச்

Aug 05, 2021, 7:49 am IST

இந்தியா மூன்றாவது கோல் போட்டு அசத்தியது

Aug 05, 2021, 7:46 am IST

24வது நிமிடத்தில் ஜெர்மனி 3வது கோல் போட்டு முன்னிலை பெற்ற நிலையில் இந்தியா கோல்

Aug 05, 2021, 7:46 am IST

இதை பயன்படுத்தி இந்தியா 2வது கோல் போட்டது

Aug 05, 2021, 7:46 am IST

இந்தியாவின் ஹர்திக் சிங் கோல் போட்டு அசத்தினார்

Aug 05, 2021, 7:46 am IST

26வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 05, 2021, 7:45 am IST

பெண்கள் 57கிலோ ஆட்டம் – ரெப்சேஜ் பிரிவில் அன்ஷு மாலிக் ஆட்டம் தொடங்கியது

Aug 05, 2021, 7:45 am IST

லீக் ஆட்டத்தில் அன்ஷு மாலிக் எதிர்கொண்ட பெலாரஸ் வீராங்கனை ஐரினா பைனல் சென்றார்

Aug 05, 2021, 7:45 am IST

இதனால் அன்ஷு மாலிக்கிற்கு ரெப்சேஜ் வாய்ப்பு கிடைத்தது

Aug 05, 2021, 7:45 am IST

ரெப்சேஜ் போட்டி மூலம் அன்ஷு மாலிக் வெண்கலம் வெல்ல வாய்ப்பு

Aug 05, 2021, 7:45 am IST

அன்ஷு மாலிக் ரஷ்யாவின் வலேரியாவை தற்போது எதிர்கொள்கிறார்

Aug 05, 2021, 7:38 am IST

இந்தியாவிற்கு எதிராக ஜெர்மனி 2:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை

Aug 05, 2021, 7:38 am IST

இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி மீண்டும் லீட் எடுத்தது

Aug 05, 2021, 7:38 am IST

22வது நிமிடத்தில் மீண்டும் ஜெர்மனி இரண்டாவது கோல் போட்டு முன்னிலை

Aug 05, 2021, 7:33 am IST

இந்தியாவின் சிம்ரான் ஜித் முதல் கோல் போட்டு அசத்தினார்

Aug 05, 2021, 7:32 am IST

இந்தியா vs ஜெர்மனி மேட்ச் 1:1 என்ற கணக்கில் சமன் ஆகியுள்ளது

Aug 05, 2021, 7:32 am IST

ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் இந்தியா முதல் கோல்

Aug 05, 2021, 7:32 am IST

இரண்டாவது கால் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது

Aug 05, 2021, 7:26 am IST

முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக ஜெர்மனி 1:0 என்ற கணக்கில் முன்னிலை

Aug 05, 2021, 7:26 am IST

நான்கு முறையும் இந்தியாவின் கீப்பர் ஸ்ரீஜீஷ் பந்தை தடுத்து அணியை காப்பாற்றினார்

Aug 05, 2021, 7:23 am IST

வரிசையாக பெனால்டி கார்னர் மூலம் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது

Aug 05, 2021, 7:23 am IST

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு மீண்டும் மூன்றாவது பெனால்டி கார்னர் கிடைத்தது

Aug 05, 2021, 7:22 am IST

அதை தொடர்ந்து நான்காவதாக இன்னொரு பெனால்டி கார்னர் வாய்ப்பும் கிடைத்தது

Aug 05, 2021, 7:21 am IST

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 05, 2021, 7:19 am IST

முதல் 10 நிமிடங்கள் முழுக்க ஜெர்மனி களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது

Aug 05, 2021, 7:19 am IST

ஜெர்மனிக்கு 6வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது

Aug 05, 2021, 7:19 am IST

ஆனால் கீப்பர் ஸ்ரீஜீஷ் பந்தை தடுத்தார், இன்று இந்தியாவின் டிபன்ஸ் மோசமாக அமைந்துள்ளது

Aug 05, 2021, 7:11 am IST

ஆனால் இந்தியாவின் ருபிண்டர் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்

Aug 05, 2021, 7:11 am IST

4வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது

Aug 05, 2021, 7:07 am IST

ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே ஜெர்மனி முதல் கோல் போட்டது

Aug 05, 2021, 7:07 am IST

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஜெர்மனி இந்தியாவிற்கு எதிராக ஆதிக்கம்

Aug 05, 2021, 7:07 am IST

ஜெர்மனி தொடக்கத்திலேயே முதல் கோல் போட்டு முன்னிலை

Aug 05, 2021, 7:07 am IST

ஹாக்கி ஆண்கள் வெண்கல பதக்க ஆட்டம்: ஆட்டம் தொடங்கியது

Aug 05, 2021, 7:07 am IST

ஜெர்மனி தொடக்கத்திலேயே முதல் கோல் போட்டு முன்னிலை

Aug 05, 2021, 7:00 am IST

ஹாக்கி செமி பைனலில் தோல்வி அடைந்ததால் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இன்று ஆடுகிறது

Aug 05, 2021, 7:00 am IST

செமி பைனல் ஹாக்கி ஆட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது

Aug 05, 2021, 7:00 am IST

பெல்ஜியம் அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது

Aug 05, 2021, 7:00 am IST

5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது

Aug 05, 2021, 7:00 am IST

இதனால் இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆட வேண்டும்

Aug 05, 2021, 6:52 am IST

இன்று இந்திய வீரர்கள் ஆட உள்ள ஆட்டங்களில் விவரங்கள் பின்வருமாறு:

Aug 05, 2021, 6:52 am IST

தடகளம் : ஆண்கள் 20km நடை போட்டி- பைனல்-இர்பான், சந்தீப் குமார், ராகுல் ரோஹில்லா பிற்பகல் 1 மணிக்கு ஆடுகிறார்கள்

Aug 05, 2021, 6:52 am IST

கோல்ப் : பெண்கள் ஒற்றையர் ஆட்டம்- ரவுண்டு 2 – அதித்தி அசோக் காலை 4:00 மணிக்கு

Aug 05, 2021, 6:52 am IST

கோல்ப் : பெண்கள் ஒற்றையர் ஆட்டம்- ரவுண்டு 2 – திக்சா தாஹர், காலை 5.44 மணிக்கு

Aug 05, 2021, 6:51 am IST

ஹாக்கி : இந்திய ஹாக்கி ஆண்கள் அணி இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆடுகிறது.இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் காலை 7 மணிக்கு ஆட்டம் நடக்க உள்ளது.

Aug 05, 2021, 6:51 am IST

மல்யுத்தம்: பெண்கள் 57கிலோ ஆட்டம் – ரெப்சேஜ் – அன்ஷு மாலிக், காலை 7.37 AM

Aug 05, 2021, 6:51 am IST

மல்யுத்தம்: பெண்கள் 53கிலோ ஆட்டம் – 1/8 பைனல்– வினேஷ் போகட், காலை 8:00 AM

Aug 05, 2021, 6:51 am IST

மல்யுத்தம்: பெண்கள் 53கிலோ ஆட்டம் – காலிறுதி– வினேஷ் போகட், காலை 8.56 AM

Aug 05, 2021, 6:51 am IST

மல்யுத்தம்: பெண்கள் 57கிலோ ஆட்டம் – செமி பைனல் -–வினேஷ் போகட், பிற்பகல் 3.25 PM

Aug 05, 2021, 6:51 am IST

மல்யுத்தம்: ஆண்கள் 57கிலோ ஆட்டம் – பைனல் – ரவி குமார் தஹியா மாலை 4:20PM

Aug 05, 2021, 6:50 am IST

மல்யுத்தம்: ஆண்கள் 86 கிலோ ஆட்டம் - வெண்கல பதக்க ஆட்டம்- தீபக் புனியா, மாலை 4:40 PM

Aug 05, 2021, 6:50 am IST

மல்யுத்தம்: பெண்கள் 57கிலோ ஆட்டம் – வெண்கல பதக்க ஆட்டம் – அன்ஷு மாலிக், தகுதி பெரும்பட்சத்தில், மாலை 5.35 PM

Aug 05, 2021, 6:43 am IST

ஒலிம்பிக் 2020: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆடுகிறது. இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் காலை 7 மணிக்கு ஆட்டம் நடக்க உள்ளது

Aug 04, 2021, 5:07 pm IST

மகளிர் ஹாக்கி அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி.

Aug 04, 2021, 5:07 pm IST

அர்ஜெண்டினா அணியிடம் 2 - 1 என்ற கோல் கணக்கில் இறுதிவரை போராடி வீழ்ந்தது.

Aug 04, 2021, 5:07 pm IST

ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இந்தியாவின் நவ்நீத் கோல் அடிக்க முயற்சி. ஆனால் அர்ஜெண்டினாவின் கீப்பர் தடுத்ததால் ஏமாற்றம்.

Aug 04, 2021, 5:02 pm IST

அரையிறுதிப்போட்டியின் கடைசி 2 நிமிடங்கள். போட்டியை சமன் செய்ய வேண்டும் என இந்திய அணி கடைசிகட்ட போராட்டம்.

Aug 04, 2021, 4:58 pm IST

தடுப்பாட்டம் ஆடி வந்த அர்ஜெண்டினா திடீரென அட்டாக்கிங்கிற்கு மாற்றம். 3வது கோல் அடிக்க முனைப்பு.

Aug 04, 2021, 4:56 pm IST

அரையிறுதிப்போட்டியின் கடைசி 8 நிமிடங்கள். கோல் அடித்து போட்டியை சமநிலை செய்ய இந்திய அணி போராட்டம்.

Aug 04, 2021, 4:56 pm IST

பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடிக்க தவறியது இந்திய அணி. அர்ஜெண்டினாவின் சூசி மீண்டும் கோலை தடுத்து அசத்தல்.

Aug 04, 2021, 4:55 pm IST

இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு

Aug 04, 2021, 4:47 pm IST

3வது கால் ஆட்டத்தின் முடிவில் 1 - 2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை.

Aug 04, 2021, 4:44 pm IST

கோல் அடிப்பதற்காக கடைசி எல்லை வரை செல்லும் இந்திய அணி. அர்ஜெண்டினாவின் டிஃபன்ஸை தாண்டி கோல் அடிக்க திணறல்

Aug 04, 2021, 4:42 pm IST

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை நேகா கோயலுக்கு க்ரீன் கார்ட். 2 நிமிடத்திற்கு வெளியேற்றப்பட்டார்.

Aug 04, 2021, 4:42 pm IST

கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீராங்கனைகள். இறுதிகட்ட டாக்டிக்ஸை பயன்படுத்தி வருகிறது.

Aug 04, 2021, 4:36 pm IST

ஹாக்கி அரையிறுதிப்போட்டியின் 2வது பாதியில் அர்ஜெண்டினா அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை.

ஹாக்கி அரையிறுதிப்போட்டியின் 2வது பாதியில் அர்ஜெண்டினா அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை.

Aug 04, 2021, 4:35 pm IST

மீண்டு வர இந்திய வீராங்கனைகள் ஆக்ரோஷ ஆட்டம்.

Aug 04, 2021, 4:34 pm IST

அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு.

Aug 04, 2021, 4:34 pm IST

ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் அந்த அணியின் சலிமா கோல் அடித்து அசத்தல்

Aug 04, 2021, 4:30 pm IST

அர்ஜெண்டினா அணி பெனால்டி வாய்ப்பை கேட்க, அது நடுவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Aug 04, 2021, 4:23 pm IST

இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடி வருவதால் எந்த தரப்பில் இருந்து கோல் வரும் என பதற்றம்.

Aug 04, 2021, 4:18 pm IST

செமி பைனல் ஹாக்கி: முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா - அர்ஜெண்டினா அணிகள் தலா ஒரு கோல் அடித்து சமநிலை.

Aug 04, 2021, 4:12 pm IST

27வது நிமிடத்தில் அர்ஜென்டினாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு: சவிதா மீண்டும் அபாரமாக தடுத்தார்

Aug 04, 2021, 4:11 pm IST

பெனால்டி கார்னரில் கோல் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டது இந்தியா

Aug 04, 2021, 4:08 pm IST

அடுத்த நிமிடமே வரிசையாக இந்தியாவிற்கு 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகள்

Aug 04, 2021, 4:07 pm IST

25வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு

Aug 04, 2021, 4:06 pm IST

இந்தியா கோல் போடும் வாய்ப்பை தவறவிட்டது

Aug 04, 2021, 4:03 pm IST

23து நிமிடத்தில் அர்ஜென்டினாவில் கோல் போடும் வாய்ப்பை தடுத்தார் சவிதா

Aug 04, 2021, 3:58 pm IST

செமி பைனல் ஹாக்கி: அர்ஜென்டினா vs இந்தியா இடையிலான ஆட்டம் 1:1 கோல் கணக்கில் சமனில் உள்ளது

Aug 04, 2021, 3:58 pm IST

மூன்றாவது முறையாக மீண்டும் அர்ஜென்டினாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு

Aug 04, 2021, 3:57 pm IST

17வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் மரியா கோல் அடித்து அசத்தல்

Aug 04, 2021, 3:56 pm IST

போட்டியின் 16வது நிமிடத்தில் அர்ஜென்டினாவிற்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு

Aug 04, 2021, 3:55 pm IST

ஆனால் பெனால்டி கார்னரில் கோல் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டது அர்ஜென்டினா

Aug 04, 2021, 3:54 pm IST

முதல் கால் ஆட்டம் முழுக்க இந்தியா ஆதிக்கம்

Aug 04, 2021, 3:54 pm IST

அர்ஜென்டினாவை கோல் அடிக்க விடாமல் இந்தியா ஆதிக்கம்

Aug 04, 2021, 3:53 pm IST

செமி பைனல் ஹாக்கி: அர்ஜென்டினாவிற்கு எதிராக இந்தியா 1:0 கோல் கணக்கில் முன்னிலை

Aug 04, 2021, 3:48 pm IST

இந்திய பெண்கள் ஹாக்கி டிபன்ஸ் அபாரம்: முதல் கோலை அடிக்க முடியாமல் அர்ஜென்டினா திணறல்

Aug 04, 2021, 3:44 pm IST

இந்தியாவின் கீப்பர் சவிதா சிறப்பாக செயல்பட்டு பெனால்டி கார்னர் ஷாட்டை தடுத்தார்

Aug 04, 2021, 3:44 pm IST

போட்டியின் எட்டாவது நிமிடத்தில் அர்ஜென்டினாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு

Aug 04, 2021, 3:44 pm IST

பெனால்டி கார்னரில் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது அர்ஜென்டினா

Aug 04, 2021, 3:42 pm IST

இந்திய பெண்கள் ஹக்காகி ஆடும் அணியில் இன்று நவ்ஜோத் கார், குர்ஜித் கார், தீப் கிரேஸ் எக்கா, மோனிகா, நிஷா, நேஹா, சவிதா, ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா, உதித்தா, நவநீத் ஆகியோர் ஆடுகிறார்கள்

Aug 04, 2021, 3:38 pm IST

குர்ஜித் கோல்தான் கடந்த போட்டியில் இந்தியா வெல்ல உதவியாக இருந்தது

Aug 04, 2021, 3:38 pm IST

இன்றும் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே குர்ஜித் கோல் அடித்து அசத்தல்

Aug 04, 2021, 3:38 pm IST

கடந்த காலிறுதி ஆட்டத்தில் ஆஸி.க்கு எதிராக குர்ஜித் கார் மட்டுமே கோல் அடித்து இருந்தார்

Aug 04, 2021, 3:38 pm IST

2வது நிமிடத்திலேயே இந்தியாவின் குர்ஜித் கார் கோல் அடித்து அசத்தல்

Aug 04, 2021, 3:37 pm IST

ஹாக்கி பெண்கள் செமி பைனல்: அர்ஜென்டினாவிற்கு எதிராக இந்தியா முதல் கோல்

Aug 04, 2021, 3:37 pm IST

ஒலிம்பிக் பெண்கள் செமி பைனல் ஹாக்கி: இந்தியா vs அர்ஜென்டினா இடையிலான சற்று நேரத்தில் துவங்குகிறது

Aug 04, 2021, 3:33 pm IST

இந்தியாவுக்கு 4வது பதக்கம் உறுதியானது. ஆடவர் மல்யுத்த போட்டியில் கஜகஸ்தான் வீரர் நுரிஸ்லாம் சனாயெவை வீழ்த்தி இந்தியாவின் ரவிக்குமார் தஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Aug 04, 2021, 2:58 pm IST

ஆடவர் மல்யுத்த அரையிறுதிப்போட்டி: இந்தியாவின் ரவிக்குமார் தஹியா மற்றும் கசகஸ்தானின் நுரிஸ்லாம் சனாயெவை ஆகியோருக்கு இடையேயான போட்டி தொடங்கியது.

Aug 04, 2021, 12:57 pm IST

ஒலிம்பிக் பாக்சிங்கில் வெண்கலம் வென்ற லோவ்லினாவுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு இந்தியாவின் பெண் சக்திக்கு உதாரணமாக லோவ்லினா பதக்கம் வென்று இருப்பதாக மோடி பாராட்டு

Aug 04, 2021, 11:26 am IST

ஒலிம்பிக் பெண்கள் பாக்சிங் 69 கிலோ பிரிவு போட்டி: இந்தியாவின் லோவ்லினா தோல்வி செமி பைனலில் துருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலியிடம் 5:0 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தார்

Aug 04, 2021, 11:26 am IST

ஒலிம்பிக் பெண்கள் பாக்சிங் 69 கிலோ பிரிவு போட்டி: இந்தியாவின் லோவ்லினா தோல்வி. செமி பைனலில் துருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலியிடம் 5:0 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தார்

Aug 04, 2021, 11:05 am IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 4 அரையிறுதிப்போட்டிகள். மகளிர் ஹாக்கி அணி, குத்துச்சண்டையில் லாவ்லினா, மல்யுத்தத்தில் தீபக் புனியா, ரவி தஹியா ஆகியோர் அரையிறுதிப்போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

Aug 04, 2021, 10:04 am IST

ஒலிம்பிக் 2020 மல்யுத்தம்: இந்தியாவின் அன்ஷு மாலிக் ரெப்சேஜ் முறையில் வெண்கல சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு பெலாரசஸ் நாட்டின் ஐரினா செமி பைனலுக்கு தகுதி பெற்றார் ஐரினா பைனலுக்கு தகுதி பெற்றால் அன்ஷு மாலிக் ரெப்சேஜ் முறையில் வெண்கல சுற்றுக்கு தகுதி பெறுவார்

Aug 04, 2021, 9:55 am IST

ஒலிம்பிக் பாக்சிங்: பெண்கள் 69kg செமி பைனல் ஆட்டம் இன்று நடக்க உள்ளது இந்தியாவின் லோவலினா போர்ஹாஹைன் vs புஸேனஸ் சுர்மனேலி (துருக்கி) இடையே போட்டி நடக்க உள்ளது

Aug 04, 2021, 9:48 am IST

ஒலிம்பிக் 2020 மல்யுத்தம்: இந்தியா இன்று ஆடிய 3 ஆட்டங்களில் 2ல் வெற்றி

Aug 04, 2021, 9:48 am IST

மல்யுத்தம்: பெண்கள் 57kg பிரிவு- 1/8 பைனல் - இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி

Aug 04, 2021, 9:48 am IST

மல்யுத்தம்: ஆண்கள் 86kg பிரிவு- 1/8 பைனல் - இந்தியாவின் தீபக் புனியா வெற்றி

Aug 04, 2021, 9:48 am IST

மல்யுத்தம்: ஆண்கள் 57 kg பிரிவு- 1/8 பைனல்: இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெற்றி

Aug 04, 2021, 9:46 am IST

ஒலிம்பிக் 2020 மல்யுத்தம்: ஆண்கள் 86kg பிரிவு- 1/8 பைனல் - இந்தியாவின் தீபக் புனியா வெற்றி. நைஜீரியா நாட்டின் அகிமிரோவை 12:1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்

Aug 04, 2021, 9:09 am IST
Mykhel

பெண்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லாகின் உலக சாதனை. 51.46 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார்

Aug 04, 2021, 9:08 am IST

ஒலிம்பிக் 2020 மல்யுத்தம்: 57kg பிரிவு- 1/8 பைனல் - இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி. பெலாரசஸ் நாட்டின் ஐரினாவிடம் 8:2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்

Aug 04, 2021, 8:32 am IST
Mykhel

ஒலிம்பிக் 2020 மல்யுத்தம்: ஆண்கள் 57 kg பிரிவு- 1/8 பைனல்: இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெற்றி. கொலம்பியாவின் டைக்ரசை எளிதாக 13:2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா தற்போது காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்

Aug 04, 2021, 8:32 am IST
Mykhel

ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜுக்கு பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு. தகுதி சுற்றில் மிக சிறப்பாக ஆடி இந்தியாவின் நீரஜ் சோப்ரா பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார். நீரஜ் சோப்ரா உலகின் 16வது ரேங்க் கொண்ட வீரர். ஈட்டி எறிதல் போட்டிகளில் பல்வேறு தனிப்பட்ட சாதனைகளை படைத்து இருக்கிறார். இன்று 86.65 மீட்டர் ஈட்டி எறிந்து இவர் எளிதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்

Aug 04, 2021, 8:20 am IST
Mykhel

ஒலிம்பிக் 2020: ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதி. 86.65மீ தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்

Aug 04, 2021, 8:19 am IST
Mykhel

ஒலிம்பிக் ஈட்டி எறிதல்: இந்தியாவின் ஷிவ்பால் சிங் தோல்வி. தகுதி போட்டியில் தோல்வி அடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்

Aug 04, 2021, 7:38 am IST

இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் ஆட இருக்கும் போட்டிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Aug 04, 2021, 7:38 am IST

கோல்ப் : பெண்கள் கோல்ப் ஆட்டம் – முதல் சுற்று 1- அதிதீ அசோக், காலை 5:55 AM

Aug 04, 2021, 7:38 am IST

தடகளம் : ஆண்கள் ஈட்டி எறிதல் - குரூப் ஏ தகுதி சுற்று- நீரஜ் சோப்ரா , காலை 5:35 AM (IST)

Aug 04, 2021, 7:38 am IST

தடகளம் : ஆண்கள் ஈட்டி எறிதல்- குரூப் பி தகுதி சுற்று- சிவ்பால் சிங், காலை 07: 05 AM (IST)

Aug 04, 2021, 7:38 am IST

மல்யுத்தம்: ஆண்கள் 57 kg பிரிவு- 1/8 பைனல் - ரவிக்குமார் தஹியா பிற்பகல் 02:45 PM

Aug 04, 2021, 7:37 am IST

மல்யுத்தம்: பெண்கள் 57kg பிரிவு- 1/8 பைனல் - அன்ஷு மாலிக் பிற்பகல் 02:45 PM

Aug 04, 2021, 7:37 am IST

மல்யுத்தம்: ஆண்கள் 86kg பிரிவு- 1/8 பைனல் - தீபக் புனியா, பிற்பகல் 02:45 PM

Aug 04, 2021, 7:36 am IST

பாக்சிங்: பெண்கள் 69kg செமி பைனல்- லோவலினா போர்ஹாஹைன் vs புஸேனஸ் சுர்மனேலி (துருக்கி), காலை 11:00 AM

Aug 04, 2021, 7:36 am IST

ஹாக்கி: பெண்கள் ஹாக்கி செமி பைனல் - இந்திய Vs அர்ஜென்டினா, பிற்பகல் 3:30 PM

Aug 04, 2021, 7:28 am IST

ஒலிம்பிக் 2020: ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதி. 86.65மீ தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்

Aug 03, 2021, 6:09 pm IST

ஆடவர் ஹாக்கி: வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஆடவர் அணி, ஜெர்மணியை எதிர்த்து மோதவுள்ளது.

Aug 03, 2021, 6:08 pm IST

இன்று ஜெர்மணி - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

Aug 03, 2021, 4:46 pm IST

ஆடவர் ஷாட் புட்: இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் 13வது இடத்தை பிடித்து வெளியேறினார்.

Aug 03, 2021, 4:46 pm IST

தகுதிச்சுற்றுப்போட்டியில் 21.20 மீ தூரத்திற்கு எறிந்துவிட்டால் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்று விடுவார். அல்லது தகுதிச்சுற்று போட்டிகளில் டாப் 12 வீரர்களுக்குள் இடம்பிடிக்க வேண்டும்.

Aug 03, 2021, 4:46 pm IST

ஆனால் திஜிந்தர்சிங் பால் 13வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

Aug 03, 2021, 4:04 pm IST

ஆடவர் ஷாட் புட்: இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் முதல் வாய்ப்பில் 19.99மீட்டர் தூரத்திற்கு எறிந்துள்ளார்.

Aug 03, 2021, 4:04 pm IST

இந்த 21.20 மீ தூரத்திற்கு எறிந்துவிட்டால் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு 2தகுதிப்பெற்று விடுவார். அல்லது தகுதிச்சுற்று போட்டிகளில் டாப் 12 வீரர்களுக்குள் இடம்பிடிக்க வேண்டும்.

Aug 03, 2021, 3:30 pm IST

ஆகஸ்ட் 15 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட அனைத்து இந்திய போட்டியாளர்களையும் சிறப்பு விருந்தினர்களாக செங்கோட்டைக்கு அழைக்கிறார்.

Aug 03, 2021, 3:30 pm IST

அப்போது பிரதமர் மோடி அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 03, 2021, 12:40 pm IST

ஆண்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்: நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ம்ஹோல்ம் உலக சாதனை. 45.94 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை. உலகிலேயே 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 46 நொடிக்கும் குறைவாக இலக்கை அடைந்த ஒரே நபர் என்ற சாதனை

Aug 03, 2021, 9:28 am IST

செமி பைனலில் தோல்வி அடைந்ததால் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆட வேண்டும். ஆகஸ்ட் 5ம் தேதி இந்தியா வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆட உள்ளது. ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனியை இதில் இந்தியா எதிர்கொள்ளும். ஆஸி vs ஜெர்மனி இடையிலான செமி பைனல் போட்டி நாளை நடக்க உள்ளது. இதில் தோல்வி அடையும் அணி இந்தியாவை எதிர்கொள்ளும்

Aug 03, 2021, 9:03 am IST

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி செமி பைனல்: பெல்ஜியத்திற்கு எதிராக இந்தியா போராடி தோல்வி. 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது

Aug 03, 2021, 7:33 am IST

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி செமி பைனல்: இந்தியா vs பெல்ஜியம் இடையே ஆட்டம் விறுவிறுப்பு. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணி ஒரு கோல். ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். 8வது நிமிடத்தில் இந்தியாவின் மன்தீப் சிங் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் இந்தியா 2:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை

Aug 03, 2021, 7:11 am IST
Mykhel

ஒலிம்பிக் 2020 ஈட்டி எறிதல்: இந்தியாவின் அன்னு ராணி வெளியேற்றம். தகுதி சுற்றில் 14வது இடம் பிடித்து வெளியேற்றம்

Aug 02, 2021, 6:19 pm IST

பெண்களுக்கான வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் தனது 3வது முயற்சியில் 63.70 மீட்டர் வீசி 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Aug 02, 2021, 6:19 pm IST

முன்பு 9வது இடத்தில் இருந்த கமல்ப்ரீத் கவுர், இப்போது முதல் எட்டு இடங்களுக்குள் வந்துவிட்டார்.

Aug 02, 2021, 1:51 pm IST

50மீ துப்பாக்கி சூடு: இந்திய வீரர்கள் பிரதாப் சிங் மற்றும் சஞ்சீவ் தோல்வி

Aug 02, 2021, 10:06 am IST

ஒலிம்பிக் 2020 ஹாக்கி: இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை. ஆஸி.யை வீழ்த்தி இந்திய மகளிர் அணி முதல்முறையாக செமி பைனலுக்கு தகுதி பெற்றது. 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸி.யை வீழ்த்தி செமி பைனலுக்கு தகுதி பெற்றது

Aug 02, 2021, 9:11 am IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி சிறப்பான ஆட்டம் . 22வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜித் முதல் கோல் அடித்து அசத்தல். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை

Aug 02, 2021, 7:31 am IST

ஒலிம்பிக் பெண்கள் 200m ஓட்டம்: இந்தியாவின் டூட்டி சந்த் தோல்வி அடைந்து வெளியேற்றம். தகுதி சுற்றில் நான்காவது இடம் பிடித்து வெளியேற்றம்

Aug 02, 2021, 7:31 am IST

பெண்கள் 200m ஓட்டம் – தகுதி சுற்று 4 தொடங்கியது. இந்தியா சார்பாக டூட்டி சந்த் கலந்து கொள்கிறார்

Aug 01, 2021, 6:32 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து. இந்தியாவின் பெருமை சிந்து என ட்விட்டரில் புகழாரம்

Aug 01, 2021, 6:04 pm IST

ஆடவர் ஹாக்கி காலிறுதிப்போட்டி: கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2 கோல்களை அடித்து முன்னிலை.

Aug 01, 2021, 5:56 pm IST

மகளிர் பேட்மிண்டன்: வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 21 - 15 என்ற கணக்கில் 2வது செட்டையும் கைப்பற்றினார்.

Aug 01, 2021, 5:30 pm IST

மகளிர் பேட்மிண்டன்: வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 13 - 21 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

Aug 01, 2021, 5:10 pm IST

மகளிர் குத்துச்சண்டை: வெண்கலப்பதக்கத்திற்கான போடிட்யில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சீனாவின் ஹீ பிங் ஜியோ மோதும் போட்டி தொடங்கியது.

Aug 01, 2021, 8:40 am IST

ஒலிம்பிக் குதிரை ஓட்ட போட்டி: கிராஸ் கண்ட்ரி ஆட்டத்தில் இந்திய வீரர் மிர்ஸா 13வது இடம் பிடித்தார்

Aug 01, 2021, 8:07 am IST

ஒலிம்பிக் 2020 தொடரில் சீனா ஆதிக்கம்: தொடர்ந்து முதலிடம்

Aug 01, 2021, 8:06 am IST

21 தங்கம் உட்பட 46 பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகித்து வருகிறது

Aug 01, 2021, 8:06 am IST

அமெரிக்கா 18 தங்கம் உட்பட 50 பதக்கங்களுடன் 2ம் இடம் வகித்து வருகிறது

Aug 01, 2021, 8:06 am IST

இந்தியா ஒரே ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 60வது இடத்திற்கு பின்னடைவு

Aug 01, 2021, 7:35 am IST

ஆண்கள் ஹெவிவெயிட் காலிறுதி பாக்சிங் இன்று காலை நடக்க உள்ளது

Aug 01, 2021, 7:35 am IST

இந்தியாவின் சதிஷ் குமார் vs உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலவ் மோதுகிறார்கள்

Aug 01, 2021, 7:35 am IST

இவர்களுக்கு இடையிலான ஆட்டம் காலை 09:30 மணிக்கு நடக்க உள்ளது

Jul 31, 2021, 6:56 pm IST

இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியிடம், ஐயர்லாந்து அணி 0 -2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், புள்ளிகளின் கணக்குப்படி இந்தியா முன்னேறியது.

Jul 31, 2021, 4:55 pm IST

மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டி: இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி. சீன வீராங்கனை தாய் ட்சூ யிங்-கிற்கு எதிரான போட்டியில் 22 - 18, 21 - 12 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் வெங்கலப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

Jul 31, 2021, 4:25 pm IST

மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டி: முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து பின்னடைவு. சீன வீராங்கனை டாய் ட்சூ யிங் 18 -22 என்ற கணக்கில் வெற்றி

Jul 31, 2021, 4:23 pm IST

மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டி: இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சீன வீராங்கனை டாய் ட்சூ யிங்கிற்கு இடையே முதல் செட் ஆட்டத்தில் பரபரப்பு. 16 - 16 என சமநிலையில் இருப்பதால் யார் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு

Jul 31, 2021, 4:07 pm IST

மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டி: இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சீன வீராங்கனை டாய் ட்சூ யிங்கிற்கு இடையேயான போட்டி தொடங்கியது.

Jul 31, 2021, 4:07 pm IST

மகளிர் குத்துச்சண்டை போட்டி: சினாவின் குயான் லி-க்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி தோல்வி.

Jul 31, 2021, 11:33 am IST

இந்திய ரைஃபிள் ஷூட்டர்ஸ் அஞ்சும் மவுட்கில் மற்றும் தேஜஸ்வினி சவந்த் ஆகியோர் பெண்கள் 3P இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தனர்

Jul 31, 2021, 10:43 am IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா பெண்கள் ஹாக்கி போட்டியில், இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி

Jul 31, 2021, 10:43 am IST

இதன் மூலம், காலிறுதிக்கு முன்னேறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது

Jul 31, 2021, 9:46 am IST

காலிறுதிக்கு முன்னேற, இப்போட்டியில் சிறப்பான புள்ளிகளுடன் இந்தியா வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது

Jul 31, 2021, 9:45 am IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் ஹாக்கி போட்டியில் 2 - 1 என்ற இந்தியா முன்னிலை

Jul 31, 2021, 8:44 am IST

பெண்கள் வட்டு எறிதல் போட்டியில், இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி. 'பி' பிரிவில் பங்கேற்ற கமல்ப்ரீத் தனது இறுதிச் சுற்றில் 64.00m தூரம் வீசி, 2ம் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி

Jul 31, 2021, 7:43 am IST

வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் அட்டானு தாஸ் தோல்வி

Jul 31, 2021, 7:43 am IST

ஜப்பானின் ஃபுருக்காவா 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றார். அட்டானு தாஸின் ஒலிம்பிக் பயணம் முடிவுக்கு வந்தது.

Jul 31, 2021, 7:02 am IST

பெண்கள் வட்டு எறிதலில் (Discuss Throw) இந்தியாவின் சீமா புனியா, குரூப் 'ஏ' பிரிவில் விளையாடி வருகிறார். சீமா புனியா இரண்டாவது சுற்றில் 60.57m வீசி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். குரூப் ஏ பிரிவில், 60 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்திற்கு வீசிய மூன்றாவது வீராங்கனை சீமா புனியா தான். ஏ பிரிவில் மொத்தம் 15 வீராங்கனை பங்குபெற்றுள்ளனர்

Jul 30, 2021, 4:47 pm IST

ஆடவர் ஹாக்கி போட்டி: ஜப்பான் அணிக்கு எதிரான கடை தகுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி 5 -3 என்ற கோல் கணக்கில் வெற்றி.

Jul 30, 2021, 2:58 pm IST

மகளிர் பேட்மிண்டன் காலிறுதி: இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல். காலிறுதிப்போட்டியில் ஜப்பானின் யமகாச்சியை 21- 13, 22 -20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் உறுதியானது.

Jul 30, 2021, 2:34 pm IST

மகளிர் பேட்மிண்டன் காலிறுதி: 2வது சுற்றிலும் 11 - 6 என்ற கணக்கில் இந்தியாவின் பி.வி சிந்து ஆதிக்கம்.

Jul 30, 2021, 2:23 pm IST

மகளிர் பேட்மிண்டன் காலிறுதி: விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானேவை 18 -11 என்ற கணக்கில் வீழ்த்தினார் சிந்து.

Jul 30, 2021, 2:16 pm IST

மகளிர் பேட்மிண்டன் காலிறுதி: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 18 -11 என்ற கணக்கில் முன்னிலை

Jul 30, 2021, 1:59 pm IST

மகளிர் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் ஜப்பானின் அகானே யமகுசி இடையேயான காலிறுதிப்போட்டி தொடங்கியது.

Jul 30, 2021, 12:26 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு. 3 வீரர், வீராங்கனைகள் உட்பட 27 பேருக்கு கொரோனா. ஒலிம்பிக்கில் மொத்த கொரோனா பாதிப்பு 225 ஆக உயர்வு

Jul 30, 2021, 11:52 am IST

ஒலிம்பிக் 2020 வில்வித்தை: தென் கொரியாவின் ஆன் சானிடம் வீழ்ந்த தீபிகா குமாரி. 6-0 புள்ளிகள் கணக்கில் காலிறுதி ஆட்டத்தில் தீபிகா குமாரி தோல்வி அடைந்தார்

Jul 30, 2021, 11:05 am IST

ஒலிம்பிக் 2020 பெண்கள் ஹாக்கி: அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி வெற்றி. 1-0 கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

Jul 30, 2021, 11:05 am IST

ஒலிம்பிக் 2020 பெண்கள் ஹாக்கி: அயர்லாந்துக்கு எதிராக இந்தியா முதல் கோல். இந்திய வீராங்கனை நவ்நீத் 57வது நிமிடத்தில் கோல் அடித்தார்

Jul 30, 2021, 11:05 am IST

ஒலிம்பிக் 2020 பெண்கள் ஹாக்கி: இந்தியா vs அயர்லாந்து ஆட்டம் நடந்து வருகிறது. இரண்டு அணிகளும் இதுவரை கோல் அடிக்க முடியாமல் திணறி வருகிறது

Jul 30, 2021, 9:13 am IST

அரையிறுதி போட்டிக்கு லோவ்லினா தகுதி பெற்றதால் ஒரு பதக்கம் உறுதியானது

Jul 30, 2021, 9:12 am IST

ஒலிம்பிக் பெண்கள் பாக்சிங்: இந்தியாவின் லோவ்லினா காலிறுதி போட்டியில் வெற்றி. சீன தைபே வீராங்கனை சின் தைனை 4:1 என்ற கணக்கில் வீழ்த்தி லோவ்லினா வெற்றி

Jul 30, 2021, 8:45 am IST

ஒலிம்பிக் 2020 பெண்கள் லைட் வெயிட் பாக்சிங்: இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் தோல்வி. தாய்லாந்து வீராங்கனை சுடாபார்னிடம் 5:0 என்ற புள்ளி கணக்கில் தோல்வி

Jul 30, 2021, 8:30 am IST

ஒலிம்பிக் 2020 பெண்கள் ஹாக்கி: இந்தியா vs அயர்லாந்து ஆட்டம் தொடங்குவதில் தாமதம். 1 மணி நேரம் போட்டி தாமதமாக தொடங்குகிறது

Jul 30, 2021, 7:55 am IST

ஒலிம்பிக் தடகளம் 2020: ஆண்கள் தடைதாண்டும் போட்டியில் இந்திய வீரர் தோல்வி. அவினாஷ் முகுந்த் 7வது இடம் பிடித்து தோல்வி. 8:18.12 நிமிடத்தில் இலக்கை அடைந்து அவினாஷ் முகுந்த் தேசிய ரெக்கார்ட் படைத்தார்

Jul 30, 2021, 7:38 am IST
Mykhel

ஒலிம்பிக் பெண்கள் 25மீ பிஸ்டல் பிரிவு: இந்தியாவின் மனு பாகர், ரகி சர்னோபாட் தோல்வி. 11வது இடம் பிடித்து இந்தியாவின் மனு பாகர் தோல்வி. 32வது இடம் பிடித்து ரகி சர்னோபாட் தோல்வி

Jul 30, 2021, 7:04 am IST

ஒலிம்பிக் 2020 பெண்கள் வில்வித்தை: இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி

Jul 29, 2021, 4:54 pm IST

ஆடவர் நீச்சல் போட்டி: 100 மீ பட்டர்ஃப்ளை பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் சாஜன் பிரகாஷ் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை.

Jul 29, 2021, 4:35 pm IST

ஆடவர் நீச்சல் போட்டி: 100 மீ பட்டர்ஃப்ளை பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் சாஜன் பிரகாஷ் போட்டி தூரத்தை 2வது வீராக கடந்தார்.

Jul 29, 2021, 4:35 pm IST

8 குழுக்களாக நடைபெற்ற இந்த போட்டியில் கால நேரத்தை கணக்கீடு செய்து முதல் 16 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

Jul 29, 2021, 4:00 pm IST

மகளிர் குத்துச்சண்டை: காலிறுதிக்கு முந்தைய போட்டியில் தோல்வியை தழுவினார் மேரி கோம். கொலம்பியா வீராங்கனைக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் 3 -2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

Jul 29, 2021, 3:53 pm IST

மகளிர் குத்துச்சண்டை: 2வது சுற்றில் கம்பேக் கொடுத்தார் இந்திய வீராங்கனை மேரி கோம். கொலம்பியா வீராங்கனையை 3 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்

Jul 29, 2021, 3:48 pm IST

மகளிர் குத்துச்சண்டை: கொலம்பியா வீராங்கனைக்கு எதிரான முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 1 - 4 என்ற கணக்கில் தோல்வி.

Jul 29, 2021, 3:15 pm IST

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிறிய நாடு என்ற சாதனையை சான் மரினோ தேசம் படைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் பெண்கள் பிரிவில் சான் மரினோ வெண்கலம் வென்றது. சான் மரினோ நாட்டின் அலஸ்சாண்ரா பெரில்லி வெண்கலப்பதக்கம் வென்றார். சான் மாரினோவின் மொத்த மக்கள் தொகை வெறும் 33,860 தான்

Jul 29, 2021, 11:59 am IST

ஒலிம்பிக் பாய்மரப் படகுப்: கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் 6வது ரேஸை 7வது இடத்தில் முடித்தனர். நேற்று 19வது இடத்தில் இருந்த நிலையில் இன்று முன்னேற்றம்

Jul 29, 2021, 9:00 am IST

ஆண்கள் பாக்சிங் +91 கிலோ பிரிவு: இந்தியாவின் சதிஷ் குமார் வெற்றி. ஜமைக்காவின் ரிக்கார்டோவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி

Jul 29, 2021, 9:00 am IST

முதல் இரண்டு சுற்றுகளையும் கைப்பற்றி சதிஷ் குமார் அசத்தல்

Jul 29, 2021, 9:00 am IST

ஆண்கள் பாக்சிங் +91 கிலோ: இந்தியாவின் சதிஷ் குமார் ஜமைக்காவின் ரிக்கார்டோ இடையில் விறுவிறுப்பான ஆட்டம்

Jul 29, 2021, 8:30 am IST

ஒலிம்பிக் வில்வித்தை போட்டி: தூள் கிளப்பும் அட்டானு தாஸ். 6-5 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீரர் ஜென்க் ஓவை வீழ்த்தி வெற்றி

Jul 29, 2021, 8:20 am IST
Mykhel

ஒலிம்பிக் துடுப்பு படகு: ஆண்கள் இரட்டையர் பிரிவில் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் 11வது இடம்

Jul 29, 2021, 7:53 am IST

ஒலிம்பிக் வில்வித்தை போட்டி: அட்டானு தாஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம். 6-4 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே வீரர் டெங்கை வீழ்த்தி வெற்றி

Jul 29, 2021, 7:39 am IST
Mykhel

ஒலிம்பிக் 2020 ஹாக்கி போட்டி: ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெற்றி. அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி

Jul 29, 2021, 7:14 am IST

ஒலிம்பிக் பேட்மிண்டன்: டென்மார்க்கின் மியாவை வீழ்த்தி பிவி சிந்து வெற்றி. 21- 15, 21- 13 என்ற நேர் செட்களில் பிவி சிந்து வெற்றி

Jul 29, 2021, 7:09 am IST

ஒலிம்பிக்: அர்ஜென்டினாவிற்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்தியா முதல் கோல். இந்தியாவின் குமார் வருண் முதல் கோல்

Jul 28, 2021, 3:33 pm IST

மகளிர் வில்வித்தை: 1/16 பிரிவு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெனிஃபர் முனிகோவை 6 - 4 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார் இந்தியாவின் தீபிகா குமாரி.

Jul 28, 2021, 3:33 pm IST

ஆண்கள் பேட்மிண்டன்: க்ரூப் டி பிரிவு போட்டியில் நெதர்லாந்து வீரர் மார்க்கை எதிர்த்து விளையாடிய இந்திய வீரர் சாய் பிரணீத் தோல்வி. 14 - 21, 14 - 21 என்ற கணக்கில் தனது 2வது தோல்வியை பெற்றார்.

Jul 28, 2021, 3:11 pm IST

மகளிர் குத்துச்சண்டை: 69கிலோ பிரிவில் அல்ஜீரிய நாட்டி இச்ராக் என்ற வீராங்கனையை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வீராங்கனை 5 - 0 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி. காலிறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

Jul 28, 2021, 3:00 pm IST

ஆண்கள் பேட்மிண்டன்: க்ரூப் டி பிரிவு போட்டியில் நெதர்லாந்து வீரர் மார்க்கை எதிர்த்து விளையாடிய இந்திய வீரர் சாய் பிரணீத் முதல் சுற்றில் 14 - 21 என்ற கணக்கில் தோல்வி.

Jul 28, 2021, 2:54 pm IST

மகளிர் குத்துச்சண்டை: 69கிலோ பிரிவில் அல்ஜீரிய நாட்டி இச்ராக் என்ற வீராங்கனையை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வீராங்கனை பூஜா ராணி முதல் சுற்றில் 5 - 0 என்ற கணக்கில் வெற்றி.

Jul 28, 2021, 2:44 pm IST

மகளிர் வில்வித்தை: 1/32 பிரிவு ஆட்டத்தில் பூடான் வீராங்கனை கர்மாவை 6 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார் இந்தியாவின் தீபிகா குமாரி. அடுத்த சுற்று இன்று பிற்பகல் 2.53க்கு தொடங்குகிறது.

Jul 28, 2021, 2:43 pm IST

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி. சாய் பிரனீத், டச் நாட்டின் மார்க் கல்ஜாவ் மோதும் ஆட்டம் தொடங்கியது.

Jul 28, 2021, 12:01 pm IST

200மீ நீச்சல்: ஹங்கேரி வீரர் கிறிஸ்டோப் மாலிக் புதிய ஒலிம்பிக் ரெக்கார்ட் 1 நிமிடம் 51.25 நொடிகளில் 200 மீ நீச்சல் இலக்கை அடைந்து கிறிஸ்டோப் மாலிக் சாதனை

Jul 28, 2021, 8:43 am IST

ஆண்கள் வில்வித்தை 1/16 பிரிவு ஆட்டத்தில் இந்திய வீர்ர் தருண்தீப் ராய் தோல்வி 1/32 பிரிவு ஆட்டத்தில் இந்திய வீர்ர் தருண்தீப் ராய் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த சுற்றில் தோல்வி இஸ்ரேலின் ஷன்னி இட்டாயிடம் தருண்தீப் ராய் 6-5 என்ற புள்ளி கணக்கில் தோல்வி

Jul 28, 2021, 8:29 am IST

ஒலிம்பிக்ஸ் பெண்கள் பேட்மிண்டன்: ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிவி சிந்து வெற்றி ஹாங்காங்கின் சியான் நாங் இயை 21-9, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வென்று பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Jul 28, 2021, 7:51 am IST

ஒலிம்பிக் 2020: இந்தியாவிற்கு எதிரான ஹாக்கி போட்டியில் கிரேட் பிரிட்டன் தொடர்ந்து ஆதிக்கம் கிரேட் பிரிட்டன் அணி 3 கோல் அடித்து 3-1என்று முன்னிலை

Jul 28, 2021, 7:20 am IST

ஒலிம்பிக் 2020: இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் விறுவிறுப்பு கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக இந்தியா முதல் கோலை அடித்தது இந்தியா 1, கிரேட் பிரிட்டன் 2 கோல்களை அடித்துள்ளது

Jul 28, 2021, 7:03 am IST

ஒலிம்பிக் 2020: இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி நடந்து வருகிறது கிரேட் பிரிட்டன் அணி ஒரு கோல் அடித்து 1-0 என்று முன்னிலை

Jul 27, 2021, 12:33 pm IST

ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாக்கா தோல்வி. மகளிர் ஒற்றையர் பிரிவி ஆட்டத்தில் செக் குடியரசின் மார்கெட்டாவிடம் ஒசாக்கா தோல்வி. 6-1, 6-4 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து நயோமி வெளியேற்றம்

Jul 27, 2021, 12:03 pm IST

ஒலிம்பிக் பாக்சிங்: இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி. ஜெர்மனி வீராங்கனை நதின் அபேட்ஸை வீழ்த்தி லோவ்லினா 3-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி

Jul 27, 2021, 10:47 am IST

10 மீ ஏர் ரைபிள் கலப்பு ஆட்டம்: திவ்யனேஷ் - இளவேனில் ஜோடி தோல்வி. 626.5 புள்ளிகள் எடுத்து 12வது இடம் பிடித்து தோல்வி அடைந்தனர். 10 மீ ஏர் ரைபிள் கலப்பு ஆட்டம்: தீபக் குமார் - அஞ்சும் ஜோடி தோல்வி. 623.8 புள்ளிகள் எடுத்து 18வது இடம் பிடித்து தோல்வி அடைந்தனர்

Jul 27, 2021, 10:30 am IST

ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி வெற்றி. இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி 2-0 புள்ளி கணக்கில் வெற்றி. பிரிட்டனின் பென் லேன் - சேன் விண்டி ஜோடி இந்திய இணையிடம் தோல்வி

Jul 27, 2021, 9:36 am IST

பெண்கள் 100 மீ நீச்சல் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை கைலீ மெக்கியான் புதிய ஒலிம்பிக் சாதனை. 57.47 நொடியில் 100 மீ நீச்சல் போட்டியில் வென்று கைலீ மெக்கியான் சாதனை

Jul 27, 2021, 9:01 am IST

ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு. ஒலிம்பிக் கிராமத்தில் இதுவரை 155 பேருக்கு கொரோனா பாதிப்பு

Jul 27, 2021, 8:15 am IST
Mykhel

ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி. இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ருபிண்டர் சிங் இரண்டு கோல் போட்டு அசத்தினார்

Jul 27, 2021, 8:05 am IST

ஒலிம்பிக் ஹாக்கி: ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 3வது கோல். ருபிண்டர் சிங் இந்தியாவிற்கான 3வது கோலை அடித்தார்

Jul 27, 2021, 7:07 am IST
Mykhel

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி தோல்வி. முதல் சுற்றில் வென்ற நிலையில் இரண்டாவது சுற்றில் தோல்வி

Jul 27, 2021, 7:02 am IST
Mykhel

ஒலிம்பிக் ஹாக்கி: ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 2வது கோல். ருபிண்டர் சிங் இந்தியாவிற்கான இரண்டாவது கோலை அடித்தார்

Jul 27, 2021, 7:00 am IST

ஒலிம்பிக் ஹாக்கி: ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா முதல் கோல். சிம்ரான்ஜீத் சிங் பெனால்டி கோல் அடித்து ஆட்டத்தை மாற்றினார். இந்தியா 1, ஸ்பெயின் 0 என்று ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது

Jul 26, 2021, 7:18 pm IST

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: 2வது சுற்றுப்போட்டியில் ஜெர்மணியிடம் 0 - 2 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி தோல்வி

Jul 26, 2021, 6:57 pm IST

மகளிர் ஹாக்கி போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய அணிக்கு பின்னடைவு. 0 - 2 என்ற கணக்கில் ஜெர்மணி முன்னிலை.

Jul 26, 2021, 6:05 pm IST

மகளிர் ஹாக்கி போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய அணிக்கு பின்னடைவு. முதல் கோலை அடித்து ஜெர்மணி 0 - 1 என்ற கணக்கில் முன்னிலை.

Jul 26, 2021, 5:53 pm IST

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: 2வது சுற்றுப்போட்டியில் இந்தியா - ஜெர்மணி அணிகள் மோதி வருகின்றன.

Jul 26, 2021, 5:39 pm IST

ஒலிம்பிக் பதக்கத்துடன் நாடு திரும்பிய மீராபாய் சானுவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Jul 26, 2021, 5:38 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீரா பாய் நாடு திரும்பினார்.

Jul 26, 2021, 4:06 pm IST

ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் 400மீ பட்டர்ஃபளை பிரிவில் பங்குபெற்ற இந்திய வீரர் சாஜன் பிரகாஷ், போட்டி தூரத்தை 4வது வீராக கடந்தார். 5 குழுக்களாக போட்டி நடைபெறுவதால், முதல் 16 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

Jul 26, 2021, 3:29 pm IST

ஆண்கள் குத்துச்சண்டை: 69 கி எடை பிரிவில் கலந்துக்கொண்ட இந்தியாவின் அஷிஷ் குமார் 0 -5 என்ற கணக்கில் சீன வீரரிடம் தோல்வியை தழுவினார்.

Jul 26, 2021, 1:48 pm IST

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஸீஹுய் ஹோ-க்கு ஊக்கமருந்து பரிசோதனை. ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானால் இந்தியாவின் மீரா பாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு.

Jul 26, 2021, 1:44 pm IST

மகளிருக்கான டேபிள் டென்னிஸ்: 3வது சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 8 -11, 2 -11, 5 -11, 7 - 11) என்ற நேர்செட் கணக்கில் தோல்வி. ஆஸ்திரியாவின் சொஃபியா பால்கானோவா வெற்றி.

Jul 26, 2021, 1:35 pm IST

மகளிருக்கான டேபிள் டென்னிஸ்: 3வது சுற்று போட்டியில் தொடர்ச்சியாக 3 செட்களை இழந்து இந்திய வீராங்கனை மணிகா பத்ரா பின்னடைவு. ஆஸ்திரிய வீராங்கனை சோஃபியா முன்னிலை.

Jul 26, 2021, 12:22 pm IST

ஒலிம்பிக் 2020: ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸில் இந்திய வீரர் சுமித் நகல் தோல்வி. ரஷ்யா ஒலிம்பிக் கமிட்டி வீரர் டேனில் மெட்விதேவிடம் சுமித் தோல்வி

Jul 26, 2021, 12:04 pm IST

ஒலிம்பிக் 2020: வில்வித்தை ஆண்கள் குழு காலிறுதி போட்டியில் இந்தியா தோல்வி. தென் கொரியாவிடம் இந்தியாவின் அட்டானு தாஸ், பிரவீன், தருண்தீப் ராய் குழு தோல்வி

Jul 26, 2021, 12:03 pm IST

ஒலிம்பிக் 2020: மை ராஜ் மற்றும் அங்கத் இருவரும் ஸ்கீட் ஷூட்டிங் போட்டியில் தோல்வி. இரண்டு இந்திய வீரர்களும் ஒலிம்பிக் ஸ்கீட் ஷூட்டிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை

Jul 26, 2021, 10:37 am IST

ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன்: இந்திய ஜோடி தோல்வி. இந்தோனேசியாவிடம் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி

Jul 26, 2021, 9:54 am IST

ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

Jul 26, 2021, 9:53 am IST

ஒலிம்பிக் கிராமத்தில் இதுவரை 148 பேருக்கு கொரோனா பாதிப்பு

Jul 26, 2021, 9:53 am IST

துடுப்பு படகு போட்டியில் கலந்து கொண்ட டச் வீரர்கள் உட்பட பலருக்கு கொரோனா

Jul 26, 2021, 9:13 am IST

ஒலிம்பிக் பெண்கள் பிரிவு டேபிள் டென்னிஸ்: சுதிர்தா முகர்ஜி தோல்வி. போர்ச்சுகல் வீராங்கனை ப்யு யூவிடம் தோல்வி அடைந்து சுதிர்தா முகர்ஜி வெளியேற்றம்

Jul 26, 2021, 8:50 am IST

2020 ஒலிம்பிக் தொடரின் முதல் தங்கத்தை இன்று கிரேட் பிரிட்டன் அணி வென்றது. நீச்சல் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆடம் பேட்டி வெற்றி பெற்று தங்கம் வென்றார்

Jul 26, 2021, 8:00 am IST

ஒலிம்பிக் 2020: வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெளியேற்றம். முதல் போட்டியில் வென்ற பவானி இரண்டாவது போட்டியில் தோல்வி. பிரான்சின் மனோன் ப்ருநட்டிடம் 7-15 என்ற புள்ளிகள் கணக்கில் பவானி தேவி தோல்வி

Jul 26, 2021, 7:30 am IST

ஒலிம்பிக் 2020 டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர் ஷரத் அஜந்தா வெற்றி. போர்ச்சுகலின் டியாகோ அப்போலீனாவை வீழ்த்தி ஷரத் அஜந்தா வெற்றி

Jul 26, 2021, 7:09 am IST
Mykhel

ஒலிம்பிக் 2020: வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் குழு அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம். அட்டானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் குழு அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம். கஜகஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய வில்வித்தை ஆண்கள் படை

Jul 26, 2021, 6:46 am IST
Mykhel

ஒலிம்பிக் 2020: வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி கலக்கல். துனிஷியா வீராங்கனை நதியா பென் அசிசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Jul 25, 2021, 5:42 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்: ஆண்கள் நீச்சல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீ ஹரி நடராஜ் ஏமாற்றம். 100மீ பேக் ஸ்ட்ரோக் பிரிவில் 27வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

Jul 25, 2021, 4:49 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்: ஹாக்கி 2வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி தோல்வி. 1 - 7 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

Jul 25, 2021, 4:18 pm IST

ஒலிம்பிக் தொடரில் ஹாக்கி 2வது தகுதிச்சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய அணி 1 -6 என்ற கணக்கில் ஆதிக்கம். இந்திய அணி ஏமாற்றம்.

Jul 25, 2021, 4:11 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் நீச்சல் போட்டியில் இந்தியாவின் மானா பட்டேல் ஏமாற்றம். 100மீ பேக் ஸ்ட்ரோக் பிரிவில் 39வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

Jul 25, 2021, 4:00 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்: ஹாக்கி 2வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி பின்னடைவு. 1 - 4 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை.

Jul 25, 2021, 3:30 pm IST

இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி 2வது தகுதிச்சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா முதல் கோல் அடித்தது. 1 -0 என்ற கணக்கில் முன்னிலை.

Jul 25, 2021, 3:14 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஹாக்கி 2வது தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்கியது.

Jul 25, 2021, 3:12 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஹாக்கி 2வது தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்கியது.

Jul 25, 2021, 2:53 pm IST

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் 2வது சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை மணி பத்ரா அபார வெற்றி.

Jul 25, 2021, 1:10 pm IST

பாய்மரப் படகுப் போட்டியில் கலக்கிய தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணன் முதல் ரேஸில் 33வது இடம் வந்த நேத்ரா இரண்டாவது ரேஸில் 16வது இடத்திற்கு முன்னேற்றம்

Jul 25, 2021, 11:46 am IST

டேபிள் டென்னிஸ்: தமிழ்நாடு வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வி ஹாங்காங் வீரர் லாம் சியூ ஹாங்கிடம் சத்யன் போராடி தோல்வி

Jul 25, 2021, 10:48 am IST

10 மீட்டர் ரைபல் பிரிவில் இந்தியாவில் தீபக் குமாரரும் வெளியேற்றம் 624.7 புள்ளிகள் பெற்ற நிலையில் தீபக் குமார் வெளியேற்றம்

Jul 25, 2021, 10:47 am IST

10 மீட்டர் ரைபல் பிரிவில் இந்தியாவில் திவ்யனேஷ் சிங் பன்வார் வெளியேற்றம்

Jul 25, 2021, 9:49 am IST

ஒலிம்பிக் 2020: பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் இருந்து வெளியேற்றம்

Jul 25, 2021, 9:34 am IST

ஒலிம்பிக் 2020 டென்னிஸ்: சானியா மிர்சா மற்றும் அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வி உக்ரைன் ஜோடியிடம் இந்திய பெண்கள் இரட்டையர் அணி தோல்வி

Jul 25, 2021, 9:26 am IST

ஒலிம்பிக்ஸ் பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு குழு ஆட்டத்தில் பிவி சிந்து வெற்றி இஸ்ரேலின் க்செனியா பொலிகர்போவாவ 21-7, 21-10 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி

Jul 25, 2021, 9:25 am IST

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ப்ரனிதி நாயக் ஒலிம்பிக் தகுதி சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார்

Jul 25, 2021, 9:23 am IST

ஒலிம்பிக் 2021: துடுப்பு படகு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியா சார்பாக அரவிந்த் சிங் மற்றும் அர்ஜுன் லால் செமி பைனலுக்கு தேர்வு

Jul 23, 2021, 5:37 pm IST

21வது அணியாக ஒலிம்பிக் மைதானத்தில் இந்தியா அணிவகுப்பு

Jul 23, 2021, 5:37 pm IST

குத்துசண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் தேசிய கோடியை ஏந்தி அணிவகுப்பு

Jul 23, 2021, 5:36 pm IST

ஒலிம்பிக் 2020 துவக்க விழா: இந்திய வீரர், வீராங்கனைகள் மைதானத்தில் அணிவகுப்பு

Jul 23, 2021, 5:26 pm IST

ஒலிம்பிக் 2020 துவக்க விழா: கொரோனாவால் உலகம் முழுக்க பலியானவர்களுக்கு அஞ்சலி. கொரியாமா என்ற ஜப்பான் கலைஞர் மூலம் பெருந்தொற்று குறித்த நாடகம் காட்சிப்படுத்தப்பட்டது. 150 வருடங்களில் முதல்முறையாக கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒருவருடம் தாமதமாக நடக்கிறது

Jul 23, 2021, 5:09 pm IST

ஒலிம்பிக் 2020 தொடக்க விழா: வானவேடிக்கைகளுடன் மிளிரும் ஒலிம்பிக் கிராமம்

Jul 23, 2021, 5:08 pm IST

ஒலிம்பிக் 2020 மைதானத்திற்கு வெளியே மக்கள் கூடி ஆரவாரம்

Jul 23, 2021, 5:08 pm IST

கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் துவக்க விழாவை காண மக்களுக்கு அனுமதியில்லை

Jul 23, 2021, 4:51 pm IST

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது.. இந்தியாவின் மேரி கோம் - மண்ப்ரீத் சிங் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு

Jul 23, 2021, 4:51 pm IST

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் தேசியக்கொடி ஏந்தி அணி வகுப்பு.

Jul 23, 2021, 11:46 am IST

ஆண்கள் வில்வித்தை ரேங்கிங் சுற்று: 12 சுற்றுகளிலும் இந்திய வீரர்கள் சொதப்பல். 656 புள்ளிகளோடு பிரவீன் ஜாதவ் 31வது இடத்தில் ஆட்டத்தை முடித்தார். அடானு தாஸ் 633 புள்ளிகளுடன் 35வது இடத்தை பிடித்தார். 652 புள்ளிகளோடு தருண்தீப் ராய் 37வது இடத்திலும் உள்ளார். கொரியாவின் கிம் ஜெ டியோக் 688 புள்ளிகளோடு முதலிடம் பிடித்தார்

Jul 23, 2021, 11:01 am IST

ஆண்கள் வில்வித்தை ரேங்கிங் சுற்று: முதல் 6 சுற்றுகளில் இந்திய வீரர்கள் மூவரும் சொதப்பல்

Jul 23, 2021, 11:00 am IST

329 புள்ளிகளோடு பிரவீன் ஜாதவ் 30வது இடத்தில் உள்ளார்

Jul 23, 2021, 11:00 am IST

329 புள்ளிகளோடு பிரவீன் ஜாதவ் 30வது இடத்தில் உள்ளார்

Jul 23, 2021, 11:00 am IST

அடானு தாஸ் 329 புள்ளிகளுடன் 31வது இடத்தில் உள்ளார்

Jul 23, 2021, 11:00 am IST

அடானு தாஸ் 329 புள்ளிகளுடன் 31வது இடத்தில் உள்ளார்

Jul 23, 2021, 11:00 am IST

323 புள்ளிகளோடு தருண்தீப் ராய் 45வது இடத்திலும் உள்ளார்

Jul 23, 2021, 10:05 am IST

ஒலிம்பிக் 2020: வில்வித்தை ஆண்கள் ரேங்கிங் சுற்று பிரிவு போட்டிகள் தொடங்கியது

Jul 23, 2021, 10:05 am IST

இந்தியா சார்பாக அடானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்பு

Jul 23, 2021, 9:39 am IST

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் 2020 போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது

Jul 23, 2021, 9:38 am IST

இன்று துவங்கி உள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 8ம் தேதி வரை நடக்க உள்ளது

Jul 23, 2021, 9:38 am IST

ஒலிம்பிக் 2020 தொடரின் துவக்க விழா இன்று மாலை நடைபெற உள்ளது

Jul 23, 2021, 9:38 am IST

இந்தியா முதல்முறையாக அதிக அளவில் 127 வீரர், வீராங்கனைகளை அனுப்பி உள்ளது

Jul 23, 2021, 9:38 am IST

ஒலிம்பிக் துவக்க விழா இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கும் நடக்க உள்ளது

Jul 23, 2021, 9:38 am IST

இந்தியா சார்பாக இந்த துவக்க விழாவில் 20 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள்.

Jul 23, 2021, 9:37 am IST

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வாங்கிய மேரி கோம், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் இந்திய குழுவின் தேசிய கொடியை இன்று ஏந்தி செல்வார்கள்

Story first published: Sunday, August 8, 2021, 17:16 [IST]
Other articles published on Aug 8, 2021
English summary
Tokyo Olympics (டோக்கியோ ஒலிம்பிக்) LIVE Updates in Tamil: An opening ceremony of the sports event to be held at 4.30 PM IST in Tokyo. 20 Indian players will attend the event.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X