For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் 2020 குத்துசண்டை.. குறையாத வேகம்.. அதே பன்ச்.. முதல் போட்டியிலேயே மேரி கோம் தரமான வெற்றி!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 குத்து சண்டையில் இந்தியாவின் மேரி கோம் டொமினிகாவின் மிக்கேலினாவை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

Recommended Video

Mary Kom beats Miguelina, enters pre quarter finals! Tokyo Olympics 2020 | OneIndia Tamil

ஒலிம்பிக் 2020 தொடரில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். டென்னிஸ், துப்பாக்கி சூடு, பாய்மர படகு போட்டி, துடுப்பு படகு போட்டி, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

மெகா ஏலம்: CSK தக்க வைக்கும் மெகா ஏலம்: CSK தக்க வைக்கும்

இதில் காலையில் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துவும், டேபிள் டென்னிஸ் போட்டியில் மணிகா பத்ராவும் வெற்றிபெற்றனர்.

குத்து சண்டை

குத்து சண்டை

குத்து சண்டையில் இந்தியாவின் மேரி கோம் டொமினிகாவின் மிக்கேலினா இடையிலான மோதல் இன்று நடந்தது. 51 கிலோ எடை பிரிவில் இவர்களுக்கு இடையிலான மோதல் நடைபெற்றது. இரண்டு சுற்றுகள் முடிவில் மேரி கோம் 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்து வந்தார்.

திணறல்

திணறல்

அதன்பின் 3வது சுற்றில் மொத்தமாக மிக்கேலினாவை மேரி கோம் திணற வைத்தார். அந்த சுற்றை மொத்தமாக மேரி கோம் தன்வசப்படுத்தினார். மூன்றாம் சுற்றில் மொத்தமாக 50 புள்ளிகளை எடுத்தார். இந்த சுற்றில் டொமினிகாவின் மிக்கேலினாவை கொஞ்சம் கூட ஆதிக்கம் செலுத்த விடவில்லை.

சுற்று

சுற்று

மூன்று சுற்றுகள் முடிவில் மேரி கோம் 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். மேரி கோம் மொத்தமாக 30-27, 28-29, 29-28, 30-27, 29-28 புள்ளிகள் கணக்கில் டொமினிகாவின் மிக்கேலினாவை வீழ்த்தி வெற்றிபெற்றார். இதனால் 16 பேர் கொண்ட அடுத்த சுற்றுக்கு மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

16 பேர்

16 பேர்

மேரி கோம் வீழ்த்திய டொமினிகாவின் மிக்கேலினா மேரி கோமை விட 15 வயது குறைவானவர். தற்போது அடுத்த 16 பேர் கொண்ட சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அடுத்த போட்டியில் கொலம்பியாவின் விட்ட்டோரியாவுடன் மேரி கோம் மோத உள்ளார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் அவர் காலிறுதிக்கு முன்னேறுவார்.

Story first published: Sunday, July 25, 2021, 16:33 [IST]
Other articles published on Jul 25, 2021
English summary
Olympics 2020: Mary Kom enters pre quarter final after winning against Domonica boxer in 32 round.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X