For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைக்கு எட்டாத வெண்கலம்.. ரெப்சேஜ் வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக்.. என்ன நடந்தது?

டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சோனம் மாலிக் 62 கிலோ எடை பிரிவு ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார். ரெப்சேஜ் முறை மூலம் இவர் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த வாய்ப்பு கிடைக்காமல் வெளியேறி உள்ளார்.

சோனம் மாலிக்கின் வாய்ப்பு பறிபோனதை பற்றி பார்க்கும் முன் ரெப்சேஜ் முறை என்றால் என்ன என்று பார்த்து விடலாம். ரெப்சேஜ் என்பது பிரென்ச் வார்த்தையான repecher என்பதில் இருந்து உருவானது ஆகும். இதன் அர்த்தம் "காப்பாற்றுவது". 2008 ஒலிம்பிக்கில் இருந்தே ரெப்சேஜ் முறை வழக்கத்தில் உள்ளது.

அதுக்கெல்லாம் தற்போது நேரமில்லை.. அரையிறுதி தோல்வி.. மனம் உருகி பேசிய இந்திய ஹாக்கி அணி கேப்டன்! அதுக்கெல்லாம் தற்போது நேரமில்லை.. அரையிறுதி தோல்வி.. மனம் உருகி பேசிய இந்திய ஹாக்கி அணி கேப்டன்!

இந்த முறை மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்று அல்லது காலிறுதி சுற்றுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஆட அனுமதி தரப்படும்..குழப்புகிறதா? மேற்கொண்டு படியுங்கள்!

மல்யுத்தம்

மல்யுத்தம்

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்த ரெப்சேஞ்ச் முறை தீவிரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. A என்ற வீரர் காலிறுதிக்கு முந்தைய சுற்று அல்லது காலிறுதி சுற்றில் B என்ற வீரரிடம் தோல்வி அடைகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவேளை வீரர் B பைனலுக்கு சென்றால், A என்ற வீரருக்கு தானாக வெண்கல பதக்க போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அதாவது நாக் அவுட் சுற்றில் இந்தியா வீரரை அமெரிக்க வீரர் வீழ்த்திவிட்டு அவர் அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று கடைசியில் பைனலுக்கும் சென்றால், இந்திய வீரருக்கு இங்கு வெண்கல பதக்க போட்டியில் ஆட வாய்ப்பு கொடுக்கபடும். பைனலுக்கு சென்ற வீரரோடு மோதி நாக் அவுட் போட்டியில் தோல்வி அடைந்தவர்களுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதே ரெப்சேஜ் முறையாகும்.

காரணம்

காரணம்

நாக் அவுட் போட்டியில் சமமான மோதல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பைனல் செல்லும் வலிமையான வீரர் ஒருவருடன் நாக் அவுட் போட்டியில் ஒருவர் தோல்வி அடைகிறார் என்றால் அவருக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

எப்படி வாங்கினார்?

எப்படி வாங்கினார்?

2008ல் இருந்தே ரெப்சேஜ் முறை மூலம் இந்தியா மல்யுத்தத்தில் நிறைய பதக்கங்களை பெற்றுள்ளது. 2008ல் சுஷில் குமார் உக்ரைன் வீரர் ஆன்ரியிடம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தார். ஆன்ரி இந்த போட்டியில் பைனல் சென்றார். இதனால் சுஷில் குமார் ரெப்சேஜ் சுற்றுக்கு தேர்வாகி அதில் வெண்கலமும் வென்றார். பைனல் சென்ற வீரருடன் நாக் அவுட்டில் மோதியதில் சுஷிலுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

2012 யோகேஷ்வர் தத், 2016 ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் என்று இந்தியா வீரர்கள் பலர் வெண்கலம் வாங்க ரெப்சேஜ் முறையே காரணமாக இருந்தது. இந்த நிலையில் இந்த முறை இந்தியாவின் சோனம் மாலிக்கிற்கு இதே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சோனம் மாலிக் 62 கிலோ எடை பிரிவு ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார். இன்று மங்கோலியாவின் போலார்டுயா குரல்கேவை இந்தியாவின் சோனம் மாலிக் எதிர்கொண்டார்.

தோல்வி

தோல்வி

இந்த ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்றது. இரண்டு வீராங்கனைகளுக்கு இதில் தலா 2 புள்ளிகளை பெற்று இருந்தனர். இதனால் யார் டேக் டவுன் புள்ளி எடுத்து இருக்கிறார் என்று சோதிக்கப்பட்டது. ஆட்டம் டிரா ஆன இந்த ஆட்டத்தில் ஒரு டேக் டவுன் புள்ளிகள் வித்தியாசத்தில் மங்கோலியாவின் போலார்டுயா வென்றார். இந்த நிலையில் மங்கோலியாவின் போலார்டுயா பைனலுக்கு ஒருவேளை தேர்வானால் இந்தியாவின் சோனம் மாலிக் ரெப்சேஜ் முறை மூலம் இவர் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் போலார்டுயா ஆட்டம் அதிகம் கவனிக்கப்பட்டது. ஆனால் காலிறுதி போட்டியில் மங்கோலியாவின் போலார்டுயா தோல்வி அடைந்துள்ளார்.

பல்கேரியா

பல்கேரியா

பல்கேரியாவின் முஸ்தபா என்ற வீராங்கனையிடம் மங்கோலியாவின் போலார்டுயா 10:0 என்ற கணக்கில் மிக மோசமாக தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார். போலார்டுயா பைனல் செல்லாத காரணத்தால் சோனம் மாலிக் ரெப்சேஜ் வாய்ப்பு பறிபோனது. எப்போதும் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு உதவும் ரெப்சேஞ்ச் முறை இந்த முறை கைகொடுக்காமல் போய்விட்டது.

Story first published: Tuesday, August 3, 2021, 19:17 [IST]
Other articles published on Aug 3, 2021
English summary
Olympics 2020: India wrestler Sonam Malik lost her repechage chance as Mongolian Bolortuya loses in quarterfinals games and not selected to finals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X