For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சத்தமின்றி நிறைவு பெற்ற ஒலிம்பிக் தீப ஓட்டம்.. தீபத்தை ஏற்றிய ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாக்கா

டோக்கியோ: பாரம்பரியமாக நடக்கும் ஒலிம்பிக் தீப ஓட்டம் இன்று மதியம் நிறைவு பெற்றது. பொதுவாக துவக்க விழாவின் போதுதான் இந்த ஓட்டம் நிறைவு பெறும் என்றாலும் இந்த முறை துவக்க விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே டோக்கியோவில் நிறைவு பெற்றது.

ஒலிம்பிக் ஓட்டம் நிறைவு பெற்ற நிலையில் ஜப்பான் டென்னிஸ் வீரர் நயோமி ஒசாக்கா தீபத்தை ஏற்றினார். ஒலிம்பிக் தீபம் இன்று துவக்க விழாவின் போது ஒலிம்பிக் கிராமத்தில் ஏற்றப்படும். பல்வேறு நபர்களிடம் மாறி மாறி வரும் இந்த தீபம் கடைசியில் ஒலிம்பிக் கிராமத்தில் நயோமியிடம் அளிக்கப்பட்டது.

ஒரே போட்டியில் 5 அறிமுக வீரர்கள்.. மிகப்பெரும் ரிஸ்க் எடுத்த டிராவிட்.. சவாலை எதிர்கொள்ளுமா இலங்கை! ஒரே போட்டியில் 5 அறிமுக வீரர்கள்.. மிகப்பெரும் ரிஸ்க் எடுத்த டிராவிட்.. சவாலை எதிர்கொள்ளுமா இலங்கை!

பொதுவாக தீபத்தை ஏற்றுபவர் குறித்த அடையாளம் கடைசி நிமிடம் வரை ரகசியம் காக்கப்படும் என்பதால் யாருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. கடைசியில் 23 வயது ஆன கறுப்பின டென்னிஸ் வீராங்கனையிடம் கொடுத்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஜப்பான்

ஜப்பான்

டோக்கியாவிற்கு இன்று பிற்பகலில் வந்த இந்த தீபம் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்... பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் இந்த தீப ஓட்டம் தொடங்கும். ஆனால் இந்த முறை கடந்த வருடமே தீப ஓட்டம் தொடங்கிவிட்டது. கிரீஸில் ஒலிம்பிக் ஓட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கியது. மக்கள் கூட்டம் இன்றி எளிமையாக விழா தொடங்கியது.

விழா

விழா

அதன்பின் பாதி ஓட்டத்திலேயே ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக இந்த தீபம் மார்ச் 20ம் தேதி ஜப்பான் வந்தது. இதையடுத்து ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் மியூசியத்தில் இந்த தீபம் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. லாக்டவுன் இல்லாத சமயத்தில் மக்கள் இந்த தீபத்தை பார்க்கவும் அனுமதிக்கப்பட்டது.

அனுமதி

அனுமதி

கடந்த மார்ச் 26ம் தேதி டோக்கியோவில் மீண்டும் தொடங்கிய ஒலிம்பிக் ஓட்டம் மிகவும் அமைதியாக ஜப்பானில் கடந்த 112 நாட்களாக நடந்தது. ஜப்பானின் 2011 உலகக் கோப்பை கால்ப்பந்து பெண்கள் அணி மூலம் இந்த ஓட்டம் புகுசிமாவில் தொடங்கப்பட்டது. அதன்பின் வரிசையாக 47 மண்டலங்கள் வழியாக இந்த தீபம் கடந்து வந்தது. அதோடு இந்த தீப் ஓட்டம் சில இடங்களில் ரத்தும் செய்யப்பட்டது.

ரத்து

ரத்து

கொரோனா, லாக்டவுன் காரணமாக அவ்வப்போது இந்த ஒலிம்பிக் ஓட்டத்தில் சில தடைகள் ஏற்பட்டது. பெரும்பாலும் மக்கள் வசிக்காத இடங்கள் வழியாக, கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த ஒலிம்பிக் ஓட்டம் மிகவும் அமைதியாக ஆரவாரமின்றி நடைபெற்றது. சத்தமே இன்றி இந்த ஒலிம்பிக் தீபம் இன்று டோக்கியோ வந்து சேர்ந்தது.

டோக்கியோ

டோக்கியோ

டோக்கியோ கவர்னர் யுரிகோ கொய்கே இன்று ஒலிம்பிக் தீபத்தை வரவேற்று சிறிய நிகழ்ச்சியில் உரையாற்றினார். இதன்பின் இந்த தீபம் ஒலிம்பிக் துவக்க விழா நடக்கும் தேசிய மைதானம் நோக்கி சென்றது. இந்த ஒலிம்பிக் தீபம் மொத்தம் 10 ஆயிரம் பேரின் கைமாறி, பல கிலோ மீட்டர் பயணித்து ஜப்பான் தேசிய மைதானத்திற்கு வந்தடைந்துள்ளது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

கொரோனா கட்டுப்பாடு காரணமாக இன்றுர் ஒலிம்பிக் துவக்க விழாவை காண மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த 1928 ஒலிம்பிக்கில் இருந்தே இந்த தீபம் ஏற்றும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. கிரேக் பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. முறையாக ஒலிம்பிக் ஓட்டம், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் போன்ற நிகழ்வு 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நடந்து வருகிறது.

ஜப்பான்

ஜப்பான்

இந்த ஜப்பான் ஒலிம்பிக் தீபம் ஐந்து இதழ்கள் இணைந்தது போன்ற தோற்றம் கொண்டது. முழுக்க முழுக்க அலுமினியம் மற்றும் ஜப்பான் சுனாமியின் கட்டப்பட்ட தற்காலிக வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட சில மறுசுழற்சி சாதனங்களை பயன்படுத்தி இந்த டார்ச் உருவாக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, July 23, 2021, 22:24 [IST]
Other articles published on Jul 23, 2021
English summary
Olympics 2020: Torch touches down the National Stadium of the Tokyo village hours before the ceremony.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X